புதுடெல்லி: சுத்தம் சோறு போடும் என்பது பழமொழி, ஆனால் சுத்தம் கோடிக்கணக்கான பணத்தை சேமிக்கும் என்பதற்கான நிதர்சனமான உதாரணமாக இருக்கிறது.  எச்சிலை சுத்தப்படுத்த இந்திய ரயில்வே ஆண்டுதோறும் 1200 கோடி ரூபாய் செலவு செய்கிறதாம்! அதனால் ரயில் நிலையங்களை பராமரிக்க புதிய வழிமுறைகளை மேற்கொள்கிறது இந்திய ரயில்வே.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரயில்வே வளாகத்தில் மக்கள் எச்சில் துப்புவதைத் தடுப்பதற்காக, 42 ரயில் நிலையங்களில் விற்பனை இயந்திரங்கள் அல்லது கியோஸ்க்குகள் அமைக்கப்பட்டு ரூ. 5 முதல் ரூ .10 வரை எச்சில் துப்புவதற்கான பைகள் வழங்கப்படுகின்றன.  


கோவிட் -19 தொற்றுநோய்களின் போது சற்றே கடுமையான நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் இந்தியாவில் பொது இடங்களில் எச்சில் துப்புவது பெரும் தொல்லையாக இருக்கிறது, அதனால்தான் இந்த சமீபத்திய பசுமை கண்டுபிடிப்பை ரயில்வே முன்னெடுத்துள்ளது. 


Also Read | ஆட்சியில் நீடிப்பது குறிக்கோள் அல்ல – அமித் ஷா


மீண்டும் பயன்படுத்தக்கூடிய மற்றும் மக்கும் தன்மை கொண்ட எச்சில் துப்பும் பைகள் கொடுக்கப்படும். அதில் விதைகள் இருக்கும். குப்பைக்கு போனாலும் அந்த பைகள் மக்கி, விதைகள் மூலம் தாவரங்களாக வளரும். கறைகள் ஏற்படும் பிரச்சனையும் இல்லை.


குறிப்பாக பான், குட்கா, வெற்றிலை மற்றும் புகையிலை பயன்படுத்துபவர்கள், ரயில் நிலைய வளாகத்தில் துப்புவதால் ஏற்படும் கறைகள் மற்றும் அடையாளங்களை சுத்தம் செய்வதற்காக இந்திய ரயில்வே ஆண்டுதோறும் 1,200 கோடி ரூபாய் மற்றும் மிக அதிக அளவிலான தண்ணீரை செலவிடுகிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


ரயில்வே வளாகத்தில் எச்சில் துப்புவதைத் தடுக்க, 42 நிலையங்களில் விற்பனை இயந்திரங்கள் அல்லது கியோஸ்க்குகள் அமைக்கப்பட்டு ரூ. 5 முதல் ரூ. 10 வரை ஸ்பிட்டூன் பையை வழங்குகின்றன. மேற்கு, வடக்கு மற்றும் மத்திய ரயில்வே மண்டலங்களில், EzySpit வைக்கப்படும். இந்த ஸ்பிட்டூன்களை (spittoons) எளிதில் பாக்கெட்டுகளில் எடுத்துச் செல்லலாம். அப்போது பயணிகள் விரும்பிய இடத்திலும், எங்கு வேண்டுமானாலும் துப்பிவிட முடியும்.


இது ரயில்வே மற்றும் பயணிகளுக்கு கிடைத்த வெற்றி. கட்டணமில்லா வருவாய் திட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தத்தை ரயில்வே தொடங்கியுள்ளது. சுத்தம் மேம்படுத்தப்படுவதோடு, இந்தத் திட்டத்தில், புதுமையும் ஊக்குவிக்கப்படுகிறது.


பயணிகள், குறிப்பாக முதியவர்கள், இதனால் பெரிதும் பயனடைவார்கள். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த கண்டுபிடிப்பு மக்களை ரயில் வளாகத்தில் எச்சில் துப்புவதைத் தடுக்கிறது, இது எங்களுக்கு மிகப்பெரிய ஆதாயமாகும் என்று ஒரு ரயில்வே அதிகாரி கூறினார். தற்போது, ரயில்வே வளாகத்தில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.  


Also Read | இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை விவகாரம்; உண்மை என்ன?


இது எப்படி வேலை செய்கிறது?
இந்த தயாரிப்பு மேக்ரோமோலிகுல் கூழ் (macromolecule pulp technology) தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இதை பயன்படுத்துபோது உமிழ்நீரில் இருக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை லாக் செய்யக்கூடிய ஒரு பொருள் இதில் உள்ளது.  


இந்த மக்கும் பைகள், வெவ்வேறு அளவுகளில் கிடைக்கும். 15 முதல் 20 மடங்கு வரை மீண்டும் பயன்படுத்தக்கூடியவை, விதைகளையும் சேர்த்து உமிழ்ந்து உறிஞ்சும் பொருளாகவும், திடப்பொருளாகவும் மாறும். ஒருமுறை பயன்படுத்திய பிறகு, இந்த பைகள் மண்ணில் போடப்படும்போது தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
நாக்பூரைச் சேர்ந்த நிறுவனம் ஏற்கனவே EzySpit விற்பனை இயந்திரங்களை நிலையங்களில் நிறுவத் தொடங்கியுள்ளது. அவர்கள் நாக்பூர் மாநகராட்சி மற்றும் அவுரங்காபாத் மாநகராட்சியுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.


ஸ்பிட்டூன்கள் மூன்று வகைகளில் கிடைக்கின்றன - பாக்கெட் பைகள் (10 முதல் 15 முறை மீண்டும் பயன்படுத்தக்கூடியவை), மொபைல் கொள்கலன்கள் (மீண்டும் பயன்படுத்தக்கூடியவை 20,30,40 முறை) மற்றும் ஸ்பிட் தொட்டிகள். மனித எச்சிலில் இருந்து தாவரங்களை வளர்ப்பதற்கான முயற்சி அனைவராலும் பாராட்டப்படுகிறது.


ALSO READ |  அடுத்த 3 மாதங்களுக்கு கவனம் தேவை: எச்சரிக்கும் சுகாதாரச் செயலர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR