Fasting, Lifestyle News Tamil : மாறிவரும் வாழ்க்கை சூழலில் ஆரோக்கியத்துக்கு மிகமிக முக்கியத்துவம் கொடுப்பது அவசியம். உடல் உழைப்பு குறைந்து வரும் சமூகமாக மாறி வருவதால் பல ஆரோக்கிய பிரச்சனைகள் புதிது புதியதாக முளைத்துக் கொண்டே இருக்கின்றன. நீரிழிவு நோய், இருதய பிரச்சனைகள், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு உள்ளிட்ட பல நோய்கள் இப்போது சர்வசாதாரணமாகிவிட்டன. வயதானவர்கள் மத்தியிலேயே அதிகளவு இந்த நோய்கள் முன்பு காணப்பட்ட நிலையில், இப்போது பிறக்கும் குழந்தை முதல் இளம் வயதினர் என எல்லோரையும் பாதிக்கும் நோய்களாக இவை மாறிவிட்டன. இதற்கு ஒன்றிரண்டு காரணிகள் அல்லாமல், பலதரப்பட்ட காரணிகள் காரணமாகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்தவகையில் ஆரோக்கியத்தை பேணுவதற்காக இப்போதெல்லாம் இன்டர்மிடென்ட் விரதம் இருப்பது பேஷனாகிவிட்டது. உடல் எடை குறைப்பு, இருதய ஆரோக்கியம் உள்ளிட்டவைகளுக்காக மருத்துவ நிபுணர்களே விரதம் குறித்த அறிவுரைகளை வழங்கி ஊக்குவிக்கின்றனர். கெட்ட கொழுப்புகளை எரிப்பது, கலோரிகள் அதிகம் உடலில் சேராமல் பார்த்துக் கொள்வது உள்ளிட்டவைகளுக்கு இந்த விரதமுறை பயனுள்ளவையாக பார்க்கப்படுகிறது. இதில் பல நன்மைகள் இருக்கும் அதேநேரத்தில் ஆபத்து காரணிகள் குறித்தும் அறிந்து வைத்திருப்பது அவசியமாகிறது. 


மேலும் படிக்க | தூக்கத்தில் மாரடைப்பு ஏற்பட காரணம் என்ன? இதற்கான அறிகுறிகள் என்ன?


இன்டர்மிடென்ட் விரதத்தின் ஆபத்து காரணிகள்


1. இன்டர்மிடென்ட் விரதம் இருப்பது தைராய்டு நோயாளிகளைப் பாதிக்கும். உங்களுக்குள் இருக்கும் தைராய்டு அதிக வேலை செய்யும். இது மாதவிடாய் சுழற்சி மற்றும் கருவுறுதலையும் பாதிக்கும்.


2. அதிக அளவிலான உடல் மற்றும் அல்லது மன செயல்திறன் கொண்ட நபர்களை எதிர்மறையாக பாதிக்கலாம். அதாவது விளையாட்டு வீரர்கள் அல்லது கடினமான வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு இந்த விரதம் முறை உபயோகமாக இருக்காமல் போகலாம். அதாவது, ஆற்றல் குறைதல் மற்றும் செயல்திறன் குறைவதற்கு வழிவகுக்கும்.


3. நீரிழிவு அல்லது பிற இரத்த சர்க்கரை ஒழுங்குமுறை சிக்கல்கள் உள்ள நபர்கள் நிலையான குளுக்கோஸ் அளவை பராமரிக்க அவர்களின் செயல்பாடு, தூக்கம் மற்றும் பசிக்கு ஏற்றபடி சாப்பிட வேண்டும். இப்படியான நபர்கள் விரதம் இருந்தால் பின்விளைவுகள் மோசமாக வாய்ப்பு இருக்கிறது.


4. நீண்ட காலத்திற்கு இப்படியான விரதமுறை இருப்பது என்பது பசியின்மையை ஏற்படுத்த அதிக வாய்ப்பு இருக்கிறது.


5. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஊட்டச்சத்து தேவைகள் உள்ளன, அவை அவர்களின் வயது, உடல்நலம், செயல்பாடு, பசியின்மை, தூக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். இவற்றின் அடிப்படையிலேயே ஒருவர் விரதம் இருப்பது குறித்து முடிவெடுப்பது சிறந்ததாக இருக்க முடியும்.


மேலும் படிக்க | தொப்பை கரைய... கொழுப்பை எரிக்க... நீங்கள் கடைபிடிக்க வேண்டிய 10 கட்டளைகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ