புதுடெல்லி: பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வே கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், பயணிகள் தங்கள் ரயில் பயணத்திற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இந்த அட்டை மூலம் ரயில் பயணிகள் பல நன்மைகளைப் பெறுவார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

NPCI மற்றும் BOB Financial Solutions உடன் இணைந்து இந்த கிரெடிட் கார்டை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. ஐஆர்சிடிசி மூலம் 6 கோடிக்கும் அதிகமானோர் ரயில் பயணத்திற்கான டிக்கெட்களை முன்பதிவு செய்துள்ளனர்.


ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் தினமும் 60 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் ரயில்வே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கிறார்கள். டிக்கெட் முன்பதிவு செய்ய டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டை பயன்படுத்துகின்றனர். தற்போது ரயில்வேயின் கோ-பிராண்டட் கிரெடிட் கார்டும் பயணிகளிக்கு சேவைகள் வழங்க தயாராகிவிட்டது.  


அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு பல நன்மைகள்  
ஐஆர்சிடிசி பாப் ரூபே காண்டாக்ட்லெஸ் கிரெடிட் கார்டு (IRCTC BOB RuPay contactless credit card) இந்திய ரயில்வேயில் தொடர்ந்து பயணம் செய்யும் பயணிகளுக்கு அதிக பயனளிக்கும். இது, தொடர்ந்து ரயிலில் அடிக்கடி பயணிக்கும் பயணிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | IRCTC வழங்கும் புதிய சேவை! டிக்கெட்டை ரத்து செய்தால் உடனடியாக பணம்


ரிவார்ட் பாயிண்ட்ஸ்
இந்த கிரெடிட் கார்டு மூலம் டிக்கெட் எடுக்கும் பயணிகளுக்கு வெகுமதி புள்ளிகள் (Reward points) கிடைக்கும்.  டிக்கெட் முன்பதிவு செய்யும் போது 40 வெகுமதி புள்ளிகளுடன், ஒரு சதவீத பரிவர்த்தனை கட்டண தள்ளுபடியும் கிடைக்கும். புதிதாக கார்டு வாங்கிய 45 நாட்களுக்குள்1,000 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட் புக் செய்தால், ஆயிரம் போனஸ் பாயிண்டுகள் கிடைக்கும்.


1% எரிபொருள் கூடுதல் கட்டணம் இருக்காது
ஒரு ஐஆர்சிடிசி டிராவல் பாயின்ட் நான்கு ரிவார்டு புள்ளிகள் கிடைக்கும். இந்த ஒரு பயணப் புள்ளி ஒரு ரூபாய்க்கு சமமாக இருக்கும். இந்த அட்டை மூலம் பெட்ரோல் பம்பில் ரூ.500 முதல் ரூ.3,000 வரை எரிபொருள் வாங்குவதற்கு 1% எரிபொருள் கூடுதல் கட்டணம் கிடையாது. இந்த விலக்கு ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.100 ஆக இருக்கும்.


இந்த கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் ரயில்வேயின் எக்சிகியூட்டிவ் லவுஞ்சை (executive lounge of the Railways) இலவசமாக பயன்படுத்தலாம். இருப்பினும், இந்த சலுகை மூன்று மாதங்களில் அதிகபட்சம் நான்கு முறை மட்டுமே இலவசம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த கிரெடிட் கார்ட் வாங்குவதற்கு 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் பிறகு, அடுத்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் 300 கட்டணம் வசூலிக்கப்படும்.


மேலும் படிக்க | IRCTC தனது முதல் Pod ஹோட்டலை மும்பையில் திறந்தது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR