Indian Railways: இலவச WiFi மூலம் ‘அந்த’ வலைத்தளங்களை பார்த்தால் இனி கடுமையான நடவடிக்கை!!
இந்திய ரயில்வே புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. இதன் படி, ஆபாச வலைத்தளங்களை பார்வையிடுவோர் பிடிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுடெல்லி: நீங்கள் ரயிலில் பயணம் செய்து இலவச வைஃபை வசதியை பயன்படுத்தினால், உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி இருக்கிறது. ரயில்வே வைஃபை மூலம் ஆபாச தளங்களை அணுகுவோர் மீது கண்டிப்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே (Indian Railways) இது குறித்த ஒரு புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. இதன் படி, இதுபோன்ற வலைத்தளங்களை பார்வையிடுவோர் பிடிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கில் ரயில்வே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
மகளிர் கோச்கள் கண்காணிக்கப்படும்
புதிய வழிகாட்டுதலின் கீழ், கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுடன் நடந்த குற்றச் சம்பவங்களின் விவரங்களைப் பெற ரயில்வே போலீஸ் படை (RPF) அதிகாரிகளிடம் கேட்கப்பட்டுள்ளது. இதனுடன், நிலைய வளாகத்தில் செயலில் உள்ள குற்றவாளிகளின் தரவுத்தளத்தை உருவாக்கவும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதனுடன், பெண்களின் ரயில் கோச்களில் (Railway Coaches) கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தவிர, ஸ்டேஷன்களில் கிடைக்கும் இலவச வைஃபை மூலம் ஆபாச தளங்கள் அணுகப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ALSO READ: Indian Railways: டிக்கெட் ரத்து செய்வது தொடர்பான IRCTC சிறப்பு விதி தெரியுமா..!!
பாழடைந்த கட்டிடங்கள் இடிக்கப்படும்
ஆர்பிஎஃப் இயக்குநர் ஜெனரல் அருண்குமார் பிறப்பித்த உத்தரவில், பிளாட்பாரம் மற்றும் யார்டில் உள்ள மோசமான கட்டமைப்புகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் உள்ள பாழடைந்த கட்டிடங்கள் மற்றும் இடிந்த கட்டிடங்களை உடனடியாக இடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அவை இடிக்கப்படும் வரை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். குறிப்பாக இரவு நேரங்களில், மக்கள் வருகை மிகவும் குறைவாக இருக்கும் நேரங்களில் அதிக கண்காணிப்புகள் இருக்கும்.
குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு
சமீப காலமாக ரயில் வண்டிகள் (Trains), ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்வே தொடர்பான இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பயணத்தின் போது பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR