அமெரிக்கா மண்ணில் சாதனை படைத்து வரும் இந்திய மாடல் அழகி!
இந்தியாவை சேர்ந்த மாடல் அழகி மிர்ஷா படேல் அமெரிக்க ரசிகர்களை மீண்டும் தன்வசம் ஈர்த்துள்ளார்!
இந்தியாவை சேர்ந்த மாடல் அழகி மிர்ஷா படேல் அமெரிக்க ரசிகர்களை மீண்டும் தன்வசம் ஈர்த்துள்ளார்!
மனித வாழ்க்கினை ஆட்டிப்படைக்கும் விதமாக சமூக ஊடகங்கள் தற்காலத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த சமூக ஊடகங்கள் மூலம் ஒரு சாதாரன நபரும் ஒரே நாளில் புகழின் உச்சிக்கு சென்றுவிடலாம் என்பதை சமீபத்திய பல நிகழ்வுகள் நிறுபித்து வருகின்றன. (ஓவர் நைட்டில் உலக புகழ் பெற்ற புருவப்புயல் பிரியா பிரகாஷ் வாரியர் உள்பட....)
அந்த வகையில் தற்போது இந்திய வம்சாவழியை சேர்ந்த மாடல் அழகி (ம) ஒப்பனை கலைஞர் மிர்ஷா படேல் அமெரிக்க மண்ணில் தனது கால்தடத்தினை பதிவு செய்துள்ளார்.
உலகளவில் பிரபலமாக உள்ள பல முன்னணி தயாரிப்புகளுக்கு மாடலாக போஸ் கொடுத்துள்ள இவர் சமீபத்தில் Miss Jetset Magazine Cover Model போட்டியில் பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
குஜராம் மாநிலத்தை சேர்ந்த இவர் படிப்பிற்கான வடக்கு கலிப்போர்னியாவில் குடியேறினார். ஆரம்பத்தில் செவிலியர் படிப்பினை Wake Tech Community College-ல் துவங்கிய இவர் பின்னர் மாடலிங் தான் தனது துறை என கம்பீரமான முடிவு எடுத்தார்.
இந்திய குடும்பத்தை சேர்ந்த இளம்பெண்கள் சந்திக்கும் அனைத்து தடைகளையும் மீறி தான் இவர் மாடலிங் துறையில் காலடி எடுத்துவைத்துள்ளார். இந்த குடும்பவிதி மீறலுக்கு பலனாய் தற்போது இவரது பெயர் பல பேஸன் மேகசின்களில் இடம்பிடித்து வருகிறது.
தொடர்ச்சியாக தனது வேலைப்பாடுகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வரும் இவருக்கு தற்போது 59.5k பின்தொடர்பாளர்கள் உள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா...