மக்கள் தொடர்ந்து எரிபொருள் உயர்வினால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், டீசல் இன்ஜின்களில் இயங்கும் ரயில்களில், நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகளிடம் இனி அதிக கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் இந்த கூடுதல் கட்டணம் ஏப்ரல் 15 முதல் அமல்படுத்தப்படும் எனவும், தகவல் வெளியாகியுள்ளது.
டீசல் இன்ஜின்களில் ஓடும் ரயில்களில் பயணிக்கும் பயணிகளிடம் ஹைட்ரோகார்பன் சர்சார்ஜ் (HCS) அல்லது டீசல் வரியாக ரூ.10 முதல் ரூ.50 வரை விதிக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. டீசல் இன்ஜின்களைப் பயன்படுத்தி பாதி தூரத்துக்கு மேல் இயக்கப்படும் ரயில்களுக்கு இந்தக் கூடுதல் கட்டணம் பொருந்தும். அதிகரித்து வரும் எரிபொருள் விலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள எரிபொருள் இறக்குமதியின் தாக்கத்தை குறைக்கும் வகையில் இந்த கட்டணம் உயர்வு அமல்படுத்தப்படுகிறது.
கட்டணம் ரூ.50 வரை உயரும்
ஏசி வகுப்பிற்கு ரூ.50, ஸ்லீப்பர் வகுப்பிற்கு ரூ.25, பொது வகுப்பிற்கு ரூ.10 என மூன்று பிரிவுகளின் கீழ் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். புறநகர் ரயில் பயண டிக்கெட்டுகளில் அத்தகைய கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. நிர்ணயிக்கப்பட்ட தூரத்தில் 50 சதவீதம் டீசலில் இயங்கும் ரயில்களை அடையாளம் காணுமாறு அனைத்து மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்தப் பட்டியல் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திருத்தப்பட வேண்டும். இருப்பினும், ஏப்ரல் 15ம் தேதிக்கு முன்னர், பதிவு செய்யும் டிக்கெட்டுகளுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படுமா என்பது குறித்து எந்த தெளிவான தகவலும் இல்லை.
மேலும் படிக்க | Rail Coach Restaurant: ரயில் பெட்டியை உணவமாக மாற்றி அசத்தும் ரயில்வே!
டீசல் விலை உயர்வுக்கு மத்தியில் எடுக்கப்பட்ட முடிவு
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நிலவும் மோதல்கள், சவுதி அரேபியா மற்றும் ஏமன் இடையே நிலவும் மோதல்கள் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலை தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து மானிய விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தாலும், சப்ளையில் தட்டுப்பாடு நிலவுகிறது. நாட்டில் தொடர்ந்து 12 நாட்களாக எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் எரிபொருட்களின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.
மேலும் படிக்க | ரயில் பயணிகளுக்கு இனி போர்வைகள் வழங்கப்படுமா? ரயில்வே அமைச்சகம் பதில்!
இந்திய ரயில்வேயின் தற்போதைய மின்சார ரயில்கள் தொடர்பான இயக்கத்திற்கும் HCS கூடுதல் கட்டணம் பயன்படுத்தப்படும். தேசிய போக்குவரத்துக் கருவியான 'மிஷன் 100% மின்மயமாக்கல் - நிகர ஜீரோ கார்பன் உமிழ்வு' திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் நட்பு, பசுமை மற்றும் தூய்மையான போக்குவரத்தை வழங்குவதற்காக ரயில்வே தனது அகலப்பாதை வலையமைப்பு முழுவதையும் மின்மயமாக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
அடிப்படைக் கட்டணத்தைத் தொடாமல், கூடுதல் கட்டணத்தைச் சேர்த்து, சலுகைகளைக் குறைத்து அல்லது வசதிகளைக் குறைத்து மொத்தக் கட்டணத்தை உயர்த்த ரயில்வே வாரியம் முயற்சிக்கிறது.
மேலும் படிக்க | ஸ்மார்ட்ஃபோன் மூலம் இலவசமாக ரயிலை கண்காணிப்பது எப்படி?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR