ரயில்களில் கேட்டரிங் சேவைகள் விலை உயர்வு: ரயில் பயணிகளுக்கு ஒரு முக்கிய செய்தி!! நீங்கள் ராஜ்தானி, சதாப்தி, தேஜஸ், வந்தே பாரத் மற்றும் துரந்தோ போன்ற ரயில்களில் பயணம் செய்பவராக இருந்தால், இந்தச் செய்தி உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். அண்மைக்காலமாக ரயில் பயணத்தின் போது தேநீரின் விலையை விட அதிகமாக இருந்த சேவைக் கட்டணம் குறித்த விவகாரம் வெளியாகியிருந்தது. அந்த நேரத்தில் இந்த பில்லின் புகைப்படம் சமூக ஊடகங்களில் மிகவும் வைரலானது. இதனால் இந்திய ரயில்வே கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இப்போது இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க, உணவுப் பொருட்களின் விலைப் பட்டியலை ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ளது. இனி ரயிலில் உணவு ஆர்டர் செய்தால், போர்டிங் கட்டணம் செலுத்த வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உணவும் பானமும் விலை உயர்ந்தது!


ராஜ்தானி, சதாப்தி, தேஜஸ், வந்தே பாரத் மற்றும் துரந்தோ போன்ற ரயில்களில் ஆன்-போர்டு கேட்டரிங் சேவைகளுக்கான புதிய கட்டண பட்டியலை ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது கேட்டரிங் சேவையை தேர்வு செய்யாமல், ரயிலில் உணவு மற்றும் பானங்களை ஆர்டர் செய்யும் பயணிகள், ஆன் போர்ட் கட்டணத்தை செலுத்த வேண்டும் என ரயில்வே வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவு பொருட்கள் விலை உயர்ந்துள்ளன.


மேலும் படிக்க | Indian Railways: சேவை கட்டணம் ரத்து ரயில் பயணிகள் நிம்மதி


ஆன் போர்ட் ஆர்டர் செய்தால் அதிக விலை


ராஜ்தானி உட்பட இந்த ஐந்து ரயில்களில், பயணிகள் காலை உணவு மற்றும் மதிய உணவுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பணம் செலுத்துகிறார்கள். அல்லது டிக்கெட்டுடன் பணம் செலுத்தவில்லை என்றால், அவர்கள் ரயிலிலேயே ஆர்டர் செய்து உணவுப் பொருட்களை வாங்குகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், பயணத்தின் போது ஆர்டர் செய்யப்படும் உணவு மற்றும் பானத்திற்கு எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும். விலை பட்டியல் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.


ராஜ்தானி, துரந்தோ மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸில் உணவு மற்றும் பானங்களின் பட்டியல் மற்றும் கட்டணங்கள்:


- ராஜ்தானி, துரந்தோ மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸின் முதல் வகுப்பு மற்றும் பொருளாதார வகுப்புகளில் ப்ரீபெய்ட் மற்றும் ஆன்-போர்டு காலை தேநீரின் விலை ரூ.35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது கிளாஸ் ஏசி மற்றும் சேர் காரில் இதற்கு ரூ.20 செலுத்த வேண்டும்.


- இதேபோல், ராஜ்தானி, துரந்தோ மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸின் முதல் கிளாஸ் ஏசியில் ப்ரீபெய்டு காலை உணவு ரூ.140க்கு கிடைக்கும். அதே சமயம், ஆன்-போர்டு காலை உணவின் விலை ரூ.190 ஆக இருக்கும். ப்ரீபெய்டு காலை உணவு இரண்டாவது மற்றும் மூன்றாவது கிளாஸ் ஏசியில் ஆன் போர்ட் விலை ரூ.155 ஆகும். 


- இந்த ரயில்களின் முதல் வகுப்பு ஏசி மற்றும் எகனாமி வகுப்பில் ப்ரீபெய்டு முறையில் மதிய-இரவு உணவுக்கான விலை ரூ.245 ஆகும். அதே நேரத்தில், ரயிலில் ஏறியபின் ஆர்டர் செய்யும் போது, ​​இதற்கு நீங்கள் ரூ.295 செலுத்த வேண்டும். இரண்டாவது ஏசி, மூன்றாவது ஏசி கிளாஸ் மற்றும் சேர்காரில், ப்ரீபெய்டுக்கு ரூ.185 மற்றும் ஆன் போர்டில் ரூ.235 செலுத்த வேண்டும்.


- முதல் வகுப்பு ஏசி மற்றும் எகானமி வகுப்பில் மாலை டீ மற்றும் ஸ்நாக்ஸ் கட்டணம் ரூ.140 ஆகும். ரயிலில் ஏறிய பிறகு ஆர்டர் செய்பவர்கள் ரூ.190 செலுத்த வேண்டும். இரண்டாவது வகுப்பு ஏசி, மூன்றாம் வகுப்பு ஏசி மற்றும் சேர் காருக்கு, ப்ரீபெய்டு கட்டணமாக ரூ.90 மற்றும் ஆன் போர்டில் ரூ.140 செலுத்த வேண்டும்.


- துரந்தோ எக்ஸ்பிரஸ் ஸ்லீப்பர் கோச்சில் காலை தேநீருக்கான ப்ரீபெய்டு மற்றும் ஆன்-போர்டு விலை ரூ.15 ஆகும். காலை உணவு ப்ரீபெய்டுக்கு ரூ.65 ஆகவும், ரயிலில் செய்யப்படும் ஆர்டருக்கு ரூ.115 ஆகவும் இருக்கும். மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு, நீங்கள் ப்ரீபெய்டாக ரூ.120 மற்றும் போர்டில் ரூ.170 செலுத்த வேண்டும்.


- தேஜஸ் ரயிலின் முதல் ஏசி வகுப்பு மற்றும் எகானமி வகுப்பில் நீங்கள் பயணம் செய்தால், காலை உணவுக்கு ரூ.155 (ப்ரீபெய்ட்) செலுத்த வேண்டும். அதே நேரத்தில், ஆன் போர்டில் ஆர்டர் செய்யும் போது, ​​அதன் விலை ரூ.205 ஆக இருக்கும். இதேபோல், இரண்டாவது ஏசி, மூன்றாவது ஏசி மற்றும் சேர் காருக்கு ரூ.122 (ப்ரீபெய்டுக்கு) மற்றும் ஆன்-போர்டு ஆர்டருக்கு ரூ.172 செலுத்த வேண்டும்.


வந்தே பாரத் ரயில் பயணிகளுக்கான கட்டண பட்டியல்


- வந்தே பாரத் பயணிகள் காலை தேநீருக்கு 15 ரூபாய் செலுத்த வேண்டும். காலை உணவுக்கு, ப்ரீபெய்டாக ரூ.155 மற்றும் ஆன் போர்டில் ரூ.205 செலுத்த வேண்டும். 


- மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு, நீங்கள் ப்ரீபெய்டாக ரூ.244 மற்றும் ஆன்-போர்டு ஆர்டர்களுக்கு ரூ.272 செலுத்த வேண்டும். மாலை டீ மற்றும் சிற்றுண்டிகளுக்கு, முதல் ஏசி மற்றும் எகானமி வகுப்பு பயணிகள் ப்ரீபெய்டாக ரூ.105 செலுத்த வேண்டும். நீங்கள் ஆன் போர்ட் ஆர்டர் செய்தால், இந்த விலை ரூ.155 ஆக உயரும்.


இந்த வேளைகளில் டீ, காபி ரூ.8-க்கு கிடைக்கும்


ராஜ்தானி எக்ஸ்பிரஸ், துரந்தோ எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ், தேஜஸ் எக்ஸ்பிரஸ், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்கள் தாமதமாக சென்றால், டீ, காபி கட்டணம் ரூ.8 ஆக இருக்கும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் காலை மற்றும் மாலை டீ 30 ரூபாய்க்கு கிடைக்கும்.


மேலும் படிக்க | Indian Railways: 129 ரயில்களை இன்று ரத்து செய்தது இந்திய ரயில்வே, முழு பட்டியல் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ