Indian Railways: 94 ஆண்டுகளுக்கு முன்பே ரயில்களில் AC வசதி; ஆச்சர்ய தகவல்..!!

ரயிலில் பயணம் செய்யாதவர்களை பார்ப்பது மிகவும் அரிது.  தற்போது ரயில்களில் பல வசதிகள் வரத் தொடங்கியுள்ளன.  ஆனால், 94 ஆண்டுகளுக்கு முன் இந்திய ரயில்கள் எப்படி இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா...

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 20, 2022, 08:16 PM IST
  • யிலில் பயணம் செய்யாதவர்களை பார்ப்பது மிகவும் அரிது.
  • தற்போது ரயில்களில் பல வசதிகள் வரத் தொடங்கியுள்ளன.
  • இந்திய ரயில்களில் பல வகையான ரயில் பெட்டிகள் உள்ளன.
Indian Railways: 94 ஆண்டுகளுக்கு முன்பே ரயில்களில் AC வசதி; ஆச்சர்ய தகவல்..!!  title=

இந்திய ரயில்வே உலகின் நான்காவது பெரிய ரயில் அமைப்பு என்பதை நாம் அனைவரும் அறிவோம். ரயிலில் பயணம் செய்யாதவர்களை பார்ப்பது மிகவும் அரிது.  தற்போது ரயில்களில் பல வசதிகள் வரத் தொடங்கியுள்ளன.  இந்திய ரயில்களில் பல வகையான ரயில் பெட்டிகள் உள்ளன. பொது வகுப்பு, ஸ்லீப்பர், மூன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மற்றும் முதல் வகுப்பு. இது தவிர, காலப்போக்கில், இந்திய இரயில்வேயில் பல வகையான ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டன. ஆனால், நாட்டிலேயே முதன்முதலில் ஏசி பெட்டிகள் பயன்படுத்தப்பட்ட ரயில் எது, எப்படி தொடங்கப்பட்டது தெரியுமா?

ஃபிரான்டியர் மெயில் (Frontier Mail) என்ற முதல் ஏசி ரயில்

நாட்டின் முதல் ஏசி ரயிலின் பெயர் ஃபிரான்டியர் மெயில் ரயில். இந்த ரயில் 94 ஆண்டுகளுக்கு முன்பு 1928 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி தனது பயணத்தைத் தொடங்கியது. முன்னதாக இந்த ரயில் பஞ்சாப் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்பட்டது. ஆனால் 1934 ம் ஆண்டில், அதில் AC கோச் சேர்க்கப்பட்டதும், அதன் பெயர் ஃபிரான்டியர் மெயில்  என மாற்றப்பட்டது. இது மிகவும் சிறப்பு வாய்ந்த ரயில். அந்த நேரத்தில் ராஜதானி போன்ற ரயில்களைப் போலவே இதுவும் முக்கியமானது.

மேலும் படிக்க  | வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 45-ஆவது பிறந்தநாள்; கேக் வெட்டி கொண்டாடிய பயணிகள்

ரயில் பெட்டிகளின் பனிக்கட்டிகள் பயன்படுத்தப்பட்டன

பிரான்டியர் மெயிலின் ஏசி ரயிலை குளிர்ச்சியாக வைத்திருக்க, இன்று போல நவீன உபகரணங்கள் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் ஒரு சிறப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. ரயிலை குளிர்ச்சியாக வைத்திருக்க ஐஸ் கட்டிகள் பயன்படுத்தப்பட்டன. ஏசி போகியை குளிர்விக்க, போகியின் அடியில் ஒரு பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. அந்த பெட்டியில் ஐஸ் வைத்து மின்விசிறி நிறுவப்பட்டது. இந்த மின்விசிறியின் உதவியுடன் பெட்டிகள் குளிர்விக்கப்பட்டன.

சுபாஷ் சந்திரபோஸ், மகாத்மா காந்தி ஆகியோரும் பயணம்

இந்த ரயில் மும்பையில் இருந்து ஆப்கானிஸ்தான் எல்லை, பெஷாவர் வரை இயக்கப்பட்டது. அப்போது, ​​பிரிட்டிஷ் அதிகாரிகளைத் தவிர, சுதந்திரப் போராட்ட வீரர்களும் இந்த ரயிலில் பயணம் செய்தனர். இந்த ரயில் டெல்லி, பஞ்சாப் மற்றும் லாகூர் வழியாக பெஷாவர் சென்றடையும். ஃபிரான்டியர் மெயில் இந்தப் பயணத்தை 72 மணி நேரத்தில் நிறைவடையும். பயணத்தின் பல்வேறு நிலையங்களில் உருகிய பனி அகற்றப்பட்டு, அதில் பனிக்கட்டிகள் நிரப்பப்பட்டது. இந்த ரயிலில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோர் அமர்ந்து பயணித்ததால் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

மேலும் படிக்க | Indian Railways: ரயில் டிக்கெட்டின் 5 இலக்க எண் கூறும் முக்கிய தகவல்கள்!

ரயிலின் தற்போதைய பெயர் கோல்டன் டெம்பிள் மெயில்

இந்த ரயிலின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், அது ஒருபோதும் தாமதம் அடையாமல் பயணிக்கிறது. 1934 ஆம் ஆண்டு, ரயில் புறப்பட்டு 11 மாதங்கள் கழித்து, ஒரு முறை தாமதமானபோது, ​​அரசாங்கம் நடவடிக்கை எடுத்து டிரைவருக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் கோரியது. 1930-40 வரை, இந்த ரயிலில் 6 பெட்டிகள் இருந்தன. அப்போது 450 பேர் அதில் பயணம் செய்து வந்தனர். பயணத்தின் போது முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கு உணவும் வழங்கப்பட்டது. இதுமட்டுமின்றி பயணிகளுக்கு பொழுதுபோக்கிற்காக செய்தித்தாள்கள், புத்தகங்கள்,  வழங்கப்பட்டன. சுதந்திரத்திற்குப் பிறகு, இந்த ரயில் மும்பையிலிருந்து அமிர்தசரஸ் வரை இயக்கத் தொடங்கியது. 1996ல் அதன் பெயர் 'கோல்டன் டெம்பிள் மெயில்' என மாற்றப்பட்டது.

மேலும் படிக்க | Indian Railways: வந்தே பாரத் விரைவு ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி!

மேலும் படிக்க | ஆயிரத்தை கோடிகளாக்கிய இந்தியாவின் Warren Buffet கடைபிடித்த 5 முதலீட்டு டிப்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News