ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விவரம்: நீங்களும் தென்னிந்தியாவின் புகழ்பெற்ற கோயில்களுக்குச் செல்ல விரும்பினால், இந்திய ரயில்வே (Indian Railways) உங்களுக்காக ஒரு நல்ல செய்தியைக் கொண்டு வந்துள்ளது. உண்மையில், தென்னிந்திய கோவில்களைவைச் சுற்றிப்பார்க்க 'சப்தகிரி (SHR005)' கீழ் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) மூலம் இயக்கப்படும் ரயிலில் நீங்கள் பயணிக்கலாம். இந்த ஆன்மிக ரயில் பயணம் நவம்பர் 8 ஆம் தேதி முதல் தொடங்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பேக்கேஜ் மொத்தம் 3 இரவுகள் மற்றும் 4 பகல்களுக்கு இருக்கும். இந்த டூர் பேக்கேஜ் மூலம் காணிப்பாக்கம், திருச்சானூர், திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில், ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்ல வாய்ப்பு கிடைக்கும். IRCTC இணையதளமான irctctourism.com ஐப் பார்வையிடுவதன் மூலம் பயணிகள் இந்த சுற்றுலாப் பேக்கேஜுக்கு முன்பதிவு செய்துக்கொள்ளலாம். இந்த டூர் பேக்கேஜின் சிறப்பு என்னவென்றால், நீங்கள் பணம் மட்டும் செலுத்தினால் போதும், அதன் பிறகு பயணத்தின் போது உணவு, பானம் மற்றும் தங்குமிடம் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.


மேலும் படிக்க | ஊழியர்களுக்கு மெகா ஜாக்பாட் செய்தி.. அகவிலைப்படி 50% அதிகரிக்கும்


இந்த கோவில்களின் தரிசனம் வழங்கப்படும்
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர். 
திருச்சானூர் பத்மாவதி கோயில். 
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில். 
திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்.


பயணத்திட்டம்:


நாள் 01- வியாழக்கிழமை


ரயில் எண். 12762 கரீம்நகரில் இருந்து 19:15 மணி, பெத்தப்பள்ளி 20:05 மணி, வாரங்கல் 21:15 மணி மற்றும் கம்மம் 23:00 மணிக்கு புறப்படும். ஓவர் நைட் ஜர்னி.


நாள் 02 - வெள்ளிக்கிழமை


07:50 மணிக்கு திருப்பதி வந்தடையும். ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப் பாடுவீர்கள். ஹோட்டலில் காலை உணவு வழங்கப்படும். சீனிவாச மங்காபுரம் மற்றும் காணிப்பாக்கம் கோயில்களை தரிசிக்க புறப்படுவீரகள். பிறகு ஸ்ரீ காளஹஸ்தி மற்றும் திருச்சானூர் கோயிலுக்குச் செல்வீர்கள். ஹோட்டலுக்குத் திரும்புவீர்கள். திருப்பதியில் இரவு தங்குதல்.


நாள் 03 - சனிக்கிழமை


காலை உணவு மற்றும் ஹோட்டலை செக் அவுட். சிறப்பு தரிசனத்திற்காக 09:00 மணிக்கு திருப்பதிக்கு புறப்படுவீர்கள். மாலை திருப்பதியில் இருந்து புறப்பட 20:15 மணிக்கு ரயில் எண் 12761 எக்ஸ்பிரஸில் ஏறி ஓவர் நைட் ஜர்னி செய்வீர்கள்.


நாள் 04 - ஞாயிறுக்கிழமை
கம்மம் 03:26 மணி, வாரங்கல் 04:41 மணி, பெத்தப்பள்ளி 05:55 மணி மற்றும் கரீம்நகர் 08:40 மணி.


டூர் பேக்கேஜின் கட்டண விவரம் எவ்வளவு?
டூர் பேக்கேஜூக்கான கட்டணமானது பயணிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட வகையின்படி இருக்கும். இந்த பேக்கேஜுக்கான கட்டணம் ஒரு நபருக்கு ரூ.7120 முதல் தொடங்குகிறது. நீங்கள் ஸ்லீப்பர் வகையின் கீழ் முன்பதிவு செய்தால், ஒரு நபருக்கு ரூ.7120 செலவழிக்க வேண்டும். தர்ட் ஏசி வகையின் கீழ் முன்பதிவு செய்ய, ஒரு நபருக்கு ரூ.9010 செலவழிக்க வேண்டும். 


Package Tariff Per Person: 

Category

Single Sharing

Twin Sharing

Triple Sharing

Child With Bed
(5-11 yrs)

Child Without
Bed (5-11 yrs)

Comfort (3A)

₹ 9010/-

₹ 7640/-

₹ 7560/-

₹ 7140/-

₹ 6710/-

Standard (SL)

₹ 7120/-

₹ 5740/-

₹ 5660/-

₹ 5250/-

₹ 4810/-


 


 மேலும் படிக்க | இந்தியாவில் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க எவ்வளவு செலவாகிறது என்று தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ