ரயில்வேயின் அதிரடி சலுகை! ஏசி கோச்சில் இலவசமாக பயணம் செய்யலாம்!
IRCTC: ரயிலில் முன்பதிவு செய்யும் போது ரயில்வே நிர்வாகம் அதன் பயணிகளுக்கு ஆட்டோ அப்க்ரேடேஷன் ஸ்கீமை வழங்குகிறது. இந்த திட்டத்தில், இலவசமாக டிக்கெட் எடுக்கும் வகுப்பை விட பயணிகள் ஒரு வகுப்புக்கு மேல் தரம் உயர்த்தப்படுகிறார்கள்.
Indian Railways: ரயில் பயணிகள் சில சமயங்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஸ்லீப்பர் கோச்சில் தங்களது இருக்கையை முன்பதிவு செய்துவிட்டு, இறுதியில் மூன்றாம் ஏசியில் பெர்த் கிடைக்க நேரிடும். இதுபோன்ற சம்பவம் அடிக்கடி சில ரயில் பயணிகளுக்கு நடந்திருக்கும். நாம் முன்பதிவு செய்த இருக்கை வேறு ஆனால் நமக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை வேறு, எதனால் இப்படி ஆகிறது என்கிற கேள்வி இந்த சூழ்நிலையை அனுபவித்தவர்களுக்குள் கண்டிப்பாக இருக்கும். ஆனால் ரயில்வே நிர்வாகம் எதற்காக இப்படி செய்கிறது என்பது பற்றி இதுவரை பெரிதாக யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, இதற்கான காரணம் ரயில்வேயின் ஆட்டோ அப்க்ரேடேஷன் ஸ்கீம் தான். ஆட்டோ அப்க்ரேடேஷன் ஸ்கீம் மூலம் ரயில்வே நிர்வாகம் பயணிகளிடம் ஏதேனும் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறதா? விதிமுறைகள் என்ன? என்பது போன்ற பல ரயில் பயணிகளுக்கும் பெரிதாக தெரிந்திடாத இந்த ஸ்கீம் பற்றி இந்த பகுதியில் விரிவாக பார்ப்போம்.
ரயிலில் முன்பதிவு செய்யும் போது ரயில்வே நிர்வாகம் அதன் பயணிகளுக்கு ஆட்டோ அப்க்ரேடேஷன் ஸ்கீமை வழங்குகிறது. இந்த திட்டத்தில், இலவசமாக டிக்கெட் எடுக்கும் வகுப்பை விட பயணிகள் ஒரு வகுப்புக்கு மேல் தரம் உயர்த்தப்படுகிறார்கள். அதாவது பயணிகள் ஸ்லீப்பர் கோச்சில் டிக்கெட் எடுத்திருந்தால் அது மூன்றாம் வகுப்பு ஏசியாக அப்க்ரேட் செய்யப்படுகிறது, இதற்காக ரயில்வே நிர்வாகம் அதன் பயணிகளிடம் எவ்வித கூடுதல் கட்டணத்தையும் வசூலிக்காது. மறுபுறம், ஒருவர் மூன்றாவது ஏசி டிக்கெட்டை எடுத்திருந்தால், அவர் இரண்டாவது ஏசி-க்கு மேம்படுத்தப்படுகிறார். அதேபோல் ஒருவர் இரண்டாவது ஏசி டிக்கெட் எடுத்திருந்தால் அவர் முதல் ஏசி-க்கு மேம்படுத்தப்படுகிறார். இருப்பினும், அந்தந்த வகுப்பில் பெர்த்கள் இருந்தால் மட்டுமே ஆட்டோ அப்க்ரேடேஷன் சாத்தியமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ரயில்களில் பெரும்பாலான நேரங்களில் ஏசி1, ஏசி2 பெட்டிகளில் பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே காணப்படுகிறது. இதற்கு காரணம் மற்ற பெட்டிகளை விட ஏசி பெட்டிகளின் டிக்கெட் விலை சற்று விலை உயர்ந்ததாக இருப்பது தான். விலை உயர்வு காரணமாக ஏசி பெட்டிகள் காலியாக இருப்பதால், இதற்கு ஏற்படும் நஷ்டத்தை ரயில்வே நிர்வாகம் தான் சமாளிக்க வேண்டியிருக்கிறது. இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் ஆட்டோ அப்க்ரேடேஷன் திட்டத்தை கொண்டுவர முடிவு செய்து அதனை அறிமுகப்படுத்தியும் இருக்கிறது. அதில் மேல் வகுப்பில் ஒரு பெர்த் காலியாக இருந்தால், கீழே ஒரு வகுப்பில் வசிக்கும் பயணி அந்த வகுப்பிற்கு அப்க்ரேட் செய்யப்படுவார்.
ரயில்வேயின் ஆட்டோ அப்க்ரேடேஷன் திட்டத்தின் மூலம், கீழ் வகுப்பு டிக்கெட்டுகள் மேல் வகுப்புக்கு மேம்படுத்தப்படுகின்றன. உதாரணமாக ஒரு ரயிலின் முதல் ஏசியில் 4 பெர்த்களும், செகண்ட் ஏசியில் 2 பெர்த்களும் காலியாக இருக்கும் சூழ்நிலையில், ரயில்வே இரண்டாவது ஏசியில் சில பயணிகளை மேம்படுத்தி முதல் ஏசியில் இருக்கைகளையும், மூன்றாம் ஏசியில் உள்ள சில பயணிகளை மேம்படுத்தி மூன்றாம் ஏசியில் இருக்கைகளையும் வழங்குகிறது. அடுத்ததாக மூன்றாம் ஏசியில் இருக்கைகள் காலியாக இருக்கும்போது, காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகள் அல்லது ஸ்லீப்பர் வகுப்பு பயணிகளுக்கு மூன்றாம் ஏசியில் இருக்கைகள் வழங்கப்படுகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் ரயிலின் எந்தப் பெட்டியிலும் பெர்த் காலியாக இருக்காது மற்றும் இதனால் ரயில்வேக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது. ரயில் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு படிவத்தில் ஆட்டோ அப்க்ரேடேஷன் திட்டத்தை தேர்வு செய்வதற்கான ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. படிவத்தை நீங்கள் பூர்த்தி செய்யும்போது, ஆட்டோ அப்க்ரேடேஷனுக்கு, ஆம் என்று எழுதி ஒப்புதல் அளித்தால் உங்கள் டிக்கெட் மேம்படுத்தப்படும். அதில் நீங்கள் இல்லை என்கிற ஆப்ஷனை தேர்வுசெய்தால் உங்கள் டிக்கெட் மேம்படுத்தப்படாது மற்றும் நீங்கள் எந்த ஆப்ஷனையும் தேர்வு செய்யவில்லையென்றால், அது ஆம் என்று கூறப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் கருதும். டிக்கெட் அப்க்ரேட் செய்யப்பட்ட பிறகு ஒரு பயணி தனது டிக்கெட்டை ரத்துசெய்தால், அவர் அசல் டிக்கெட்டின்படி பணத்தைத் திரும்பப் பெறுவார்.
மேலும் படிக்க | RuPay கார்டில் பணம் செலுத்த இனி CVV தேவையில்லை... எப்படி தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ