கொரோனா தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, ஒவ்வொருவரும் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி அதிக எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் உள்ளனர். தற்காலத்தில் பெரும்பாலானோர் எதிர்காலத்தைப் பாதுகாப்பானதாக்க இன்சூரன்ஸ் பாலிசியின் உதவியை எடுத்துக்கொள்கிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், ஒரு சிறிய தவறு உங்கள் காப்பீட்டுக் கொள்கை நிராகரிக்கப்படுவதற்கு காரணமாகிவிடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம் நீங்கள் படித்தது முற்றிலும் சரி!! 


பாலிசி எடுப்பதற்கு முன், நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல வகையான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் ஆவணங்களை வழங்குகிறது. இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை சரியாகப் படிப்பது மிகவும் முக்கியமாகும். இல்லையெனில், பின்னர் காப்பீட்டைக் கோரும்போது, நீங்கள் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். 


எதிர்காலத்தில் இன்ஷூரன்ஸ் பாலிசியை க்ளெயிம் செய்யும் போது நீங்கள் எந்த விதமான சிக்கலையும் சந்திக்காமல் இருக்க, பாலிசி எடுக்கும்போது இந்த விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்:


1. அனைத்து தகவல்களையும் கொடுக்க வேண்டும்


பாலிசி எடுக்கும்போது பொதுவாக மக்கள் செய்யும் மிகப்பெரிய தவறு என்னவென்றால், நீரிழிவு , உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களைப் பற்றி காப்பீட்டு நிறுவனத்திடம் தெரிவிக்காமல் இருப்பதுதான். நிறுவனம் இந்த நோய்களைப் பற்றி பின்னர் அறிந்தால், அத்தகைய சூழ்நிலையில், தகவலை மறைத்ததற்கான, உங்கள் பாலிசி கோரிக்கையை நிறுவனம் நிராகரிக்கக்கூடும். 


மேலும் படிக்க | Corona vs Insurance: கொரோனா கவச் பாலிசியை செப்டம்பர் வரை நீட்டித்தது IRDAI 


2. சரியான நேரத்தில் பாலிசியை கோர வேண்டும்


ஒவ்வொரு பாலிசிக்கும் க்ளெயிம் செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் உள்ளது. பல நேரங்களில் மக்கள் காலக்கெடு முடிந்த பிறகு க்ளைம் தாக்கல் செய்கிறார்கள். காலக்கெடு முடிந்த பின்னர் கிளெயிம் தாக்கல் செய்தால், பாலிசிதாரரின் கோரிக்கையை நிறுவனம் நிராகரிக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், பாலிசி எடுக்கும் நேரத்தில், செயலாக்க காலம் பற்றிய தகவலை கண்டிப்பாக தெளிவுபடுத்திக்கொள்ளவும். 


3. சரியான நேரத்தில் பிரீமியம் செலுத்த வெண்டும்


பல சமயங்களில் பலர் பாலிசி எடுத்த பிறகு சரியான நேரத்தில் பிரீமியத்தை செலுத்துவதில்லை. பெரும்பாலான நிறுவனங்கள் பிரீமியம் செலுத்துவதில் சில சலுகைகளை வழங்குகின்றன. ஆனால், அந்த சலுகை வரம்பு காலாவதியான பிறகு, அந்த பாலிசியின் கிளெயிமை பெற முடியாது. 


4. சரியான நேரத்தில் நாமினியைத் தேர்ந்தெடுக்கவும்


பாலிசியை எடுக்கும் போது, ​​உங்கள் நாமினியை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் திருமணத்திற்குப் பிறகு, மனைவி, கணவர் மற்றும் குழந்தைகள் பாலிசியில் நாமினி ஆக்க விரும்பினால், அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் காப்பீட்டு நிறுவனத்தைத் தொடர்புகொண்டு உங்கள் நாமினியைப் புதுப்பிக்க வேண்டும். இல்லையெனில், பாலிசியை பின்னர் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.


மேலும் படிக்க | LIC Policy: அசத்தலான இந்த பாலிசியில் 12 ஆம் வகுப்பு வரை ஊக்கத்தொகை கிடைக்கும் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR