ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு, IRCTC புக்கிங்கில் புதிய மாற்றம்
நீங்களும் நீண்ட காலமாக உங்கள் IRCTC செயலி அல்லது கணக்கிலிருந்து ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவில்லை என்றால், முதலில் இந்த செய்தியைப் படியுங்கள்.
ரயில் பயணத்திற்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்பவராக நீங்கள் இருந்தால் இந்த செய்தி உங்களுக்கானது. உண்மையில், ஆப் மற்றும் இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிகள் ஐஆர்சிடிசி ஆல் மாற்றப்பட்டுள்ளன. புதிய விதி அமலுக்கு வந்த பிறகு, கோடிக்கணக்கான பயனர்கள் தங்கள் கணக்கைச் ஒருமுறை வெரிபிகேஷன் செய்ய வேண்டிருக்கும்.
மொபைல் மற்றும் மின்னஞ்சல் ஐடி வெரிபிகேஷன் கட்டாயம்
இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ஐஆர்சிடிசி வழங்கிய விதிகளின்படி, டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கு முன், பயனர்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை வெரிபிகேஷன் செய்ய வேண்டும். தற்போது மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் வெரிபிகேஷன் செய்யப்படவில்லை என்றால் ஆன்லைன் டிக்கெட்டுகளை பதிவு செய்வது இயலாது.
மேலும் படிக்க | சென்னை மெட்ரோ ரயிலில் பணிபுரிய வேலைவாய்ப்பு!
இந்த மாற்றமானது கொரோனா தொற்றுநோய் தொடங்கியது முதல் தற்போது வரை ஆப் அல்லது இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும். நீங்கள் நீண்ட காலமாக டிக்கெட்டுகளை வாங்கவில்லை என்றால், முதலில் வெரிபிகேஷன் செயல்முறையை நிறைவு செய்யவும். வாருங்கள் வெரிபிகேஷன் செயல்முறையை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இங்கே காண்போம்.
* ஐஆர்சிடிசி ஆப்ஸ் அல்லது இணையதளத்திற்குச் சென்று வெரிபிகேஷன் விண்டோவில் கிளிக் செய்யவும்.
* இங்கே நீங்கள் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை உள்ளிடவும்.
* இரண்டு தகவல்களையும் உள்ளிட்ட பிறகு, வெரிபிகேஷன் பொத்தானைக் கிளிக் செய்யவும்.
* வெரிபை என்பதைக் கிளிக் செய்தவுடன், உங்கள் மொபைலில் ஓடிபி வரும், அதை உள்ளிட்டு மொபைல் எண்ணைச் வெரிபை செய்யவும்.
* இதேபோல், மின்னஞ்சல் ஐடியில் பெறப்பட்ட ஓடிபியையும் உள்ளிட்டவும். அதன் பிறகு, உங்கள் மெயில் ஐடியை சரிபார்க்கப்படும்.
* இந்த செயல்முறையை முடித்தப் பின் உங்கள் கணக்கில் இருந்து எந்த ரயிலுக்கும் ஆன்லைனில் மூலம் டிக்கெட் பதிவு செய்யலாம்.
இரவு ரயில் பயணத்தில் உஷார்
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, இந்தியன் ரயில்வே சில மாற்றங்களை மேற்கொண்டது. குறிப்பாக, இரவு நேர ரயில் பயணம் மேற்கொள்பவருக்கு செய்யப்பட்டது. எனவே புதிய ரூல்ஸ்படி ரயில்களில் பயணம் செய்யும்போது சத்தமாக பேச மற்றும் செல்போனில் சத்தமாக பாட்டு கேட்க தடை விதிக்கப்படப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் பயணிகள் நிம்மதியாக தூங்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காக, ரயில்வே இந்த புதிய விதிமுறையை அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பயணிகள் தங்களுக்கு அசௌகரியமாக இருப்பதாக புகார் அளித்தால் உடனே ரயில்வே போலீசார், டிக்கெட் பரிசோதகர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு ரயில்வே ஊழியர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Indian Railways: அப்பாடா, இனி டிக்கெட் முன்பதிவின் போது இதை செய்ய வேண்டாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR