ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் எடுப்பவரா... இந்த ரூல்ஸ் தெரியாவிட்டால் அபராதம் உறுதி!
Indian Railways: ஆன்லைன் வழியாக நீங்கள் முன்பதிவில்லாத பொதுப்பிரிவு டிக்கெட்டை எடுத்தால் அது சில மணிநேரங்களிலேயே காலாவதியாகிவிடும். எனவே, இதுகுறித்த முழுமையான விதிமுறைகள் தெரிந்துகொள்வது அவசியம்.
Indian Railways, General Ticket Online Booking Rules: இந்திய ரயில்வே பல லட்சக்கணக்கான மக்களுக்கு தினந்தோறும் இடைவிடாமல் ரயில் சேவையை வழங்கி வருகிறது எனலாம். இந்திய ரயில்லேவ உலகம் அளவில் நான்காவது மிகப்பெரிய ரயில்வே அமைப்பு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதுவும் இந்தியா போன்ற ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் இருக்கும், மக்கள் தொகை அதிகம் இருக்கும் இடங்களில் ரயில்வே பல சவால்களை சந்திக்க வேண்டிவரும்.
அத்தகைய சவால்களையும் சமாளித்து தினமும் நூற்றுக்கணக்கான ரயில்கள் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் சென்று வருகின்றன. நீண்ட தூரம் பயணிக்க விரும்புபவர்களுக்கு ரயிலே முதல் சாய்ஸ் ஆக இருக்கிறது. காரணம் ரயிலில் வழங்கப்படும் பலதரப்பட்ட சேவைகள் எனலாம்.
இந்திய ரயில்வே வழங்கும் பலதரப்பட்ட சேவைகள்
நீங்கள் எக்ஸ்பிரஸ் ரயில் பயணித்தால் மூன்று விதமான குளிர்சாதன பெட்டிகளில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் அல்லது குளிர்சாதன வசதியின்றி படுக்கை வசதி கொண்ட டிக்கெட்டை முன்பதிவு செய்தும் பயணிக்கலாம். இவை ஏதும் தேவையில்லை என்றால் பொதுப்பிரிவிலும் டிக்கெட் பயணிக்கலாம். இப்படி பல்வேறு தரப்பு மக்களையும் ஈர்ப்பதால்தான் ரயில்களில் மக்கள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கிறது.
மேலும் படிக்க | ரயில்வேயின் விகல்ப் திட்டம்... வெயிட்டிங் லிஸ்ட் பயணிகள் கன்பர்ம் டிக்கெட் பெறலாம்
முன்பதிவு செய்து பயணிக்க வேண்டும் என்றால் அதற்கான கட்டணம் பொதுப்பிரிவை விட கூடுதலாக இருக்கும். மேலும் தற்போதைய புதிய விதிமுறைகளின்படி 60 நாள்கள் வரை உங்களின் பயணங்களை திட்டமிட்டு முன்பதிவு செய்துகொள்ளலாம். நீங்கள் ரயில் நிலைய கவுண்டரிலும் முன்பதிவு செய்யலாம், சற்றே கூடுதல் ஆன்லைன் கட்டணத்துடன் IRCTC செயலி, இணையதளம் அல்லது மற்ற ரயில் முன்பதிவு செயலிகளில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
UTS செயலி வழியாகவும் டிக்கெட் எடுக்கலாம்
முன்பதிவு மட்டுமின்றி தற்போதெல்லாம் முன்பதிவில்லாத பொது டிக்கெட்டையும் நீங்கள் ஆன்லைனிலேயே UTS செயலி மூலம் எடுத்துக்கொள்ளலாம். முன்பெல்லாம் கவுண்டர்களின் நீண்ட கூட்டத்திற்கு மத்தியில், நீண்ட நேரம் நின்று டிக்கெட் எடுக்க வேண்டும். தற்போது இதுபோன்ற சிரமங்களை குறைக்க UTS செயலி மூலமே நீங்கள் டிக்கெட்டை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அதிலும் சில விதிமுறைகள் இருக்கின்றன.
முன்பதிவு டிக்கெட்டை போன்ற பல நாள்களுக்கு முன்னரே உங்களால் இந்த பொதுப்பிரிவு டிக்கெட்டை எடுக்க முடியாது. இந்த டிக்கெட் எடுத்துவிட்டால் குறிப்பிட்ட மணிநேரத்தில் அது காலாவதியாகிவிடும். அதன்பின் நீங்கள் அந்த டிக்கெட்டுடன் ரயிலில் பயணித்தால், டிக்கெட் பரிசோதகர் உங்களுக்கு அபராதம் விதிப்பார். எனவே, பொதுப்பிரிவு டிக்கெட்டை UTS செயலியில் எடுத்தால் எத்தனை மணிநேரம் அதனை பயன்படுத்தலாம்?, காலாவதியான பின்னர் பயணித்தால் எவ்வளவு அபராதம் விதிக்கப்படும் ஆகியவை குறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம்.
பொதுப்பிரிவு டிக்கெட் விதிமுறைகள்
நீங்கள் பொதுப்பிரிவுக்கான டிக்கெட்டை UTS செயலி மூலம் ஆன்லைனில் எடுத்துவிட்டீர்கள் என்றால் 3 மணிநேரத்திற்குள் அந்த டிக்கெட் செல்லுபடியாகும் ரயிலில் ஏறிவிட வேண்டும். அதற்கு பின்னர் ரயில் டிக்கெட் காலாவதியாகிவிடும். டிக்கெட் காலாவதியாகிவிட்ட பின்னர் நீங்கள் ரயிலில் பயணிப்பது, டிக்கெட் இன்றி பயணிப்பதற்கு சமமாகும். இதனை டிக்கெட் பரிசோதகர் கண்டறிந்துவிட்டால் உங்களிடம் அபராதம் விதிக்கப்படும்.
காலாவதியான டிக்கெட் உடன் பயணித்தால் இந்திய ரயில்வே விதிமுறையின்படி 250 ரூபாய் அபராதமாக விதிக்கப்படும். அதேநேரத்தில் நீங்கள் திருநெல்வேலி முதல் மதுரை வரை செல்கிறீர்கள் என்றால் அதற்கான ரயில் கட்டணத்தையும் டிக்கெட் பரிசோதகரிடம் செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க | IRCTC Super App: டிக்கெட் முன்பதிவு முதல் உணவு ஆர்டர் வரை... All-in-One செயலி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ