அசத்தும் இந்திய ரயில்வே; வாட்ஸ்அப்பில் PNR, ரயிலின் நிலை அறிந்து கொள்ளும் வசதி!
ரயில் பயணிகள், இனிமேல் தங்கள் PNR நிலை, நிகழ்நேர ரயில் பயண விவரங்களை வாட்ஸ்அப்பில் சரிபார்க்க இயலும்.
பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் வகையில் இந்திய ரயில்வே புதிய வசதியை உருவாக்கியுள்ளது. இப்போது, பயணிகள் வாட்ஸ்அப்பில், தங்கள் PNR நிலையை சரிபார்ப்பதோடு, நிகழ்நேர ரயில் அட்டவணை குறித்த தகவலைப் பார்க்கலாம். 'Chatbot' எனப்படும் புதிய அம்சம், பயணிகள் PNR நிலை மற்றும் நிகழ்நேர ரயில் அட்டவணை விவரங்களை வாட்ஸ்அப்பில் சரிபார்க்க அனுமதிக்கிறது. மும்பையைச் சேர்ந்த Railofi என்ற ஸ்டார்ட்அப் மூலம் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
IRCTC வாடிக்கையாளர்கள் தங்கள் பயணத்தை விரைவாகவும் எளிதாகவும் கண்காணிக்க Chatbot உதவுகிறது. மேலும் தற்போதைய ரயில் நிலையைக் கண்காணிக்க பல செயலிகளை பதிவிறக்க வேண்டிய தேவையும் இனி இருக்காது. PNR நிலை, ரயில் நிலை, ரயில் நிலையத்தை கடந்த மற்றும் வந்திறங்கும் நிலையங்கள் மற்றும் பிற ரயில் பயண விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இந்திய ரயில்வேயின் பயணிகளுக்கு WhatsApp chatbot மூலம் கிடைக்கும். வாட்ஸ்அப்பில் PNR மற்றும் ரயில் எங்கிருக்கிறது, எப்போது வந்து சேரும், எப்போது புறப்படும் உள்ளிட்ட பலவேறு தகவல்களை பெற, சாட்போட்டில் 10 இலக்க PNR எண்ணை உள்ளிட வேண்டும். அதை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
ரயில் தொடர்பான முழுமையான தகவல்களை பெறும் முறை:
வழிமுறை 1: முதலில், பயணிகள் தங்கள் ஸ்மார்ட்போனின் தொடர்பு பட்டியலில் ரெய்லோஃபியின் ரயில் விசாரணை எண்ணை (91-9881193322) சேமிக்க வேண்டும்.
வழிமுறை 2: இப்போது, வாட்ஸ்அப்பைத் திறந்து, நீங்கள் முன்பு சேமித்த ரெலோஃபியின் சாட்பாட் எண்ணைத் தேடவும்.
வழிமுறை 3: உங்கள் ரயிலின் 10 இலக்க PNR எண்ணை கையில் வைத்து சேட்டில் தட்டச்சு செய்யவும். திரையின் வலது பக்கத்தில் உள்ள அனுப்பு விருப்பத்தை கிளிக் செய்யவும்.
மேலும் படிக்க | Indian Railways: 94 ஆண்டுகளுக்கு முன்பே ரயில்களில் AC வசதி; ஆச்சர்ய தகவல்..!!
வழிமுறை 4: உங்கள் வினவலைப் பெற்ற பிறகு, PNR நிலை, ரயில் நிலை மற்றும் விழிப்பூட்டல்கள் போன்ற விவரங்களை Railofi Chatbot உங்களுக்கு அனுப்பும்.
வழிமுறை 5: சாட்பாட் இப்போது வாட்ஸ்அப்பில் ரயிலின் நிகழ்நேர நிலையைப் பற்றி தானாகவே உங்களுக்குத் தெரிவிக்கும்.
இதற்கிடையில், IRCTC இப்போது உங்கள் பசியைப் போக்க Zoop மூலம் ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்ய அனுமதிக்கிறது. ரயில் பயணத்தின் போது ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்வது எப்படி என்பதை இங்கே காணலாம்:
வழிமுறை 1: நகரும் ரயிலில் உணவை அனுபவிக்க, உங்கள் ஸ்மார்ட்போனில் Zoop இன் வாட்ஸ்அப் சாட்போட் எண்ணான 91 7042062070 என்ற எண்ணை சேமிக்கவும்.
வழிமுறை 2: வாட்ஸ்அப்பில் Zoop chatbot சேட்டை திறந்து, அரட்டையில் 10 இலக்க PNR எண்ணை உள்ளிடவும்.
வழிமுறை 3: ஆர்டர் செய்யும் போது, எந்த ரயில் நிலையம் வர உள்ளது என்பதை அறிந்து கொண்டு டெலிவரி செய்ய விரும்பும் வரவிருக்கும் நிலையத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
வழிமுறை 4: ஜூப் சாட்பாட் உணவகங்களைத் தேர்வுசெய்யும் விருப்பங்களின் தொகுப்பை உங்களுக்கு வழங்கும். உங்களுக்குப் பிடித்த உணவகங்களிலிருந்து உணவை ஆர்டர் செய்து ஆன்லைன் பரிவர்த்தனைகளை முடிக்கவும்.
வழிமுறை 5: சாட்போட் உங்கள் உணவை சாட்போட்டிலிருந்தே கண்காணிக்க அனுமதிக்கிறது.
மேலும் படிக்க | Indian Railways: வந்தே பாரத் விரைவு ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி!
மேலும் படிக்க | ஆயிரத்தை கோடிகளாக்கிய இந்தியாவின் Warren Buffet கடைபிடித்த 5 முதலீட்டு டிப்ஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ