புதுடெல்லி: உங்கள் செல்ல மகளின் திருமணம் பற்றிய கவலையை நீங்கல் இனி விட்டு விடலாம்.  அதை மனதில் வைத்து,  எல்ஐசி ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது - எல்ஐசி கன்னியாதான் பாலிஸி திட்டம் (LIC Kanyadan Policy). எல்ஐசி கன்யாதன் பாலிஸி திட்டத்தில் சேர்ந்தால், உங்கள் செல்ல மகளின் திருமண செலவு குறித்த கவலையில் இருந்து நீங்கள் விடுபடலாம். uங்கள் மகள்களின் திருமணத்திற்காக மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாலிஸி குறித்த முழு விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேவையான ஆவணங்கள்


இந்தக் பாலிஸிக்கு (LIC Kanyadan Policy) விண்ணப்பிக்க, உங்களிடம் ஆதார் அட்டை, வருமான ஆதாரம், அடையாள அட்டை, முகவரி சான்று மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை தேவை. இது தவிர, கையொப்பமிடப்பட்ட விண்ணப்பப் படிவம் மற்றும் பிறப்புச் சான்றிதழுடன் முதல் பிரீமியத்திற்கான காசோலை அல்லது ரொக்கமும் கொடுக்கப்பட வேண்டும்.


ALSO READ | உங்களுக்கு LPG மானியம் கிடைக்கவில்லையா; காரணம் ‘இதுவாக’ இருக்கலாம்


பாலிசி முதிர்வு காலம்


இந்த பாலிசியில் முதிர்வு காலத்தை நீங்கள் உங்கள் வசதிக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கலாம். அதில் நீங்கள் 25 வருடங்களுக்கு பதிலாக 13 வருடங்களுக்கு எடுக்கலாம். திருமணம் தவிர, இந்தப் பணத்தை மகளின் கல்விக்கும் பயன்படுத்தலாம். மொத்தத்தில், உங்கள் மகளின் கல்வி மற்றும் திருமணத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படாமல் இருக்கலாம்.


பாலிஸிக்கான வயது


நீங்கள் உங்கள் மகளுக்கு பாலிசி எடுக்க விரும்பினால், உங்கள் வயது குறைந்தது 30 வயதாக இருக்க வேண்டும், மகளின் வயது குறைந்தது 1 வருடமாக இருக்க வேண்டும். இந்த பாலிசி 25 ஆண்டுகளுக்கு இருந்தாலும், பிரீமியம் 22 ஆண்டுகளுக்கு மட்டுமே செலுத்தப்பட வேண்டும். மீதமுள்ள 3 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் மகளின் வயதிற்கு ஏற்ப, இந்த பாலிசியின் காலத்தையும் குறைக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ALSO READ | Indian Railways: இப்போது ‘வேறு ஒருவரும்’ உங்கள் டிக்கெட்டில் பயணம் செய்யலாம்..!!


இறப்பு பலனும் கிடைக்கும்


மகளுக்காக பாலிசி எடுத்த பாலிசிதாரர் இறந்துவிட்டால் (LIC Kanyadan Policy Death Benefits), பின்னர் அவரது குடும்பம் பிரீமியம் செலுத்த வேண்டியதில்லை. மரணம் தற்செயலாக நடந்தால், குடும்பத்திற்கு மொத்தமாக ரூ .10 லட்சம் கிடைக்கும். மரணம் சாதாரண சூழ்நிலையில் நடந்திருந்தால், ரூ .5 லட்சம் வழங்கப்படும். இதனுடன், குடும்பத்திற்கு, பாலிஸி முதிர்ச்சியடையும் வரை ஒவ்வொரு ஆண்டும் ரூ .50,000 கிடைக்கும். அதாவது, இந்த திட்டத்தில் இறப்பு நன்மையும் சேர்க்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு,  பாலிஸி முதிர்வின் போது 27 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.


பிரீமியம் தொகை


இந்த பாலிசியில், நீங்கள் ஒரு நாளைக்கு ரூ.121 பிரீமியம் செலுத்த வேண்டும், அதாவது மாதத்திற்கு சுமார் ரூ .3600 நீங்கள் விரும்பினால், இதை விட குறைந்த ப்ரீமியம் கொண்ட பாலிசியையும் எடுக்கலாம். ஆனால் அதன் மூலம் கிடைக்கும் தொகையும் அதற்கேற்ப குறையும். தினமும் 121 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, நீங்கள் 27 லட்சம் பெறுவீர்கள்.


ALSO READ | Indian Railways: டிக்கெட் புக் செய்கையில் நினைவில் கொள்ள வேண்டிய புதிய குறியீடுகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR