Interesting Facts about Fingerprints: ஒவ்வொரு மனிதனின் கையின் தோலும் இரண்டு அடுக்குகளால் ஆனது. முதல் அடுக்கு மேல்தோல் மற்றும் இரண்டாவது அடுக்கு தோல் ஆகும். இரண்டு அடுக்குகளும் ஒன்றாக வளரும். இந்த இரண்டு அடுக்குகளும் இணைவதன் மூலம், நம் கைகளில் கைரேகைகள் உருவாகின்றன. கைரேகைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. கைரேகை என்பது நபருக்கு நபருக்கு முற்றிலும் மாறுபடும். அதனால் தான் எழுத படிக்க தெரியாதவர்கள், கை ரேகை பதிக்கும் பழக்கம் இருந்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், இன்று நவீன உலகில் பயோ மெட்ரிக் தரவுகளிலும், ஸ்மார்ட்போன்களிலும் கூட கைரேகைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை கடவுச்சொற்களைப் போலவே பயன்படுத்தப்படுகின்றன.


இன்று நமது ஸ்மார்ட்போன்கள் கைரேகையைப் பயன்படுத்தி திறக்கப்படுகின்றன. பயஓ மெட்ரிக் தரவுகளிலும், வேறு சில அலுவக ரீதியிலான வருகை பதிவுகளுக்கு கூட கைரேகையைப் (Fingerprint) பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. 


அப்படிப்பட்டமுக்கியத்துவம் வாய்ந்த கை ரேகை தொடர்பாக சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம். உங்கள் கை விரல்கல் தீயில் எரிந்தாலும், ஆசிட் விழுந்தாலும் கூட கைரேகை மாறாது என்பது உங்களுக்குத் தெரியுமா? காயத்திற்குப் பிறகும், உங்கள் கையின் விரல் ரேகை அப்படியே இருக்கும்.


உலகில் இவ்வளவு பெரிய மக்கள் தொகை உள்ளது. ஆனால் எந்த மனிதனின் கைரேகை மற்ற எந்த மனிதனின் கைரேகையுடன் ஒத்துப்போவதில்லை. ஒருவரின் கைரேகை முழுமையாக உருவான பிறகு, அது வாழ்நாள் முழுவதும் மாற்றம் ஏதும் இல்லாமல்  இருக்கும். கைரேகை மிகவும் தனித்துவமானது, இது மற்றொரு நபரின் கைரேகையுடன் ஒருபோதும் பொருந்தாது.


ALSO READ | மரணத்திற்குப் பிறகு கைரேகை மாறுமா.. அறிவியல் கூறுவது என்ன..!!


கருவில் இருந்தே கைரேகை உருவாகத் தொடங்குகிறது


மனித மரபணுக்கள், சுற்றுச்சூழல் போன்ற காரணிகள் கைரேகைக்கு பின்னால் உள்ளன. குழந்தை வயிற்றில் வளரும்போது, ​​​​அந்த நேரத்தில் அவரது கைரேகைகள் தயாராகத் தொடங்குகின்றன. மாறாக, கைகளில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு கைரேகைகள் மறைந்து விட்டால், சில மாதங்களில் மீண்டும் அதே நிலைக்கு வந்துவிடும். கைகள் எரிந்த ஒரு மாதத்திற்குள் இதேபோன்ற கைரேகைகள் உருவாகி விடும்.


வயது முதிர்ந்தவரின் கைரேகையில் எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும், மிக இளம் வயதில் இருக்கும், கைரேகை வயது அதிகரிக்கும் போது நிச்சயமாக சில மாற்றம் உள்ளது. ஆனால் ஓரளவு முதிர்ந்ததும், வாழ்நாள் முழுவதும் மனித கைரேகையின் கட்டமைப்பில் எந்த விதமான மாற்றமும் ஏற்படுவது இல்லை.


ALSO READ | Radish: BP முதல் மஞ்சள் காமாலை வரை; பல வித நோய்களுக்கு அருமருந்தாகும் முள்ளங்கி! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR