முதியோர்களுக்காக ஐஆர்சிடிசி அறிவித்த சூப்பர் டூர் பேக்கேஜ்.. உடனே படிக்கவும்
IRCTC Tour Package: இந்தியன் ரயில்வே தற்போது திருப்பதியில் இருக்கும் ஏழுமலையான் கோவிலை தரிசிக்க ஒரு அற்புதமான டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்: திருப்பதியில் இருக்கும் ஏழுமலையானை தரிசிக்க உங்களை அழைத்துச் செல்ல ஐஆர்சிடிசி மிக அருமையான டூர் பேக்கேஜ் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி பெருமாள் கோவில் உள்ளது. இங்கு அமைந்துள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் மகாவிஷ்ணுவின் கோவில் ஆகும். இந்த கோவிலில் இருக்கும் ஏழுமலையானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வருகை தந்து வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் தற்போது ஐஆர்சிடிசி ஒரு அற்புதமான டூர் பேக்கேஜை அறிவித்துள்ளது. நீங்களும் உங்கள் குடும்பத்துடனே அல்லது நண்பர்களுடனே திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்ல விரும்பினால் உடனடியாக ஐஆர்சிடிசியின் இந்த டூர் பேக்கேஜை பார்வையிடவும். வாருங்கள் இப்போது இந்த டூர் பேக்கேஜின் முழு தகவலையும் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.
இந்த டூர் பேக்கேஜின் பெயர் "திருப்பதி தேவஸ்தானம்" ஆகும். அதுமட்டுமின்றி ஐஆர்சிடிசி வழங்கும் இந்த டூர் பேக்கேஜானது ஒரு இரவு மற்றும் இரண்டு பகளுக்கானது. மேலும் இந்த டூர் பேக்கேஜில் நீங்கள் திருப்பதி கோவில், பத்மாவதி கோவில் மற்றும் ஸ்ரீ காளஹஸ்தி போன்ற கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
இந்த டூர் பேக்கேஜ் எத்தனை நாட்களுக்கு?
இந்த சிறப்பு வாய்ந்த டூர் பேக்கேஜிங் கீழ் மொத்தம் ஒரு இரவு மற்றும் இரண்டு பகல் பயணம் செய்ய பக்தர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
இந்த டூர் பேக்கேஜ் எந்த இடத்தில் இருந்து தொடங்கும்?
இந்த சுற்றுலா பேக்கேஜ் டெல்லி விமான நிலையத்தில் இருந்து தொடங்கப்படும், அங்கிருந்து பயணிகள் இண்டிகோ விமானத்தில் சென்னைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்த டூர் பேக்கேஜ் பிப்ரவரி 10 ஆம் தேதி அன்று தொடங்கும். அதுமட்டுமின்றி பிப்ரவரி 10 ஆம் தேதி செல்ல தவறவிட்ட பக்தர்களுக்கு பிப்ரவரி 24 தேதி மீண்டும் ஒரு பேக்கேஜ் ஐஆர்சிடிசியால் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மூன்றாவது டூர் பேக்கேஜானது மார்ச் 2 ஆம் தேதியும், நான்காவது டூர் பேக்கேஜ் மார்ச் 9ஆம் தேதியும், ஐந்தாவது டூர் பேக்கேஜ் மார்ச் 16ஆம் தேதி தொடங்கும்.
முதல் நாள்:
இந்த டூர் பேக்கேஜின் முதல் நாள் காலை 7 மணிக்கு இண்டிகோ விமானம் மூலம் டெல்லியிலிருந்து சென்னைக்கு பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள். பின்னர் விமானம் 09:50 மணிக்கு சென்னை விமான நிலையத்தை சென்றடையும். அதன் பின்னர் சென்னை விமான நிலையத்திலிருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அதன் பிறகு, ஸ்ரீ காளஹஸ்தி கோயிலுக்குச் அழைத்துச் செல்லப்படுவீர்கள். இந்த இடத்தை பார்வையிட்ட பிறகு பயணிகள் ஹோட்டலில் செக்-இன் செய்ய அழைத்துச் செல்லப்படுவார்கள். அதன்பின்னர் மாலை பொழுதில் ஸ்ரீ பத்மாவதி தாயாரின் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அதன்பிறகு, இரவு ஹோட்டலில் தங்குவதற்கு வசதி செய்து தரப்படும்.
இரண்டாம் நாள்:
திருப்பதி - சென்னை - டெல்லி
காலை உணவுக்குப் பிறகு, திருப்பதி கோவில் தரிசனத்திற்காக திருமலைக்கு பயணிகள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். அதன் பிறகு, மாலையில் ஹோட்டலில் இருந்து செக்-அவுட் செய்த பிறகு, நீங்கள் சென்னை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கிருந்து இரவு 7 மணிக்கு விமானம் புறப்பட்டு 11 மணிக்கு டெல்லியை வந்தடையும்.
பேக்கேஜின் முழு கட்டணம்:
* ஒருவர் மட்டும் பயணம் செய்ய இந்த பேக்கேஜிற்கு, நீங்கள் ரூ.21,913 கட்டணம் செலுத்த வேண்டும்.
* இரண்டு பேர் பயணம் செய்ய ஒருவருக்கு கட்டணமாக ரூ.20,270 செலுத்த வேண்டும்.
* டிரிபிள் ஷேரிங்கில், தலா ஒரு பயணிக்கு ரூ.20,120 செலுத்த வேண்டும்.
* ஒரு குழந்தை மட்டும் உங்களுடன் பயணம் செய்தால், குழந்தைக்கு தனி படுக்கையை எடுத்துக் கொண்டால், அதற்கு ரூ.19,440 கட்டணம் செலுத்த வேண்டும்.
* அதேசயம் குழந்தைக்கு தனி படுக்கை எடுக்கவில்லை என்றால், அதற்கு ரூ.18,930 மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்.
* 2-4 வயது குழந்தை உங்களுடன் பயணம் செய்தால், இதற்கான பயணக் கட்டணமாக ரூ.17,410 செலுத்த வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ