இந்திய ரயில்வே ஸ்லீப்பர்களுடன் கூடிய ஏசி அல்லாத வந்தே சாதாரண் ரயில் சேவையை  தொடக்கநடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்தியாவில் குறைவான கட்டணத்தில் பயணிகளுக்கான பொது சேவையை வழங்க உள்ளது. இந்த திட்டத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீண்ட காலமாக நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், தற்போது இதற்கான திட்ட வரைபடத்தை தயாரித்திருப்பதாகவும் அறிக்கை கூறுகிறது, இது அவர்களின் நீண்ட இரயில் பயணங்களை எளிதாகவும், குறைந்த கட்டணம் கொண்ட பயணமாகவும் மாற்றும் வகையில் பரந்த மக்களுக்கு சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை ICF தொழிற்சாலை


ஏசி அல்லாத வந்தே சாதாரண் ரயில்களில் பயோ டாய்லெட், தானாக மூடும் கதவு, அதிக வேகம், சிசிடிவி கேமரா என வந்தே பாரத்தில் உள்ள எல்லா வசதிகளும் இருக்கும். ஆனால் இதில் ஏசி இருக்காது. இதனால் கணிசமான கட்டணம் குறையும். சென்னையில் ICF தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் என்றும், இந்த திட்டத்திற்கு சுமார் 64 கோடி முதல் 65 கோடி ரூபாய் வரை செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், முழு ஏசி வந்தே பாரத் ரயிலுடன் ஒப்பிடும்போது முதலீடு இன்னும் குறைவாகவே உள்ளது. வந்தே பாரத் ரயில்களுக்கு  ஒட்டுமொத்தமாக ரூ.100 கோடி செலவாகும்.


ஏசி இல்லாத வந்தே சாதாரண் ரயில் அறிமுகம்


ஏசி இல்லாத வந்தே சாதாரண் ரயில்கள் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் பொதுமக்கள் நீண்ட பயணங்களையும், குறைந்த செலவிலான ரயில் சேவையையும் அனுபவிக்கலாம்  என்று அறிக்கை கூறுகிறது. வந்தே பாரத் சாதாரண் ரயில்களை இயக்க செலவு அதிகமாக குறைவதால் டிக்கெட் கட்டணம் பாதிக்கு பாதி குறையும். இந்த சாதாரண் ரயிலில் ஜன்னல்கள் திறக்கும் வகையில் இருக்கும். இதனால் ஏசிக்கு பதிலாக வெளிக்காற்றினை அனுபவிக்கலாம். வந்தே பாரத் ரயில் கட்டணம் அதிகம் இருப்பதாக புகார் வைக்கப்பட்ட நிலையில் வந்தே பாரத் சாதாரண் ரயில் கொண்டு வரப்பட உள்ளது.


ஏசி அல்லாத வந்தே சாதாரண் ரயில்கள்


 வந்தே சாதாரண் ரயிலில்கள் அதிக வேக ரயில்களாக இருக்கும் வகையில்  24 LHB பெட்டிகள் மற்றும் ரயிலின் இரு முனைகளிலிருந்தும் இரண்டு இன்ஜின்கள் இருக்கும். இது ஆக்ஸிரேட்டரி விகிதத்தைக் கட்டுப்படுத்த இரண்டு இயந்திரங்களுடனும் புஷ்-புல் அணுகுமுறையைப் பயன்படுத்தும். ஏசி அல்லாத வந்தே சாதாரண் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு நல்ல பயண அனுபவத்தை வழங்கும் வகையில், வரவிருக்கும் வந்தே  சாதாரண் ரயிலில் பயணிகள் தகவல் அமைப்பு, இருக்கைகளுக்கு அருகில் சார்ஜிங் பாயின்ட்கள் போன்ற பல நவீன வசதிகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | அனைவரும் எதிர்பார்க்கும் வந்தேபாரத் ஸ்லீப்பர் ரயில் எப்போது... அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!


இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள்


வந்தே பாரத் ரயில்களில், தற்போது வெறும் இருக்கை வசதி கொண்ட  ரயில்கள் மட்டுமே உள்ளன. நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் மொத்த ரயில்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அங்கே ரயில்கள் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்தது. இந்த நிலையில் தற்போது படுக்கை வசதி கொண்ட ரயில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனால் விரைவில் படுக்கை வசதிகளுடன் கூடிய 'வந்தே பாரத்' ரயில் அமலுக்கு வர போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


படுக்கை வசதி கொண்ட 'வந்தே பாரத்' ரயில்


படுக்கை வசதிகளுடன் கூடிய 'வந்தே பாரத்' ரயில் முக்கியமாக திருநெல்வேலி - சென்னை இடையே இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னை முதல் பெங்களூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ள நிலையில், முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே இருக்கும் இரு நகரங்களுக்கு இடையில் திறக்கப்பட்டு உள்ளது. சென்னை கோவை வந்தே பாரத் ரயில் மூலம் 6 மணி நேரத்தில் கோவை செல்ல முடியும்.


மேலும் படிக்க | Indian Railways: ‘இந்த’ ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் ஒரு பைசா கூட திரும்ப கிடைக்காது!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ