ரூ 44000 சம்பளத்துடன் ICAR வேலை வாய்ப்பு: பட்டதாரிகள் விண்ணப்பிக்கவும்
டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் தலைமையகத்தில் உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது
புதுடெல்லி: இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் (ICAR) காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் (ICAR) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் தலைமையகத்தில் உதவியாளர் பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்கிறது
44000 ரூபாய் சம்பளத்துடன் டெல்லியின் தலைமையகத்தில் ICAR வேலை வாய்ப்பைப் பெற சில விதிமுறைகள் உள்ளன. இந்த பணிக்கான அடிப்படைத் தகுதிகள், பணியிடம் எங்கே, எத்தனை காலியிடங்கள் இருக்கின்றன என இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து விவரங்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | ஆயுர்வேத மருத்துவர்களுக்கான மத்திய அரசு பணி வாய்ப்பு
அடிப்படைத் தகுதிகள்:
வயது வரம்பு : 20 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின் படி வயதுத் தளர்வு உண்டு
கல்வித்தகுதி : பட்டப் படிப்பு
மொத்த பணியிடங்கள்: 462
உதவியாளர் (ICAR HQRS இல்) – 71
உதவியாளர் (ICAR HQRS இல்) – 391
சம்பளம் :
உதவியாளர் (ICAR தலைமையகம்) – 44,900/- + படிகள்
உதவியாளர் (in ICAR தலைமையகம்) – 35400/- + படிகள்
தேர்வு முறை: எழுத்துத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
மேலும் படிக்க | கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் SFIO வங்கி உதவி இயக்குநர் வேலைவாய்ப்பு
முக்கிய நாட்கள்
ஆன்லைன் பதிவுக்கான தொடக்க தேதி - விண்ணப்பம் 07/05/2022 (காலை 10 மணி)
டெபிட்/கிரெடிட் கார்டு/நெட் பேங்கிங்/ மூலம் கட்டணத்துடன் ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசி தேதி 01/06/2022 இரவு 11.55 மணி வரை
சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தில் திருத்தங்கள்/திருத்தங்களுக்கான திருத்தச் சாளரத்தைத் திறக்கும் தேதி - 05/06/2022 (காலை 10 மணி வரை)
சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தில் உள்ள திருத்தங்கள்/திருத்தங்களுக்கான திருத்தச் சாளரத்திற்கான இறுதித் தேதி - 07/06/2022 இரவு 11.55 மணி வரை
ஆன்-லைன் விண்ணப்பத்தை நிரப்புவது தொடர்பான தொழில்நுட்ப சந்தேகங்கள்/ தெளிவுபடுத்தல்கள், விண்ணப்ப போர்ட்டலில் உள்ள குறைகளை தொடர்பாக விண்ணப்பதாரர்கள் டோல் எண்: +91 9513632711 என்ற எண்ணிலும் அழைக்கலாம்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கும் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | எல்.ஐ.சியில் வேலை வேண்டுமா: உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR