மூத்த குடிமக்களுக்கு ஜாலி.. புதிய அப்டேட் வெளியிட்ட ரயில்வே
Irctc Dakshin Bharat Yatra Tour: Irctc ஸ்ரீ சைலம், திருப்பதி, ராராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி ஆகிய இடங்களுக்குச் செல்ல யோக்னாக்ரி ரிஷிகேஷிலிருந்து பாரத் கௌரவ் டூரிஸ்ட் ரயில் “தக்ஷிண் பாரத் யாத்ரா” என்கிற டூர் பேக்கேஜை வழங்குகிறது.
இந்தியன் ரயில்வேவின் புதிய டூர் பேக்கேஜ்: ஐஆர்சிடிசி / இந்தியன் ரயில்வே பல இடங்களைப் பார்வையிடும் சுற்றுலா பயணங்களை அறிவித்து வருகிறது. நீங்கள் பயணம் செய்ய விரும்புபவர் என்றால், இது உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. அவ்வப்போது, ஐஆர்சிடிசி மூலம் பயணிக்கும் வாய்ப்பு சிலருக்கு கிடைக்கிறது. குறைந்த செலவில் பயணிகள் பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படும் திட்டத்தை தான் பார்க்கப்போகிறோம். அதுவும் உங்கள் வீட்டில் 60 வயது மேல் யாரேனும் இருந்தால், அவர்களை கட்டாயம் இந்த சுற்றுப்பயணத்திற்கு கூட்டிச் செல்லுங்கள். அதன்படி 11 நாள் ஆன்மீக சுற்றுல்லா செல்ல ஐஆர்சிடிசி தற்போது ஒரு அற்புதமான டூர் பேக்கேஜை ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதன் முழு விவரத்தை இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்துக்கொள்வோம்.
டூர் பேக்கேஜின் பெயர்: பாரத் கௌரவ் டூரிஸ்ட் ட்ரெயின் (NZBG24) மூலம் தக்ஷின் பாரத் யாத்ரா (DAKSHIN BHARAT YATRA BY BHARAT GAURAV TOURIST TRAIN (NZBG24) ).
கால அளவு (EX - கோரக்பூர்) : 10இரவுகள்/11 பகல்கள்
சுற்றுப்பயணம்: கோரக்பூர், ராமேஸ்வரம், மீனாட்சி அம்மன் கோயில் (மதுரை), கன்னியாகுமரி, திருப்பதி மற்றும் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில்- கோரக்பூர்.
மொத்த பெர்த்கள் : 767 (கம்ஃபர்ட்: 49, ஸ்டாரண்ட்: 70, எகானமி: 648).
சுற்றுப்பயணத்தின் விலை: ஒரு நபருக்கு.
Category | Train Journey | Single/ Double/ Triple | Child (5-11) |
Comfort / கம்ஃபர்ட் | 2A / 2ஏசி | ரூபாய்.48420/- | ரூபாய்.46700/- |
Standard / ஸ்டாண்டர்ட் | 3A / 3ஏசி | ரூபாய்.36400/- | ரூபாய்.35000/- |
Economy / எகானமி | SL / ஸ்லீப்பர் வகுப்பு | ரூபாய்.21420/- | ரூபாய்.20200/- |
இந்த டூர் பேக்கேஜில் எங்கெல்லாம் கூட்டிச் செல்லப்படுவீர்கள் தெரியுமா?
ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில், திருப்பதி ஏழுமலையான் கோவில், மீனாட்சியம்மன் கோவில்,
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்
கன்னியாகுமரி
டூர் பேக்கேஜ் எப்போது தொடங்கும்?
இந்த டூர் பேக்கேஜ் 11 பகல் மற்றும் 10 இரவுகள் கொண்டதாக இருக்கும். பயணிகள் 3ஏசி மற்றும் ஸ்லீப்பர் வகுப்பில் பயணிக்க வாய்ப்பு கிடைக்கும். பயணத்தின் மூலம் புண்ணியத் தலங்களுக்குச் செல்வது மன அமைதியைத் தரும். இது 28.10.2023 முதல் தொடங்க உள்ளது.
இந்த சுற்றுலா ரயிலில் பயணிப்பவர்களுக்கு உள்ளூர் பார்வையிடுவதற்கான போக்குவரத்து, ரயில் பயணத்தின் போது சைவ உணவு, பயண காப்புறுதி என உள்ளடக்கி படுக்கை வசதி தரப்படும். மேலும் உணவு ஏற்கனவே நிர்ணயிக்க உணவு தான் கொடுக்கப்படும். விருப்பத்தின்படி வழங்கப்படாது. வேறு உணவு சாப்பிட எண்ணினால் அது தனிப்பட்ட செலவில் சேரும்.
மேலும், இந்த ரயிலில் பயணிக்க விருப்பமுள்ளவர்கள் www.irctctourism.com என்ற இணையாதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் இது தொடர்பான விபரங்களுக்கு 1800110139, 0755 - 6698100 / 4090400, குறிப்பிட்ட எண்களில் தொடர்பு கொண்டு அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ