Indian Railways Ticket Booking: ரயிலில் பயணம் செய்யும் கோடிக்கணக்கான பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. நீங்கள் ரயிலில் முன்பதிவு செய்தால், இப்போது உங்களுக்காக இன்னும் எளிதான முறையில் இருக்கையை முன்பதிவு செய்யும் அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்காக நீங்கள் IRCTC செயலிக்குச் செல்ல வேண்டியதில்லை. ஐஆர்சிடிசி செயலியில் உள்நுழையாமல் உங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IRCTC APP இல்லாமல் டிக்கெட்டுகளை முன்பதிவு 


IRCTC மூலம் பல சிறப்பு வசதிகள் பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன. ஐஆர்சிடிசி சாட்போட்டிலிருந்தே முன்பதிவு செய்யக்கூடிய அத்தகைய வசதியைப் பற்றி தெரிந்து கொள்வோம். வாடிக்கையாளர்களுக்காக இந்த சிறப்பு வசதியை ரயில்வே தொடங்கியுள்ளது. இந்த அம்சம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வசதியின் கீழ் எளிதாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.


மேலும் படிக்க | ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவின் இந்த விதியை கட்டியம் தெரிஞ்சிக்கோங்க


தினமும் 10 லட்சம் பேர் டிக்கெட் முன்பதிவு


ஐஆர்சிடிசி இணையதளத்தின்படி, தற்போது தினமும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் இணையதளத்தில் முன்பதிவு செய்கின்றனர். இது தவிர, பயணிகள், 'ஆப்' மற்றும் 'ஸ்டேஷன்' மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, பல நேரங்களில், இணையதளம் சரியாக செயல்படாததால் காரணத்தால், சரியான நேரத்தில் டிக்கெட் பெற முடியாமல் அவதிப்படுகின்றன. இதற்காக சாட்போட் வசதியை ரயில்வே துவக்கியுள்ளது.


தனியாக கட்டணம் வசூலிக்கப்படாது


இந்த வசதியில், நீங்கள் எந்தத் தனிக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டுமோ, அதே கட்டணத்தையே சாட்போட்டிலும் செலுத்த வேண்டும். டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, ​​ஸ்லீப்பர் வகுப்பிற்கு 10 ரூபாயும், ஏசி வகுப்பிற்கு 15 ரூபாயும் செலுத்த வேண்டியிருக்கும். UPI மூலம் செலுத்தினால், ஸ்லீப்பர் வகுப்பிற்கு ரூ.20 மற்றும் ஏசி வகுப்பிற்கு ரூ.30 செலுத்த வேண்டும்.


மேலும் படிக்க |  ஆதார் எண் - போலி சிம் கார்டுகள் மோசடி; கண்டறியும் எளிய முறை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ