இந்திய ரயில்வே: ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. ரயில் பயணத்தில், டிக்கெட் மற்றும் பெர்த் தொடர்பாக அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது. பயணத்தின் போது கீழே இருக்கும் லோயர் பெர்த் தேவைப்படும் நபராக நீங்கள் இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய ரயில்வே ரயில்களில் பயணம் செய்யும் போது மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த் முன்னுரிமை அளிக்கிறது. ஆனால் பலமுறை டிக்கெட் முன்பதிவின் போது மூத்த குடிமக்களுக்கான கோரிக்கை விடுத்த பிறகும் கீழ் பெர்த் கிடைக்காத நிலையும் ஏற்படுவதுண்டு. இதனால் அவர்களுக்கு பயணத்தில் சிரமங்கள் ஏற்படுகின்ன. 


ஆனால் இப்போது நீங்கள் லோயர் பெர்த் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. லோயர் பர்த் கிடைப்பதை எவ்வாறு உறுதி செய்வது என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. 


மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த் கிடைக்கும்


ட்விட்டரில் பயணி ஒருவர் இந்திய ரயில்வேயிடம் மூத்த குடிமக்களுக்கு ஏற்படும் இந்த பிரச்சனை பற்றி கூறி, இது ஏன் நடக்கிறது என கேள்வி எழுப்பி, இதை சரிசெய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை டேக் செய்து, அவர், 'சீட் ஒதுக்கீட்டின் லாஜிக் என்ன? நான் மூன்று மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த் முன்னுரிமையில் டிக்கெட் புக் செய்திருந்தேன். அப்போது 102 பெர்த்கள் இருந்தன. இருப்பினும் அவர்களுக்கு மிடில் பெர்த், அப்பர் பெர்த் மற்றும் சைட் லோயர் பர்த்களே கிடைத்தன. நீங்கள் இதை சரி செய்ய வேண்டும்.' என எழுதியிருந்தார்.


மேலும் படிக்க | ரயிலில் தூங்குவதற்கான விதிகளில் மாற்றம்..! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் 


இதற்கு இந்திய ரயில்வே ட்வீட் மூகம் தனது பதிலை தெரிவித்தது. 


ஐஆர்சிடிசி-யின் பதில் என்ன?


இந்தக் கேள்விக்கு ஐஆர்சிடிசி ட்விட்டரில் பதில் அளித்துள்ளது. ஐஆர்சிடிசி தனது பதிலில், 'ஐயா, லோயர் பெர்த்கள்/மூத்த குடிமக்கள் ஒதுக்கீட்டு பெர்த்கள் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்கள் தனித்து அல்லது இருவராக பயணிக்கும் போது (ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் நியமங்கள் பொருத்து) இது கிடைக்கும்.' என தெரிவித்தது.


இரண்டுக்கும் அதிகமான மூத்த குடிமக்கள் இருந்தாலோ, அல்லது, ஒருவர் மூத்த குடுமக்கள் பிரிவிலும், மற்றவர் அந்த பிரிவில் வராமல் இருந்தாலும், முன்பதிவு அமைப்பு இதை கருத்தில் கொள்ளாது என்றும் ஐஆர்சிடிசி கூறியுள்ளது. 


மேலும் படிக்க | Restaurant on wheels: ரயில் பெட்டியை உணவமாக மாற்றி அசத்தும் நாக்பூர் ரயில்வே! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR