நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இந்த ரயில்கள் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களும் வந்தே பாரத் ரயில் சேவையினால் இணைக்கப்பட்டுள்ளன. சொகுசு வசதிகள் நிறைந்த இந்த ரயில்கள் பயணிகளுக்கு சுகமான பயணத்தை வழங்குகிறது. எனினும் அவற்றின் கட்டணம் மிக அதிகம். வந்தே பாரத் ரயில்கள் பல வழித்தடங்களில் நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதற்கு இதுவே காரணமாக இருக்கலாம். இருப்பினும், இப்போது சில வந்தே பாரத் ரயில்களின் கட்டணத்தை குறைக்க ரயில்வே தயாராகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சில வழித்தடங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களின் கட்டணம் குறைக்கப்படலாம்


குறைவான பயணிகளைக் கொண்ட சில குறுகிய தூர வந்தே பாரத் ரயில்களின் கட்டணத்தை ரயில்வே மறுஆய்வு செய்து வருவதாகவும், இதனால் கட்டணங்கள் குறைக்கப்படலாம் என்றும் சில ஆதாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன. அதிகாரபூர்வ தரவுகளின்படி, இந்த செமி-அதிவேக ரயிலின் பெரும்பாலான வழித்தடங்களில் பயணிகள் முழுமையாக பயன்படுத்து வருகின்றனர். மேலும், டிக்கெட் கிடைப்பதில் சிரமம் என்ற வகையில் தான் உள்ளது. ஆனால், இந்தூர்-போபால், போபால்-ஜபல்பூர் மற்றும் நாக்பூர்-பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் போன்ற சில வழித்தடங்களில் பயணிகள் மிகவும் குறைவாக பயன்படுத்துகின்றனர். இதனால் சில ரயில்களின் கட்டணம் குறைக்கப்படலாம் என்று செய்திகள் உள்ளன.


ஜூன் மாத இறுதித் தரவுகளின்படி, போபால்-இந்தூர் வந்தே பாரத் ரயில் சேவையின் 29 சதவீத இருக்கைகள் மட்டுமே பதிவு செய்தது, அதே சமயம் இந்தூர்-போபால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், மறு வழி பயணத்தில் 21 சதவீதம் மட்டுமே இருக்கைகள் நிரப்பப்பட்டிருந்தன. இரண்டு நகரங்களுக்கு இடையேயான பயணம் சுமார் மூன்று மணி நேரம் ஆகும், மேலும் ஒரு பயணிக்கு ஏசி நாற்காலி கார் டிக்கெட்டுக்கு ரூ 950 மற்றும் எக்ஸிகியூட்டிவ் நாற்காலி காருக்கு ரூ 1525 செலவாகும். இந்த ரயிலின் கட்டணம் பெருமளவு குறைக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.


வந்தே பாரத் ரயில்கள்


இந்தூரில் இருந்து போபால் வழித்தடத்தில் இயங்கும் வந்தே பாரத் ரயிலில் முதல் நாள் அதாவது ஜூன் 27 அன்று மொத்தம் 47 பயணிகள் மட்டுமே பயணம் செய்தனர், அதே நேரத்தில் ரயிலில் 530 பயணிகள் அமரும் வசதி உள்ளது. எக்சிகியூட்டிவ் வகுப்பில் ஆறு பயணிகள் மட்டுமே பயணம் செய்தனர். மறுபுறம், ஜூன் 28 அன்று, ரயிலில் மொத்தம் 109 பேர் பயணம் செய்தனர், அவர்களில் 103 பேர் எகானமி வகுப்பிலும் 06 பேர் எக்சிகியூட்டிவ் வகுப்பிலும் இருந்தனர். ஜூன் 29ஆம் தேதியும் 107 பயணிகள் மட்டுமே ரயிலில் பயணம் செய்தனர்.


நாக்பூர்-பிலாஸ்பூர் வந்தே பாரத்


இது தவிர, நாக்பூர்-பிலாஸ்பூர் வந்தே பாரத் விரைவு இரயிலின் கட்டணம் மதிப்பாய்வு செய்யப்படும் . இந்த ரயிலில் சராசரியாக 55 சதவீதம் பேர் பயணிக்கின்றனர். சுமார் 5 மணி 30 நிமிடங்கள் பயணிக்கும் இந்த ரயிலின் கட்டணம் குறைக்கப்பட்டால் நிலைமை இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. நாக்பூர்-பிலாஸ்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் எக்சிகியூட்டிவ் வகுப்பிற்கான கட்டணம் ரூ.2,045 ஆகவும், நாற்காலி வசதி கொண்ட வகுப்பின் கட்டணம் ரூ.1,075 ஆகவும் உள்ளது. ஆட்கள் குறைவாக இருந்ததால், மே மாதம் இந்த ரயிலுக்கு பதிலாக தேஜாஸ் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டது.


மேலும் படிக்க | அனைவரும் எதிர்பார்க்கும் வந்தேபாரத் ஸ்லீப்பர் ரயில் எப்போது... அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!


போபால்-ஜபல்பூர் வந்தே பாரத்


அதே சமயம் போபால்-ஜபல்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் 32 சதவீத இருக்கைகளும், திரும்பும் பயணத்தில் ஜபல்பூர்-போபால் வந்தே பாரத் சேவையில் 36 சதவீத இருக்கைகளும் நிரம்பியதால் கட்டணம் குறைய வாய்ப்பு உள்ளது. போபாலில் இருந்து ஜபல்பூருக்கு ஏசி நாற்காலி காரின் கட்டணம் ரூ. 1055, எக்ஸிகியூட்டிவ் நாற்காலி கார் டிக்கெட்டின் விலை ரூ. 1880, இரண்டு நகரங்களுக்கு இடையே 4.5 மணி நேர பயணத்தில். திரும்பும் பயணத்திற்கான ஏசி நாற்காலி கட்டணம் ரூ. 955, எக்ஸிகியூட்டிவ் நாற்காலி கார் டிக்கெட்டின் விலை ரூ.1790. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் நீண்ட பயணம் சுமார் 10 மணி நேரம் மற்றும் குறுகிய பயணம் மூன்று மணி நேரம் ஆகும்.


வந்தே பாரத் இதுவரை 24 மாநிலங்களை எட்டியுள்ளது


46 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவைகள் நாட்டின் அனைத்து ரயில் - மின்மயமாக்கப்பட்ட மாநிலங்களுக்கும் சென்றடைந்துள்ளன. மொத்தம் 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள், செமி அதிக வேக ரயிலாக இருப்பதன் காரணமாக தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வருகிறது.


சில வந்தே பாரத் ரயில்களுக்கு நல்ல வரவேற்பு


நாட்டில் இயங்கும் அனைத்து வந்தே பாரத் ரயில்களிலும், வந்தே பாரத் ரயில் காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரையிலான ரயிலுக்கு மிக அதிக வரவேற்பை பதிவி செய்துள்ளது 183 சதவீத டிமாண்ட் பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில், திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை வந்தே பாரத் ரயில் எண் இரண்டில், அதன் டிமாண்ட் 176 சதவீதமாக இருந்தது, அதைத் தொடர்ந்து காந்திநகர்-மும்பை சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (134 சதவீதம்), மும்பை சென்ட்ரல்-காந்திநகர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (129 சதவீதம்), வாரணாசி-புது டெல்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (128 சதவீதம்), புது டெல்லி-வாரணாசி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (124 சதவீதம்), டேராடூன்-அமிர்தசரஸ் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (105 சதவீதம்), மும்பை-ஷோலாப்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (111 சதவீதம்), சோலாப்பூர்-மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (104 சதவீதம்) டிமாண்டுடன் இயங்குகிறது.


வந்தே பாரத் ரயில்களில் உள்ள வசதிகள் 


வந்தே பாரத் ரயிலில் அதிநவீன வசதிகள் உள்ளன. இவற்றில் ஜிபிஎஸ் அடிப்படையிலான தகவல் அமைப்பு, சிசிடிவி கேமராக்கள், வெற்றிட அடிப்படையிலான பயோ டாய்லெட், தானியங்கி ஸ்லைடிங் கதவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. புதிய அம்சங்களுடன், அடுத்த தலைமுறை வந்தே பாரத் 2.0 ரயிலில் கவாச் (ரயில் மோதல் தவிர்ப்பு அமைப்பு) வசதி உள்ளது. இதன் கீழ், ஒவ்வொரு பெட்டியிலும் நான்கு அவசரகால சாளரங்களைச் சேர்ப்பது கூடுதல் பாதுகாப்பை வழங்கும்.


மேலும் படிக்க | Indian Railways: ‘இந்த’ ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் ஒரு பைசா கூட திரும்ப கிடைக்காது!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ