மூத்த குடிமக்களுக்கு ரயில்வே ஜாக்பாட் அறிவிப்பு.. இனி என்ஜாய்மெண்ட் தான்
IRCTC announces tour packages: தென்னிந்தியாவை 12 நாட்கள் சுற்றி பார்க்க ஐஆர்சிடிசி தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த தவவுர் பேக்கேஜை கட்டாயம் மிஸ் பண்ணிடாதீங்க.
இந்தியன் ரயில்வே டூர் பேக்கேஜ்: உங்களது வீட்டில் 60 மேல் வயது கொண்ட மூத்த குடிமக்கள் இருக்காங்களா? அப்போ கட்டாயம் இந்த செய்தியை படியுங்கள், ஏனெனில் இந்த செய்தி கட்டாயம் அவர்களை சந்தோஷப்படுத்தக்கூடும். 12 நாள் கொண்ட ஆன்மீக சுற்றுல்லா செல்ல ஐஆர்சிடிசி தற்போது ஒரு அற்புதமான டூர் பேக்கேஜை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் பாரத் கௌரவ் டூரிஸ்ட் ட்ரெயின் (EZBG11) மூலம் தக்ஷின் பாரத் தர்ஷன் (DAKSHIN BHARAT DARSHAN BY BHARAT GAURAV TOURIST TRAIN (EZBG11) ) என்று அழைக்கப்படும் இந்த சுற்றுலாத் பேக்கேஜின் உதவியுடன், நாட்டின் அழகிய இடங்களை நீங்கள் பார்வையிடும் வாய்ப்பைப் பெறுவீரகள்.
இந்தப் பயணம் எத்தனை நாட்கள் இருக்கும்?
இந்த சுற்றுலா பயணமானது 12 பகல் மற்றும் 11 இரவுகள் வரை இருக்கும். மேலும் டூர் பேக்கேஜானது வருகிற 25.10.2023 முதல் தொடங்கி 05.11.2023 வரை நீடிக்கும்.
இந்த டூர் பேக்கேஜில் பயணிகள் எந்தெந்த இடங்களுக்கு சுற்றிப்பார்க்க கூட்டி செல்லப்படுவார்கள்?
ரேணிகுண்டா: திருப்பதி ஏழுமலையான் கோவில்
கூடல்நகர்: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
ராமேஸ்வரம்: ராமநாதசுவாமி கோவில்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், விவேகானந்தர் பாறை
திருவனந்தபுரம்: ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவில்.
டூர் பேக்கேஜின் கட்டண விவரம்:
இந்த டூர் பேக்கேஜுக்கு, பயணிகள் எகானமி வகுப்பிற்கு ரூபாய் 21,300/-, ஸ்டாண்டர்ட் வகுப்பிற்கு ரூபாய் 33,300/- மற்றும் கம்ஃபர்ட் வகுப்புக்கு ரூபாய் 36,400/- செலுத்த வேண்டியிருக்கும்.
முக்கிய குறிப்பு: பாரத் கௌரவ் ரயில் திட்டத்தின் கீழ் ரயில் சுற்றுலாவை மேம்படுத்த இந்திய ரயில்வே தோராயமாக 33% சலுகையை வழங்குகிறது. மேலே உள்ள விலை சலுகையை உள்ளடக்கியது.
இந்த பேக்கேஜில் என்னென்ன வழங்கப்படும்:
ரயில் பயணம், இரவு தங்குதல், போக்குவரத்து ஆகியவை வழங்கப்படும்:
*காலை தேநீர், காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்கப்படும்.
* பயணிகளுக்கான பயணக் காப்பீடு.
* உங்களுக்கு உதவ தொழில்முறை மற்றும் நட்பு சுற்றுலா எஸ்கார்ட்களின் வழங்கப்படுவார்கள்.
* பயணம் முழுவதும் IRCTC டூர் மேலாளர்களிடமிருந்து தொடர்ச்சியான ஆதரவு மற்றும் உதவி.
என்ன வழங்கப்படாது:
* அறை சேவைக்கான கோரிக்கைக்கும் கூடுதல் கட்டணம் விதிக்கப்படும்.
* சுற்றிப் பார்ப்பதற்கான செலவு, நுழைவுக் கட்டணம் மற்றும் உள்ளூர் கைட்டுகள் ஆகியவை பேக்கேஜில் கிடைக்காது.
* கோவிலுக்குகான சிறப்பு தரிசன டிக்கெட் பேக்கேஜில் சேர்க்கப்படவில்லை.
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு நீங்கள் ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ