Indian Railways Facts: இந்தியாவில் ரயில் போக்குவரத்தை பல்லாயிரக்கணக்கனோர் தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். பாசஞ்சர் ரயில், எக்ஸ்பிரஸ் ரயில் தொடங்கி தற்போதைய வந்தே பாரத் ரயில் வரை பல்வேறு வகையில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் ரயில் போக்குவரத்து செயல்பட்டு வருகிறது. மறுபுறம், உள்ளூர் போக்குவரத்திலும் ரயில்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கின்றன. புறநகர் ரயில்கள், மெட்ரோ ரயில்கள் உள்ளிட்டவை பொதுப்போக்குவரத்தில், எளிமையாக பயணிக்க வழிவகை செய்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல்வேறு வசதிகள்


ரயில்கள் பயணிப்பதற்கு முன்பதிவு வசதிகளும் செய்துதரப்படுகிறது. படுக்கை வசதிகள், குளிரூட்டப்பட்ட பெட்டிகள் என பல அடுக்குகளில் அனைத்து தரப்பு மக்களுக்கு உபயோகமாகும் வசதிகளை வழங்குகின்றன. ஆன்லைன் மூலமாகவும், ரயில் நிலையங்கள் மூலமாகவும் ஒருவர் முன்பதிவை மேற்கொள்ளலாம். பல நாள்களுக்கு முன்னாடி வரை முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், தட்கல் என்றும் பயணத்திற்கு முந்தைய நாள் முன்பதிவும் பயணிகளுக்கு மிகவும் பலனளிக்கக்கூடியதாக உள்ளது. 


சலுகைகளும் உண்டு


ரயிலில் பயணிக்கும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் உள்ளிட்டோருக்கு பல சலுகைகளும் ரயில்வே துறையால் வழங்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்து பயணிப்பதை போன்று, முன்பதிவில்லாமல் நேரடியாக டிக்கெட் பெற்றும் ஒருவர் ரயிலில் பயணிக்கலாம். முழுவதுமாக முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட ரயிலும் சில உள்ளன.


மேலும் படிக்க | ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி செய்தி! நாளை முதல் ரயில்களில் மிகப்பெரும் மாற்றம்


கொடூர ரயில் விபத்து


அந்த வகையில், ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகள் ரயிலின் மத்திய பகுதிகளில் இருக்கும். அதேபோல், முன்பதிவில்லாத பெட்டிகள் ரயிலின் எஞ்சினில் இருந்து முதலிலும், கடைசியிலும் இருக்கும். சமீபத்தில், ஓடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் - ஹவுரா துரந்தோ ரயில், சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் பாலசோர் மாவட்டத்தில் விபத்துக்குள்ளான நிலையில், 278 பேர் அதில் பலியாகினர். 


ஆதாரமற்ற தகவல்


ஆயிரக்கணக்கானோர் காயமடைந்த நிலையில், பலரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதில், முன்பதிவு செய்யப்படாத பொதுப்பெட்டிகள் தான் அதிகம் சேதத்திற்கு உள்ளானதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து, ஆதாரப்பூர்வ தகவல் இல்லையென்றாலும் இதை சுற்றி சில சர்ச்சைகளும் எழுந்தன. 


எழுந்த சந்தேகங்கள்


அதாவது, பணமில்லாத பாமர, நடுத்தர மக்கள் பயணிக்கும் பொதுப்பெட்டிகளை விபத்து ஏற்பட்டால் சேதம் அதிகமிருக்கும் ரிஸ்க்கான இடங்களில் வைத்திருப்பதாக இணையத்தில் சிலர் கருத்து தெரிவித்தனர். பணம் செலுத்தி முன்பதிவு செய்தவர்களுக்கு பாதுகாப்பான பயணம் முன்பதிவு செய்யாதவர்களுக்கு ஆபத்தான பயணம் என அவர்கள் அதற்கு தர்க்கம் கூறி வந்த நிலையில், இந்த பார்வை முற்றிலும் தவறானது எனவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். 


விளக்கம் இதோ!


பொதுப்பெட்டிகள் ரயில் எஞ்சினுக்கு அடுத்து முதலிரு பெட்டிகளாகவும், கடைசி பெட்டிகளாகவும் வைக்கப்படுவதற்கான காரணம், பயணிகள் கூட்டத்தை தவிர்க்க வேண்டும் என்பதற்காக தான் என தெரிவிக்கப்படுகிறது. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் அதிக கூட்டம் இருக்கும் என்பதால், கடைசி நேரத்தில் டிக்கெட் எடுத்து வரும் பயணிகள், பெட்டிகளை தேடி அலைய கூடாது என்பதற்காகவும், அவர்கள் பெட்டியில் ஏற எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் தான் பொதுப்பெட்டிகள் அவ்வாறு வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 



இதுகுறித்து, 2019ஆம் ஆண்டிலேயே பயணியின் இதே சந்தேகத்திற்கு ரயில்வே துறை அதிகாரியான சஞ்சய் குமார் என்பவர் ட்விட்டரில் பதிலளித்திருந்தார். அதுவும் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.   


மேலும் படிக்க | Indian Railway: ‘இந்த’ ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் ஒரு பைசா கூட திரும்ப கிடைக்காது!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ