தட்கலில் டிக்கெட் புக் பண்றீங்களா... இந்த விஷயங்களை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க
Tatkal Ticket Rules: ரயில்வேயில் சாதாரண முன்பதிவு மூலம் டிக்கெட் பெற முடியாதவர்களுக்கும், திடீர் அல்லது அவசர கால பயணிகளுக்கும் உதவும் வகையில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை இந்திய ரயில்வே வழங்குகிறது
ரயில்வேயில் சாதாரண முன்பதிவு மூலம் டிக்கெட் பெற முடியாதவர்களுக்கும், திடீர் அல்லது அவசர கால பயணிகளுக்கும் உதவும் வகையில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை இந்திய ரயில்வே வழங்குகிறது. தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு மூலம் கடைசி நிமிடத்தில் கூட டிக்கெட் எடுத்து பயணம் செய்யலாம். குறிப்பாக திடீர் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இது உதவிகரமாக இருக்கும்.
தட்கல் டிக்கெட்டை ரயில் புறப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக முன்பதிவு செய்யலாம். ஆனால் இதற்காக அவர்கள் சற்று அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். தட்கல் டிக்கெட் முன்பதிவு என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை முழுமையாக அறிந்து கொள்ளலாம்
தட்கல் டிக்கெட் முன்பதிவினை ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் ஆன்லைனில் மேற்கொள்ளலாம். நீங்கள் விரும்பினால், ரயில் நிலையத்திற்குச் சென்று முன்பதிவு செய்யலாம்.
தட்கல் டிக்கெட் முன்பதிவு விதிகள்
தட்கல் டிக்கெட் முன்பதிவை எளிதாகவும் வேகமாகவும் செய்ய ரயில்வே சில விதிகளை அமல்படுத்தியுள்ளது
1. ஏசி வகுப்பு டிக்கெட் முன்பதிவு காலை 10 மணிக்கும், ஸ்லீப்பர் வகுப்பு டிக்கெட் முன்பதிவு காலை 11 மணிக்கும் தொடங்கும்.
2. IRCTC பயனர் ஐடியிலிருந்து ஒரு மாதத்தில் 6 டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.
3. உங்கள் கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தால், நீங்கள் 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
மேலும் படிக்க | அனைவருக்கும் இலவச பயணம்... இந்த ரயிலில் பயணிக்க டிக்கெட் தேவையில்லை
தட்கல் டிக்கெட் கட்டணம்
பயணத்தின் வகுப்பிற்கு ஏற்ப தட்கல் டிக்கெட் கட்டணம் இருக்கும். ஸ்லீப்பர் வகுப்பிற்கு ரூ.100 முதல் ரூ.200 வசூலிக்கப்படும். ஏசி நாற்காலி கார் வசதிக்கு ரூ.125 முதல் ரூ.225 வரையிலும், ஏசி 3 அடுக்கு பிரிவுக்கு ரூ.300 முதல் ரூ.400 வரையிலும், ஏசி 2 அடுக்கு பிரிவுக்கு ரூ.400 முதல் ரூ.500 வரையிலும் வசூலிக்கப்படும். எக்சிகியூட்டிவ் வகுப்பில் பயணம் செய்பவர்களுக்கு , கட்டணம் ரூ.400 முதல் ரூ.500 வரை இருக்கும்.
தட்கல் டிக்கெட் ரத்துசெய்வதற்கான விதிகள்
உங்கள் தட்கல் டிக்கெட் கர்பர்ம் ஆன டிக்கெட் என்றால், அதனை ரத்து செய்யும் போது, பணத்தைத் திரும்பப் பெற முடியாது. ஆனால் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பணத்தைத் திரும்பப் பெறலாம்
1. ரயில் மூன்று மணி நேரத்திற்கு மேல் தாமதமாக வந்தால்.
2. ரயிலின் வழித்தடம் மாற்றப்பட்ட நிலையில், பயணிகள் பயணம் செய்ய விரும்பவில்லை.
3. பயணிக்கு அவர் முன்பதிவு செய்த வகுப்பை விட குறைந்த வகுப்பில் இருக்கை வழங்கப்பட்ட நிலையில், அவர் அந்த வகுப்பில் பயணம் செய்ய விரும்பவில்லை என்றால் ரத்து செய்யலாம்.
மேலும் படிக்க | IRCTC புதிய விதிகள்! இனி ஒருவர் இத்தனை டிக்கெட்டிற்கு மேல் புக் செய்ய முடியாது!