ஆயிரத்தை கோடிகளாக்கிய இந்தியாவின் Warren Buffet கடைபிடித்த 5 முதலீட்டு டிப்ஸ்!

பங்கு சந்தையின் தந்தை என அழைக்கப்பட்ட ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, பங்குச் சந்தையில் முதலீடு செய்ய கடைபிடித்த மந்திரங்களை  அறிந்து கொண்டால் நாமும் பணக்காரர் ஆகலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 14, 2022, 02:13 PM IST
  • பங்குச் சந்தையில் பணம் முதிர்ச்சியடைவதற்கு நேரம் கொடுக்க வேண்டியது அவசியம்.
  • சந்தையில் கொஞ்சம் காத்திருந்தால் நிச்சயம் லாபம் கிடைக்கும்.
  • அனைத்து மூலதனத்தையும் ஒரே நேரத்தில் முதலீடு செய்யாதீர்கள்.
ஆயிரத்தை கோடிகளாக்கிய இந்தியாவின் Warren Buffet கடைபிடித்த 5 முதலீட்டு டிப்ஸ்! title=

இந்திய பங்குச் சந்தையின் தந்தை என அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இப்போது நம்மிடையே இல்லை. மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலை அவர் காலமானார். அவர் நீண்ட காலமாக நோயுடன் போராடி வந்தார். இந்தியாவின் வாரன் பஃபெட் என்று பிரபலமாக அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, நம்மிடையே இல்லை என்றாலும், பங்கு சந்தையில் அவரது அரசாட்சியும், முதலீடு செய்யும் முறையும் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படும், கடைபிடிப்படும் ஒன்றாக இருக்கும். அவரது முதலீடுகள் சந்தையின் இயக்கத்தை தீர்மானிக்கும். அவர் முதலீடு செய்த நிறுவனப் பங்குகள் ஏறிக்கொண்டே இருந்தன. முதலீடு தொடர்பாக மக்களுக்கு அவர் பல குறிப்புகளை வழங்கினார், அதைத் தொடர்ந்து லட்சக்கணக்கான மக்கள் பணக்காரர்களாக மாறியுள்ளனர். அவர்களின் வெற்றி மந்திரத்தை தெரிந்து கொள்வோம்.

1. நீண்ட கால முதலீட்டில் கவனம் செலுத்துங்கள்

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா எப்போதும் நீண்ட கால முதலீடு பற்றி பேசுவார். சந்தைக்கு வருபவர்களிடம், நீங்கள் தொடர்ந்து நீடிக்க விரும்பினால், நீண்ட காலம் முதலீடு செய்யுங்கள் என்று சொல்வார். குறுகிய காலத்தில் லாபம் ஈட்டுவதை விட, முதலீடு பன்மடங்கு வளர கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று அவர் கூறுவார். சந்தையில் பணம் முதிர்ச்சியடைவதற்கு நேரம் கொடுக்க வேண்டியது அவசியம். சந்தையில் கொஞ்சம் காத்திருந்தால் நிச்சயம் லாபம் கிடைக்கும் என்று முதலீட்டாளர்களிடம் ஜுன்ஜுன்வாலா கூறி வந்தார்.

2. அனைத்து மூலதனத்தையும் ஒரே நேரத்தில் முதலீடு செய்யாதீர்கள்

எப்போதும் உங்கள் பணம் அனைத்தையும் ஒரே நேரத்தில் சந்தையில் முதலீடு செய்யாதீர்கள் என்று ராகேஷ் ஜுன்ஜுன்வாலா கூறுவார். முதலீடு செய்ய உங்களிடம் நல்ல பணம் இருக்கலாம், ஆனால் எல்லாப் பணத்தையும் சேர்த்து ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீர்கள். லாபம் சம்பாதிக்க ஆசை இருப்பது நல்லது, ஆனால் ஒரு சிறிய அளவிலான முதலீடு மட்டுமே சிறந்த வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது என்று விதி கூறுகிறது. ஏதேனும் ஒரு பங்கில் பணத்தை முதலீடு செய்யும் போது, ​​உங்கள் முதலீட்டுத் தொகையை பகுதிகளாகப் பிரித்து அவ்வப்போது வாங்குங்கள் என்று அறிவுரை கூறுவார். பங்கு குறைந்தால் தொடர்ந்து வாங்கவும் என்பார்.

3. நிறுவனத்தின் கடனையும் பார்க்கவும்

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா எந்த நிறுவனத்திலும் முதலீடு செய்வதற்கு முன், அந்த நிறுவனத்தில் எவ்வளவு கடன் இருக்கிறது என்று பார்ப்பது வழக்கம். பணத்தை முதலீடு செய்யும் முன் கண்டிப்பாக அந்த நிறுவனத்தின் கடனைத் தெரிந்துகொள்ளுங்கள் என்று மற்றவர்களுக்கு அதே அறிவுரையை வழங்குவார். பங்குச் சந்தையில், நிறுவனங்கள் மீது எவ்வளவு கடன் உள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். கடன் குறைவாக இருந்தால், நிறுவனங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படாது. ஆனால், கடன் அதிகமாக இருந்தால், நிறுவனத்தின் மதிப்பீடு எந்த நேரத்திலும் ஏற்ற இறக்கமாக இருக்கலாம்.

மேலும் படிக்க | இந்தியாவின் "Warren Buffet" ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்!

4. பண உபரியையும் பார்க்கவும்

ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் இந்த டிப்ஸ்கள் பலரை பணக்காரர்களாக்கியது. பங்குச் சந்தையில் நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டால், அது உங்களுக்கு நல்ல வருமானத்தைத் தர வேண்டிய அவசியமில்லை என்று அவர் அடிக்கடிச் சொல்வார். அத்தகைய சூழ்நிலையில், முதலீடு செய்வதற்கு முன் நிறுவனத்தின் பின்னணி சரிபார்ப்பு அவசியம். நிறுவனம் எவ்வளவு ஈவுத்தொகை கொடுத்துள்ளது என்பதை கண்டிப்பாக பாருங்கள் என்று கூறுவார். பங்குச் சந்தையில் ஈவுத்தொகைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. நிறுவனம் நீண்டகாலமாக டிவிடெண்ட் செலுத்தி வருகிறது என்றால், அது பணப் பற்றாக்குறை இல்லை என்று அர்த்தம்.

5. மதிப்பில் கவனம் செலுத்துங்கள், விலையில் அல்ல

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, நிறுவனத்தின் பங்குகளின் விலையைப் பார்த்த பிறகு முதலீடு செய்ய வேண்டாம் என்று கூறுவார். அதிக விலையுள்ள பங்கு அதிக வருமானம் தர வேண்டும் என்பது அவசியமில்லை. நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு முன், அந்த நிறுவனத்தின் மதிப்பைப் பார்க்கவும், அதன் பங்கு விலையை அல்ல. பெரும்பாலும் மக்கள் அதிக விலையுள்ள பங்குகளை வாங்கி தவறு செய்கிறார்கள், அவர்கள் அதன் கடந்தகால செயல்திறனைப் பார்க்க மாட்டார்கள். இதை ஒருபோதும் செய்யக்கூடாது.

6. மற்றவர்களைப் பார்த்து பணத்தை முதலீடு செய்யாதீர்கள்

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா அடிக்கடி மற்றவர்களைப் பார்த்து பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தினார். பங்குச் சந்தையில் முதலீடு செய்வது எப்போதும் பாதுகாப்பானது அல்ல என்றார். இங்கே வருமானம் அதிக அளவில் இருக்கும். அதனால் ஆபத்தும் அதிகம். எனவே, மற்றவர்களைப் பார்த்து முதலீடு செய்யாமல், அந்த நிறுவனத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டு, அதன் பிறகு முதலீடு செய்ய வேண்டும். மற்றவர்களைப் பார்த்து பணத்தை முதலீடு செய்வதும் தவிர்க்கப்பட வேண்டும், ஏனென்றால் எதிரில் இருப்பவர்  பண பலம் கொண்டவராக இருக்கலாம்;  அவர் நஷ்டத்தை தாங்கிக்கொள்ளலாம், ஆனால் உங்களிடம் குறைந்த மூலதனம் இருந்தால் அது மூழ்கினால் சிக்கல் ஏற்படலாம் என அறிவுரை கூறுவார்.

மேலும் படிக்க | SBI பரஸ்பர நிதியத்தில் முதலீடு செய்தால் பணம் பன்மடங்காக பெருகும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News