IRCTC Char DHam Yatra Package: பெற்றோர் அல்லது மனைவி மற்றும் குழந்தைகள் உட்பட குடும்பத்துடன் இனிமையான வானிலையில் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த, அதே நேரத்தில் இயற்கை அழகு நிறைந்த இடத்திற்கான பயணத்தை மேற்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு  சார் தாம் யாத்திரை செல்வதை விட சிறந்தது எதுவாக இருக்கும்.யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய பிரசித்திப் பெற்ற நான்கு இடங்களுக்கான ஆன்மீக சுற்றுலாவான சார் தாம் யாத்திரை ஒவ்வொரு வருடமும் ஏப்ரல்-மே மாதங்களில் தொடங்கி அக்டோபர் - நவம்பர் வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி யில் இருந்து, செப்டம்பரில் சார் தாம் பயணத்தைத் திட்டமிட விரும்பினால், ஐஆர்சிடிசியின் இந்த சிறப்புத் பேக்கேஜ் மூலம் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய இப்போதே முன்பதிவு செய்யலாம். இதில் 12 பகல் மற்றும் 11 இரவுகளில் சார் தாம் தெய்வீக தரிசனம் கிடைக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த பயணம் டெல்லியில் இருந்து தொடங்கி சாலை வழியாக மேற்கொள்ளப்படும். எனவே நீங்களும் சார் தாம் யாத்ரா செல்ல திட்டமிட்டிருந்தால், IRCTC சார் தாம் தொகுப்பு தொடர்பான அனைத்து முக்கிய தகவல்களையும் இங்கே அறிந்து கொள்ளலாம்.


சார் தாம் யாத்திர பேக்கேமஜ் - IRCTC Char Dham Yatra Ex Delhi


இந்திய இரயில்வே அடிக்கடி சுற்றுலாவிற்கான சிறந்த பேக்கேஜ்களைக் கொண்டுவருகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஆன்மீக பயணம் செல்ல விரும்பினால், செப்டம்பர் மாதம் சார் தாம் பயணம் அற்புதமானதாக இருக்கும். டெல்லியில் இருந்து 12 பகல் மற்றும் 11 இரவு சார் தாம் டூர் பேக்கேஜை முன்பதிவு செய்வதும் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும். செப்டம்பர் 1 முதல் தொடங்கும் இந்தப் பயணப் பேக்கேஜின் பெயர் ஐஆர்சிடிசி சார்தாம் IRCTC Char Dham Yatra Ex Delhi, பேக்கேஜிற்கான குறியீடு NDH24.


சார் தாம் யாத்ரா பதிவு விவரங்கள்


சார் தாம் யாத்திரை டெல்லியில் இருந்து தொடங்கும், அங்கிருந்து ஹரித்வார், யமுனோத்ரி, வடக்கு காசி, கங்கோத்ரி, குப்ட்காஷி, சீதாபூர், கேதார்நாத், கௌரிகுண்ட், பத்ரிநாத், ருத்ரபிரயாக், ஸ்ரீநகர் போன்ற ஆன்மீக மற்றும் அழகான இடங்களுக்குச் செல்ல வாய்ப்பு கிடைக்கும். IRCTC இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் 12 பகல் மற்றும் 11 இரவுகள் கொண்ட இந்த பேக்கேஜை எளிதாக பதிவு செய்யலாம். இது தவிர நீங்கள் எந்த விதமான முன்பதிவு செய்ய வேண்டியதில்லை.


சார் தாம் யாத்திரை கட்டண விவரங்கள்


ஐஆர்சிடிசியின் சிறப்பு சார் தாம் யாத்திரை செப்டம்பர் 1 முதல் தொடங்கும், ஒருவராக மும் பதிவு செய்ய  ரூ.91,550. அதேசமயம் இருவராக செல்ல ரூ.57000, மூன்று பேராக செல்ல என்றால் ரூ.50,490. உங்களுக்கு 5 முதல் 11 வயது வரையிலான குழந்தை இருந்தால், அவருக்கு தனி படுக்கை தேவை என்றால், பேக்கேஜ் கட்டணம் ரூ.30,910. குழந்தைக்கு படுக்கை வசதி தேவையில்லை என்றால், பேக்கேஜ் கட்டணம் ரூ.20,480 ஆக இருக்கும்.


பேகேஜில் கிடைக்கும் வசதிகள்


சார் தாம் பேகேஜில், நீங்கள் 12 நாட்கள் மற்றும் 11 இரவுகள் மிகவும் நல்ல இடங்களில் தங்குவதற்கான வசதியைப் பெறுவீர்கள். இதனுடன், பயணத்திற்கான சிறப்பு டெம்போ டிராவலர்களையும் நீங்கள் பெறுவீர்கள். பேக்கேஜில் நீங்கள் காலை மற்றும் இரவு உணவைப் பெறுவீர்கள். நீங்கள் மதிய உணவை ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். ஆனால் அதற்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும். இது தவிர, மீதி ஏதேனும் செலவு இருந்தால், அதை நீங்கள் செலுத்த வேண்டும்.


மேலும் படிக்க | வெளிநாடு டூர் இனி எளிது தான்... IRCTC வழங்கும் சில வெளிநாட்டு பேக்கேஜ்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ