இந்திய ரயில்வே அப்டேட்: இந்தியாவில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணிக்கின்றனர். இதற்காக, பல்வேறு வசதிகளுடன் பல்வேறு வகுப்பு பெட்டிகளை ரயில்வே இயக்குகிறது. பொது வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் தவிர, ரயிலில் ஏசி பெட்டிகளும் உள்ளன, அவற்றின் கட்டணம் ஸ்லீப்பர் வகுப்பை விட அதிகம். இருப்பினும், அனைத்து பயணிகளுக்கும் ரயில்களில் ஏசி பயணத்தை சாத்தியமாக்க, ரயில்வே 3 ஏசி எகனாமி கோச்சையும் சில ஆண்டுகளுக்கு முனவு தான் அறிமுகப்படுத்தியது, இது பொதுவாக 3 ஏசியில் கிடைக்கும் அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது, ஆனால் அதன் கட்டணம் சற்று குறைவானது. வாருங்கள் ரயில்வேயின் இந்த இரண்டு பெட்டிகளுக்கும் என்ன வித்தியாசம் என்பதை தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

3 ஏசி மற்றும் 3 ஏசி எகானமி (3rd AC and 3rd AC Economy) கோச்சுக்கு என்ன வித்தியாசம்?
3 ஏசி எகானமி கோச் மலிவான ஏர் கண்டிஷனர் ரயில் பயண சேவையாகும். ஸ்லீப்பர் வகை பயணிகளுக்கு சிறந்த மற்றும் மலிவான ஏசி பயணத்தை வழங்குவதற்காக 3 ஏசி எகானமி கோச் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பெட்டியின் கட்டணம் சாதாரண 3 ஏசியை விட 6-7 சதவீதம் குறைவாகும்.


3 ஏசி பெட்டியில் பெர்த்களின் எண்ணிக்கை 72, அதே சமயம் 3 ஏசி எகானமி பெர்த்களின் எண்ணிக்கை 80க்கும் அதிகமாக உள்ளது. 3 ஏசி எகானமி கோச்சின் பெர்த் அகலம் 3 ஏசி கோச்சுடன் ஒப்பிடும்போது சற்று சின்னதாகவே இருக்கும்.


மேலும் படிக்க | இந்திய ரயில்வேயின் புதிய விதி.. இனி கேன்சல் செய்த பின்பும் ரீபண்ட் பெறலாம்


ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து வாரணாசி சந்திப்புக்கு செல்லும் சத்பவானா எக்ஸ்பிரஸ் (14018) இல் மூன்றாம் ஏசிக்கான கட்டணம் ரூ.1155 ஆகவும், மூன்றாவது ஏசி எகானமிக்கான கட்டணம் ரூ.1065 ஆகவும் உள்ளது.


3 ஏசி எகானமியின் சிறப்புகள்:
ரயில்வேயின் 3 ஏசி எகானமி கோச்சில், 3 ஏசியில் இருக்கும் அனைத்து வசதிகளையும் பயணிகள் பெறுகிறார்கள். பெட்ஷீட் மற்றும் போர்வை தவிர, இது பல அம்சங்களையும் கொண்டுள்ளது. 3ஏசி எகானமி கோச்சின் டாய்லெட் மற்றும் கம்பார்ட்மென்ட் கதவுகள் மிகவும் அகலமானவை. இதனால் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக வசதியும் கிடைக்கிறது. 3ஏசி எகானமி கோச்சில், ஒவ்வொரு இருக்கைக்கும் தனி ஏசி டக்ட் உள்ளது. இது தவிர, பாட்டில் ஸ்டாண்ட், ரீடிங் லைட் மற்றும் சார்ஜிங் பாயின்ட் ஆகியவையும் உள்ளன.


முக்கியமாக 3 டயர் ஏசி பெட்டியிலேயே இல்லாத வசதியாக ஒவ்வொரு பெர்த்திற்கும் ஒரு ஏசி வென்ட்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் ஏசி வசதி தனி நபரின் கண்ட்ரோலில் இருக்கும். இதுபோக 3டயர் ஏசி பெட்டியை விட இதில் மிடில் மற்றும் அப்பர் பெர்த்தில் அதிக ஹெட் ரூம் வசதி இருக்கிறது.


இதனால் மக்கள் இந்த பெர்த்களில் பயணிக்கும் போது சிரமம் இல்லாமல் எழுந்து அமரவும், ஏறி இறங்கவும் முடியும். மேலும் இந்த பெட்டியை வடிவமைக்கும் போதே எளிதில் தீ பற்றிக்கொள்ளாத படியான பொருட்களைக் கொண்டே வடிவமைத்துள்ளனர். இதனால் தீவிபத்து ஏற்பட வாய்ப்புகள் மிகவும் குறைவு தான். மேலும் மக்களின் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் விட முக்கியமாக இதில் அப்பர் மற்றும் மிடில் பெர்த்களுக்கு ஏறும் ஏணிகளின் டிசைன் நவீனமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்களும் இதை எளிதாகப் பயன்படுத்த முடியும். பழைய மாடலில் சில பெண்கள் அதைப் பயன்படுத்தத் தயக்கம் காட்டி வந்தனர். சிலர் பயந்துவந்தனர். ஆனால் புதிய 3 டயர் ஏசி எகானமி கிளாஸ் இந்த பிரச்சனையைச் சரி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


இந்திய ரயில்வே 2021 ஆம் ஆண்டில் ஏசி-3 எகானமி பெட்டிகளை இயக்கத் தொடங்கியது, அதில் நவீன வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்களில் 3 ஏசி எகனாமி கோச் வசதி உள்ளது. IRCTC இணையதளத்தில் 3E கோச்சில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். முன்பதிவின் போது, ​​ஸ்லீப்பர் கோச்சுக்குப் பிறகு, 3E கோச்சில் முன்பதிவு செய்யும் சாய்ஸ் உள்ளது.


மேலும் படிக்க | ஆதார் அட்டை பயனர்களுக்கு மிகப்பெரிய செய்தி, உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ