7th Pay Commission: மத்திய ஊழியர்களுக்கு சூப்பர் ஜாக்பாட்.. 3 இல்ல 4% டிஏ ஹைக், சம்பளம் உயர்வு

7th pay commission DA hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் இறுதிக்குள் நல்ல செய்தி கிடைக்கும். அதன்படி மத்திய ஊழியர்களின் அகவிலைப்படியில் பெரிய அதிகரிப்பு ஏற்படலாம். சில ஊடக அறிக்கைகளின்படி, அரசாங்கம் DA ஐ 4 சதவீதம் அதிகரிக்கலாம் எதிர்பார்க்கப்படுகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 6, 2023, 06:55 PM IST
  • ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்?
  • உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜூலை முதலே அமலுக்கு வரும்.
  • செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்படலாம்.
7th Pay Commission: மத்திய ஊழியர்களுக்கு சூப்பர் ஜாக்பாட்.. 3 இல்ல 4% டிஏ ஹைக், சம்பளம் உயர்வு title=

7வது சம்பள கமிஷன் அகவிலைப்படி உயர்வு குறித்து முக்கிய அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத இறுதிக்குள் நல்ல செய்தி கிடைக்கும். அந்த வகையில் ஊழியர்களின் அகவிலைப்படியில் (DA Hike) பெரிய அதிகரிப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பா சில ஊடக அறிக்கைகளின்படி, அரசாங்கம் அகவிலைப்படியை நான்கு சதவீதம் வரை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு வெளியான செய்திகளின் படி, இந்த முறை செப்டம்பர் மாதத்தில் அகவிலைப்படி 3 சதவீதம் மட்டுமே அதிகரிக்கும் என்று கூறப்பட்டது, ஆனால் சமீபத்திய ஏஐசிபிஐ தரவுகளின்படி, மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. தற்போது ம் மத்திய அரசு நான்கு சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தினால், 42 ஆக இருக்கும் அகவிலைப்படி 46 சதவீதமாக உயரும்.

ஜூலையில் ஏஐசிபிஐ 139.7 புள்ளிகளை எட்டியது:
இந்நிலையில் ஊடக அறிக்கைகளின்படி, ஏஐசிபிஐ குறியீடு (All India Consumer Price Index (AICPI)) தற்போது ஜூலை 2023 மாதத்திற்கான தரவை வெளியிட்டது. இதில் தற்போது 3.3 புள்ளிகள் அதிகரிப்பு காணப்படுகிறது. ஜூன் 2023 இல், இந்த எண்ணிக்கை 136.4 புள்ளிகளாக இருந்த நிலையில் தற்போது, ஜூலையில் இந்த எண்ணிக்கை 139.7 புள்ளிகளை எட்டியுள்ளது. இதன் அதிகரிப்பு காரணமாக தற்போது அகவிலைப்படி (DA Hike 4 Percentage) நான்கு சதவீதம் அதிகரிக்கப்படலாம் என நம்பப்படுகிறது.

மேலும் படிக்க | தபால் அலுவலகத்தின் டபுள் ஜாக்பாட் திட்டம்.. ரூ.10,51,175 கிடைக்கும்

செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்படலாம்:
இதனிடையே இந்த மாதம் அதாவது செப்டம்பர் மாதத்தில் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அரசு பரிசாக வழங்கலாம். இதை விநாயக சதுர்த்திக்கு முன் அரசு அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இம்முறையும் அகவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரிக்கப்பட்டால், தற்போது 42 சதவீதமாக இருக்கும் அகவிலைப்படி 46 சதவீதத்தை எட்டலாம்.

உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜூலை முதலே அமலுக்கு வரும்:
மத்திய ஊழியர்களுக்கு தற்போது 42 சதவீதம் அகவிலைப்படி (Dearness Allowances) வழங்கப்படுகிறது. நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிப்புக்குப் பிறகு, அது 46 சதவீதமாக உயரும். மேலும் தற்போது உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜூலை மாதம் முதலே அமலுக்கு வரும் என்றும் உறுதியாக கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் இரண்டு மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையும் கூட்டாக செப்டம்பர் மாதம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்?
சம்பள உயர்வை பற்றி பேசுகையில், குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.18,000 ஆக இருக்கும் ஊழியர்களுக்கு தற்போது 42 சதவீதம் என்ற விகிதத்தில் மாதம் ரூ.7560 அகவிலைப்படி வழங்கப்படுகிறது. 46 சதவீதத்தை எட்டிய பிறகு, அவருக்கு மாதம் ரூ.8280 அகவிலைப்படி கிடைக்கும். அதாவது ஒவ்வொரு மாதமும் ரூ.720 சம்பள உயர்வு இருக்கும். ஆண்டு அடிப்படையில் ஊழியர்களின் அகவிலைப்படி ரூ.8640 உயர்த்தப்படும். ரூ.56,900 அதிகபட்ச அடிப்படை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு தற்போது மாதம் ரூ.23,898 அகவிலைப்படியாக தரப்படுகிறது. 46 சதவீதத்திற்குப் பிறகு மாதம் ரூ.26,174 ஆக இருக்கும், அதாவது அகவிலைப்படி மாதத்திற்கு ரூ.2276 அதிகரிக்கும்.

மேலும் படிக்க | RBI புதிய அதிரடி... கணக்கில் பணமே இல்லாமல் UPI மூலம் பணம் செலுத்தலாம்: எப்படி? இதோ செயல்முறை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News