LIC Policy: அசத்தலான இந்த பாலிசியில் 12 ஆம் வகுப்பு வரை ஊக்கத்தொகை கிடைக்கும்

நீங்கள் பாதுகாப்பான இடத்தில் பணத்தை முதலீடு செய்ய விரும்பினால், உங்கள் எதிர்கால நிதி பாதுகாப்பிற்கு எல்ஐசி முதலீடு ஒரு நல்ல இடமாக இருக்கும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 3, 2021, 04:12 PM IST
LIC Policy: அசத்தலான இந்த பாலிசியில் 12 ஆம் வகுப்பு வரை ஊக்கத்தொகை கிடைக்கும்  title=

LIC Aam Aadmi Beema Yojana: நீங்கள் பாதுகாப்பான இடத்தில் பணத்தை முதலீடு செய்ய விரும்பினால், உங்கள் எதிர்கால நிதி பாதுகாப்பிற்கு எல்ஐசி முதலீடு ஒரு நல்ல இடமாக இருக்கும். எல்ஐசி பாலிசிதாரர் ஒரு வேளை இறந்துவிட்டால், அவர் மறைவுக்குப் பிறகும் அவரது குழந்தைக்கு பாதுகாப்பை அளிக்கும் ஒரு பாலிசியைப் பற்றி இந்த பதிவில் காணலாம். எல்ஐசியின் ஆம் ஆத்மி பீமா யோஜனாவின் பாலிசிதாரர் இறந்துவிட்டால், அவருடைய குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாதமும் 100 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.

குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கும்

இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் ஒருவர் இயற்கையான காரணங்களாலோ அல்லது விபத்து காரணமாகவோ இறந்தால், அவரது குடும்பத்திற்கு காப்பீடு (Insurance) கிடைக்கும். மேலும், இறந்தவர்களின் குறைந்தது 2 குழந்தைகளுக்கு மாதம் 100 ரூபாய் உதவித்தொகை கிடைக்கும். இந்தக் பாலிசியின் மூலம், குழந்தைகள் எந்த இடைவெளியும் இல்லாமல் தங்கள் கல்வியை தொடர்கிறார்கள்.

இந்தத் திட்டம் யாருக்காக உருவாக்கப்பட்டது?

இத்திட்டத்தின் கீழ், செங்கல் சூளை தொழிலாளர்கள், மீனவர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள், கைத்தறி நெசவாளர்கள், கைவினை கைவினைஞர்கள், காதி நெசவாளர்கள், தோல் தொழிலாளர்கள், பெண் தையல்காரர்கள், அப்பளம் செய்யும் தொழிலில் இருப்பவர்கள், பால் உற்பத்தியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், ரிக்ஷா ஓட்டுநர்கள், துப்புறவுத் தொழிலாளர்கள், வனப்பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள், நகர்ப்புறம் ஏழைகள், காகித உற்பத்தியாளர்கள், விவசாயிகள், அங்கன்வாடி ஆசிரியர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள் ஆகியோர் முதலீடு செய்யலாம்.

ALSO READ: இப்போது 40 வயதிலேயே ₹50,000 வரை பென்ஷன் தரும் அசத்தலான LIC திட்டம்

வருடத்திற்கு ஒரு முறை பிரீமியம் செலுத்த வேண்டும்

இந்தத் திட்டத்தில் (LIC Policy) முதலீடு செய்ய உங்கள் வயது 18 முதல் 59 வயதுக்குள் இருக்க வேண்டும். திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போது நியமனத்தின் தகவலை நிரப்புவது மிகவும் முக்கியம். இந்த திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ .200 பிரீமியமாக செலுத்த வேண்டும்.
இறப்பு மற்றும் விபத்து நன்மைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

இறப்பு மற்றும் விபத்து நன்மைகளும் சேர்க்கப்பட்டுள்ளன

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் மக்கள் ஆயுள் காப்பீட்டுத் தொகையைப் பெறுகிறார்கள். ஆனால் குடும்பத் தலைவர் இயற்கையான காரணங்களால் இறந்தாலோ அல்லது விபத்து காரணமாக நிரந்தர அல்லது சிறிய அளவிலான இயலாமை வந்தாலோ அவர்களுக்கும் இதில் கவரேஜ் கிடைக்கிறது.

மரணம் ஏற்பட்டால் உங்களுக்கு எவ்வளவு பாதுகாப்பு கிடைக்கும்?

இயற்கையான காரணங்களால் குடும்பத் தலைவர் இறக்கும் பட்சத்தில், அந்த குடும்பத்திற்கு 30,000 ரூபாய் காப்பீட்டுத் தொகை கிடைக்கும். இது தவிர, விபத்தால் மரணம் ஏற்பட்டால், ரூ .75000, உடல் ஊனமுற்றால் ரூ .75000, மனநலம் பாதிக்கப்பட்டால் ரூ. 37500 கிடைக்கும்.

ALSO READ: உங்கள் PAN எண்ணை LIC Policy உடன் இணைப்பது எப்படி? முழு விவரம் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News