Corona Kavach policy: இன்சூரன்ஸ் ரெகுலேட்டர் IRDAI, கொரோனாசிறப்பு பாலிசியின் காலக்கெடுவை செப்டம்பர் 2022 வரை ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.
முன்னதாக இந்த பாலிசி மார்ச் 31, 2022 வரை மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும் என்று இருந்த கட்டுப்பாடு, தற்போது நீக்கப்பட்டு, செப்டம்பர் 30, 2022 வரை வாங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. .
கோவிட்-19 உலகில் பரவத் தொடங்கிய பிறகு, மிகக் குறைந்த பிரீமியத்தில் கொரோனா தொற்றுநோய் தொடர்பான செலவுகளை உள்ளடக்கும் கொரோனா கவாச் பாலிசிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதாக IRDAI தெரிவித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, கட்டுப்பாட்டாளர் இந்த பாலிசியின் கால வரம்பை வாடிக்கையாளர்களுக்கு நீட்டித்துள்ளது.
கொரோனா சிறப்பு பாலிசிகள் செப்டம்பர் 30, 2022 வரை தொடரும் என்று IRDAI ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது, இதில் கொரோனா பாலிசிகளை புதுப்பித்தல் மற்றும் வாங்கும் நடைமுறை அடுத்த 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
குறைந்த பிரீமியம் கொண்ட இந்த கொரோனா பாலிசிகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது எபதுடன் கொரோனா காலத்தில் கோரிக்கணக்கானவர்கள் இந்த பாலிசிகளை வாங்கியுள்ளனர்.
ஏற்கனவே நீட்டிப்பு கிடைத்துள்ளது
IRDAI முன்னதாக கொரோனா பாதிப்பிற்கான இந்த சிறப்பு பாலிசியை (Corona special policy) மார்ச் 31, 2021 வரை அறிவித்திருந்தது, பிறகு அதன் காலக்கெடு பின்னர் மார்ச் 31, 2022 வரை நீட்டிக்கப்பட்டது.
மேலும் படிக்க | COVID தடுப்பூசி பின்விளைவுகளுக்கான மருத்துவ செலவுகள்
கொரோனா கவச் பாலிசி என்றால் என்ன?
பெயர் குறிப்பிடுவது போல், கொரோனா கவச் பாலிசி என்பது கொரோனா வைரசால் ஏற்படும் நோய்க்கான மருத்துவ காப்பீட்டின் தேவையை பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்ட ஒரு மருத்துவ காப்பீட்டு பாலிசியாகும்.
காப்பீட்டிற்கான பாதுகாப்பை நீட்டிப்பதே கொரோனா வைரஸ் மருத்துவ காப்பீட்டின் நோக்கம் ஆகும், கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக மக்கள் போராடுவதற்கு வசதியாக இந்த பாலிசி அறிமுகப்படுத்தப்பட்டது.
இது ஒரு நிலையான பாலிசி என்பதால், கொரோனா கவச் மருத்துவ காப்பீட்டிற்கான கவரேஜ்கள் மற்றும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கின்றன.
கொரோனா கவச் காப்பீட்டுடன் வெவ்வேறு மருத்துவ காப்பீடு பாலிசிகளை ஒப்பிட வேண்டிய அவசியம் இல்லை.
கொரோனா வைரஸ் நெருக்கடியை எதிர்கொள்வதற்கு இந்த பாலிசி பொருளாதார ரீதியில் உங்களுக்கு நிம்மதி கொடுக்கும் பாலிசி இது. இந்த நேரடி COVID-19 மருத்துவ காப்பீட்டுடன், உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நீங்கள் பாதுகாக்கலாம்.
மேலும் படிக்க | மருத்துவ காப்பீடு: 24 மணி நேர ஹாஸ்பிடலைசேஷன் அவசியமா
எவ்வளவு கவர் எடுக்க முடியும்
இந்த பாலிசியில், குறைந்தபட்சம் ரூ.50,000 முதல் அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை காப்பீட்டுத் தொகையைப் (Insurance Amount) பெறுவீர்கள். கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு இந்த பாலிசி சிறப்பாக உருவாக்கப்பட்டது.
பாலிசி காலம்
பாலிசியின் காலம் மூன்றரை மாதங்கள், ஆறரை மாதங்கள் மற்றும் ஒன்பதரை மாதங்கள். இந்த பாலிசியின் பிரீமியம் ரூ.500 முதல் ரூ.6 ஆயிரம் வரை இருக்கும்.
யார் பாலிசி எடுக்கலாம்
18 முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்த பாலிசியை வாங்கலாம். பாலிசி எடுத்த நாளிலிருந்து, 15 நாட்களுக்குப் பிறகு அது நடைமுறைக்கு வந்ததாகக் கருதப்படும்.
மேலும் படிக்க | வயதான பெற்றோருக்கு மருத்துவ காப்பீடு… கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன
பாலிசியில் அடங்கும் செலவுகள்
ICU கட்டணங்கள் மற்றும் மருத்துவரின் ஆலோசனைக் கட்டணங்கள்
மருத்துவமனை படுக்கை கட்டணங்கள் அடங்கும்.
இரத்த பரிசோதனை, பிபிஇ கிட், ஆக்ஸிஜன் செலவு ஆகியவை அடங்கும்.
பரிசோதனை மற்றும் நோயறிதல் செலவுகளும் ஈடுசெய்யப்படுகின்றன.
மருத்துவர் ஆலோசனைக் கட்டணங்களும் இந்தக் கொள்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவமனையில் சேர்ந்தது முதல் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 30 நாட்கள் வரை ஆகும் மருத்துவச் செலவுகள் கிடைக்கும்.
வீட்டிலிருந்தே கொரோனா சிகிச்சை பெற்று கொண்டால், மருந்து மற்றும் கண்காணிப்புச் செலவுகள் 14 நாட்களுக்கு வழங்கப்படும்.
மேலும் படிக்க | கொரோனா காலத்தில் அதிரடி வளர்ச்சி! லாபத்தில் திளைக்கும் காப்பீட்டு நிறுவனங்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR