இந்திய ரயில்வேயின் புதிய விதி.. ஏசி கோச்சில் பயணிப்பவர்கள் கட்டாயம் படிக்கவும்

Rules for taking extra blanket in train: நீங்கள் ரயிலின் ஏசி கோச்சில் பயணம் செய்யும் போது குளிராக உணர்ந்தால் எக்ஸ்ட்ரா போர்வை பெற முடியமா.. இதோ இந்த கட்டுரைப் படித்து தகவலைப் பெறுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 2, 2024, 12:01 PM IST
  • ரயில்வேயின் விதிகளை அறிந்து கொள்ளுங்கள்.
  • நீங்கள் நேரடியாக 138 என்கிற எண்ணில் அழைத்து புகார் செய்யலாம்.
  • ட்வீட் மூலமும் பயணிகள் தங்களின் புகாரை ரெஜிஸ்டர் செய்யலாம்.
இந்திய ரயில்வேயின் புதிய விதி.. ஏசி கோச்சில் பயணிப்பவர்கள் கட்டாயம் படிக்கவும் title=

ரயிலில் கூடுதல் போர்வை எடுப்பதற்கான விதிகள்: இந்தியாவில் எதுவும் லட்சக்கனகாரங்களை பயணம் செய்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் விமானம் டாக்ஸி போன்ற போக்குவரத்து வசதிகளை விட ரயிலில் பயணிப்பது மக்களுக்கு சௌகரியமாக இருப்பதாக கருதுகின்றனர். இரண்டாவது முக்கிய காரணம் ரயில்வே டிக்கெட் கட்டணம் குறைவு, அதுமட்டுமின்றி மிக பாதுகாப்பாகவும் வேகமாகவும் ரயிலில் நாம் பயணிக்கலாம். இதுவே முக்கிய காரணமாகும் பெரும்பாலானோர் ரயில் பயணத்தை விரும்புவதற்கு.

அதுவும் பயணம் ஏசி கோச்சில் இருந்தால் இன்னுமும் சௌகரியமாக இருக்கும் என்றே கூற வேண்டும். ஏனெனில் குளிர்காலம், கோடை அல்லது மழைக்காலம் என அனைத்து பருவங்களிலும் ஏசி பயணம் வசதியானது மற்றும் பாதுகாப்பாகவும். இருப்பினும் சில சமயங்களில் ஏசி கோச்சில் பயணம் செய்யும் பயணிகள் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அதில் ஒன்று ஏசி கோச்சில் சில சமயங்களில் அதிகம் குளிர் எடுப்பது. அத்தகைய சூழ்நிலையில், கோச் அட்டென்ட்டிடமிருந்து நாம் எக்ஸ்ட்ரா போர்வை பெற முடியுமா, மேலும் இதற்கு நாம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. வாருங்கள் இப்போது எக்ஸ்ட்ரா போர்வைக்கு ரயில்வே விதியில் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்! எப்படி தெரியுமா?

பொதுவாக ஏசி கோச்சில் பயணிக்கும் ஒரு சில பயணிகள் ​​பயணம் தொடங்கியுடன் ஏசி சரியாக இயங்கினாலும் குறை (ஏசி வேலை செய்யவில்லை, வெப்பநிலை குறைவாக இருக்கிறது) கூறுவார்கள். ஆனால் சிறுது நேரத்திற்கு பிறகு வெப்பநிலை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பும். மேலும் இதனால் சில சமயங்களில் அதிகமாக குளிர் எடுக்கும். ரயில்வேயால் கொடுக்கப்பட்ட பெட் ரோலை பயன்படுத்தியும் குளிராகவே இருக்கும். அப்படி உணர ஆரம்பித்தால், பயணிகள் எக்ஸ்ட்ரா போர்வை பெற விரும்புவார்கள். அத்தகைய சூனிலையில் பெரும்பாலான பயணிகளுக்கு இது தொடர்பான ரயில்வே வெளியிட்டுள்ள விதியைப் பற்றி தெரிந்திருக்க மாட்டார்கள். இதனால் உதவியாளரிடம் எக்ஸரா போர்வை கேட்க தயக்கம் கொள்வார்கள்.

ரயில்வேயின் விதிகளை அறிந்து கொள்ளுங்கள்:
இந்நிலையில் ரயில் பயணத்தின் போது ஒரு பயணி குளிர்வதுப் போல் உணர்ந்தால், உதவியாளரிடம் கூடுதல் போர்வை கேட்கலாம் என்று ரயில்வே அமைச்சகத்தின் டிஜி யோகேஷ் பவேஜா தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் இதற்கு நீங்கள் கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. மாறாக ரயில் உதவியாளரிடம் எக்ஸ்ட்ரா போர்வை இருந்தால் அவர் கட்டாயம் உங்களுக்கு வழங்குவார்.

எங்கு புகார் செய்யலாம்:
ஆனால் உதவியாளர் உங்களுக்கு போர்வையை வழங்க மறுத்தால் நீங்கள் நேரடியாக 138 என்கிற எண்ணில் அழைத்து புகார் செய்யலாம். அதேபோல் நீங்கள் உங்களது மொபைலில் இருந்து 91-9717680982 என்ற எண்ணுக்கு SMS அனுப்பியும் உங்களின் புகாரை தெரிவிக்கலாம். "@RailMinIndia" என்ற ட்வீட் மூலமும் பயணிகள் தங்களின் புகாரை ரெஜிஸ்டர் செய்யலாம்.

ரயிலில் வழங்கப்படும் பெட் ரோலை வீட்டிற்கு எடுத்துச் சென்றால் சிறை தண்டனை:
இதனிடையே பயணத்தின் போது ரயில்வே வழங்கிய இந்த சாமான்களை நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால் , பயணம் முடிந்ததும் இந்த சாமான்களை நீங்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்றால் உங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படலாம்.

மேலும் படிக்க | அந்தமானை கம்மி விலையில் சுற்றி பாருங்க! IRCTC வழங்கும் அசத்தலான டூர் பேக்கேஜ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News