ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவின் இந்த விதியை கட்டியம் தெரிஞ்சிக்கோங்க

ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு இதுபோன்ற வசதி இந்திய ரயில்வேயால் கொண்டுவரப்பட்டுள்ளது, இது அவர்களின் டிக்கெட் முன்பதிவு வேலையை எளிதாக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 14, 2022, 04:42 PM IST
  • ரயில் டிக்கெட் முன்பதிவு
  • ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகள்
  • இந்திய இரயில்வே டிக்கெட்
ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவின் இந்த விதியை கட்டியம் தெரிஞ்சிக்கோங்க title=

இந்திய இரயில்வே டிக்கெட் முன்பதிவு விதிகள்: இந்திய இரயில்வேயில் ஒரு நாளில் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கிறார்கள், மேலும் இது மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்வதற்கு மிகவும் சாதகமான போக்குவரத்து முறையாக கருதப்படுகிறது. தற்போது பெரும்பாலான மக்கள் ரயில் டிக்கெட்டுகளை பதிவு செய்ய ஆன்லைன் பயன்முறையைப் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக நகர்ப்புறங்களில். எனவே இது தொடர்பான செய்தி ஒன்று நாங்கள் உங்களுக்குச் கொடுக்க உள்ளோம் அவை உங்களை மகிழ்ச்சிப்படுத்தும். அவை என்னவென்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

முன்பை விலை அதிக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துக் கொள்ளலாம்
ரயிலில் பயணம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தால், சமீபத்தில் ரயில்வே தனது விதிகளில் பெரிய மாற்றத்தை செய்துள்ளது. இந்திய ரயில்வே சார்பில் பயணிகளின் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த ஐஆர்சிடிசி அதாவது இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. புதிய விதிகளின்படி, முன்பை விட இப்போது அதிக ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | இந்திய உணவுக்கழகத்தில் மேலாளர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு

புதிய விதியின் முழு விவரம் இதோ
இந்திய ரயில்வேயின் கூற்றுப்படி, உங்கள் ஆதார் அட்டையை உங்கள் ஐஆர்சிடிசி (இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன்) கணக்குடன் இணைத்தால், ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 12 ஆன்லைன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். 

இந்த நிலையில் ஐஆர்சிடிசி இல் உங்கள் கணக்கை எவ்வாறு உருவாக்குவது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், அதைப் பற்றிய தகவலை இங்கே பெற்றுக்கொள்ளுங்கள்.

* முதலில் www.irctc.co.in என்ற இணைப்பில் உள்ள ஐஆர்சிடிசி இணையதளத்தைத் ஓபன் செய்யவும்.
* அதன் பிறகு முகப்புப் பக்கத்தின் மேல் லோக்கின் மற்றும் ரெஜிஸ்டர் என்ற 2 விருப்பங்கள் தோன்றும்.
* இதில் நீங்கள் ரெஜிஸ்டர் விருப்பத்தை கிளிக் செய்யவும்.
* ரெஜிஸ்டர் விருப்பத்தை கிளிக் செய்தவுடன் புதிய விண்டோ திறக்கும். இதில் நீங்கள் "உங்கள் கணக்கை உருவாக்கு" என்ற பகுதியை காணலாம்.
* இதில், பயனர்பெயர், கடவுச்சொல், மொழி, பாதுகாப்பு கேள்வி, பாதுகாப்பு பதில் போன்ற அடிப்படை விவரங்களை உள்ளிட வேண்டும்.
* பிறகு தொடர் என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
* அதன் பிறகு மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் போன்ற தனிப்பட்ட விவரங்களை நிரப்பவும்.
* இதற்குப் பிறகு, முகவரிக்குச் சென்று அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
* இப்போது கீழே வரும் சமர்ப்பிக்க என்கிற பட்டனை கிளிக் செய்யவும்.
* இதற்குப் பிறகு உங்கள் மொபைல் எண்ணில் ஓடிபி ஐ உள்ளிட்டு ஒரு செய்தி வரும் மற்றும் ரெஜிஸ்டர் என்பதைக் கிளிக் செய்யவும்.
* ரெடி உங்களின் ஐஆர்சிடிசி கணக்கு. இனி நீங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துக் கொள்ளலாம். 

மேலும் படிக்க | மத்திய அரசுப் பணி! தமிழ்நாட்டில் அருமையான சம்பளத்தில் வேலை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News