கொரோனா பரவல் குறைந்த நிம்மதியில் மக்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களை கோடை வெயில் வாட்டி வதைக்க தயராக உள்ளது. அந்த அவதியில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால் டூர் செல்வது சரியான முடிவாக இருக்கும். பக்திமயமான டூராக இருக்க வேண்டும் என்று விரும்பினால், அதற்காக இந்திய ரயில்வே சிறப்பு டூர் பேக்கேஜை அறிமுகம் செய்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் இருக்கும் பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு இந்த சிறப்பு டூர் பேக்கேஜ் மூலம் ஒரே டிரிப்பில் நீங்கள் சென்று வரலாம். ஆனால், 'ஸ்வதேஷ் தர்ஷன் யாத்ரா யோஜனா' என்ற இந்த டூர் பேக்கேஜ் உத்தரப்பிரதேச மக்களுக்காக ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. 10 இரவுகள், 11 நாட்கள் கொண்ட இந்த தொகுப்பில் தென்னிந்தியாவில் இருக்கும் முக்கிய கோயில்களை எல்லாம் பார்க்கலாம். 


மேலும் படிக்க | ரயில் பயணிகளுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்! உயர்கிறது ரயில்வே கட்டணம்


எப்போது தொடங்குகிறது? 


இந்த சிறப்பு டூர் பேக்கேஜ் ஏப்ரல் 28 முதல் தொடங்க உள்ளது. 10 இரவுகள் மற்றும் 11 நாட்கள் கொண்ட இந்த பேக்கேஜுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்த சிறப்பு ரயிலில் ஏசி மற்றும் ஏசி அல்லாத என இரண்டு பெட்டிகளும் கொடுக்கப்படுகிறது. கோரக்பூர், தியோரியா சதார், பெல்தாரா சாலை, மௌ, பனாரஸ், ​​ஜான்பூர், சுல்தான்பூர், லக்னோ, கான்பூர் மற்றும் ஜான்சி பயணிகளின் கோரிக்கையின் காரணமாக இந்த தொகுப்பு ஏற்பாடு செய்துள்ளதாக ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது



கட்டணம் எவ்வளவு? 


3 ஏசி வகுப்பு - ரூ 28750 (ஒரு நபருக்கு)
ஏசி அல்லாத வகுப்பு - ரூ 20440 (ஒரு நபருக்கு)


எந்தெந்த இடங்களுக்கு பயணம்?


ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் முதல் 2022 மே 8 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பேக்கேஜில், கோரக்பூர், வாரணாசி, பிரயாக்ராஜ் சங்கம், லக்னோ மற்றும் கான்பூர் ஆகிய இடங்களில் இருந்து பயணிகள் இந்த ரயிலில் ஏற முடியும். அவர்கள் ராமேஸ்வரம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கோவளம் கடற்கரை, பத்மநாப சுவாமி கோயில், திருப்பதி, ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயில், இஸ்கான் கோயில், ஸ்ரீ காளஹஸ்தி மற்றும் கர்னூலில் உள்ள மல்லிகார்ஜுன ஜோதிர்லிங் கோயில் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.


சலுகைகள் என்ன? 


இந்த தொகுப்பின் கீழ், பயணிகளுக்கு காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு சைவ உணவு, ஏசி அல்லாத பேருந்துகளில் உள்ளூர் பயணம் மற்றும் ஏசி அல்லாத தரம்சாலாக்களில் தங்குவதற்கான ஏற்பாடுகள் போன்றவை வழங்கப்படும். பயணத்தின் போது, ​​சுகாதாரம் மற்றும் கோவிட் நெறிமுறைகளைப் பின்பற்றப்படும். 



முன்பதிவு செய்வது எப்படி?


1. IRCTC-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான irctctourism.com-ல் முன்பதிவு செய்யலாம்.
2.  அந்தந்த பகுதிகளில் இருக்கும் ரயில் நிலையங்களுக்கு சென்று முன்பதிவு செய்யலாம்.


இலவச உதவி எண்கள்


முன்பதிவு தொடர்பான ஏதேனும் சிக்கலை நீங்கள் எதிர்கொண்டாலோ அல்லது இந்தத் தொகுப்பு தொடர்பான கூடுதல் தகவல்களைப் பெற விரும்பினால், IRCTC வழங்கியுள்ள 8595924273, 8595924297, 8595924274, 8287930939, 7081586383, 8287930932 மற்றும் 8595924298 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


மேலும் படிக்க | டிரெயின் டிக்கெட் முன்பதிவுக்கு பின்னர் பணம் செலுத்தலாம் - Paytm பலே திட்டம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR