இந்திய ரயில்வே மூலம் நாள்தோறும் கோடிக்கணக்கானோர் பயணிக்கும் நிலையில், பயணிகளின் சிரமங்களை போக்கும் வகையில் தொடர்ந்து புதிய முயற்சிகளை ரயிவே மேற்கொண்டு வருகிறது.  அந்த வகையில், ஐஆர்சிடிசி சூப்பர் ஆப் என பெயரிடப்பட்டுள்ள புதிய செயலியை இந்திய ரயில்வே பயணிகளுக்கு மிக விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. பயணிகளுக்கு மிகவும் வித்தியாசமான மற்றும் நல்ல அனுபவத்தை அளிக்க உதவும் இந்த செயலியில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய IRCTC செயலி அல்லது இணையதளத்தைப் பயன்படுத்த வேண்டும். ரயிலின் நிலையை அறிய அல்லது PNR சரிபார்க்க, மற்றொரு செயலியை பயன்படுத்த வேண்டும். ஆனால் ரயில்வேயின் சூப்பர் ஆப் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்த சிக்கல்கள் எதுவும் இருக்காது. இந்த சூப்பர் செயலியின் உதவியுடன், அனைத்து சேவைகளும் விரல் நுனியில் கிடைத்துவிடும். இந்த செயலியின் மூலம், பயனர்களின் பல பணிகள் எளிதாகிவிடும். மேலும், டிக்கெட் முன்பதிவு, சரக்கு முன்பதிவு, உணவு ஆர்டர் செய்தல் என ரயிவே தொடர்பான அனைத்து சேவைகளை பெறவும் ஒரே செயலி போதுமானதாக இருக்கும். 


IRCTC Super App என்றால் என்ன?


சூப்பர் ஆப் செயலியை உருவாக்குவதன் நோக்கம் டிஜிட்டல் பயன்பாட்டை ஊக்குவிப்பதாகும். இந்த செயலியின் உதவியுடன், பயனர்கள் எல்லாவற்றிற்கும் வெவ்வேறு செயலியை பயன்படுத்த வேண்டிய நிலை மாறி, இப்போது சூப்பர் ஆப் மூலம் பயனர்கள் ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே செயலி மூலம் பெறலாம்.


மேலும் படிக்க | IRCTC ரயில் டிக்கெட் புக்கிங்கில் சலுகைகளை பெற... இந்த கிரெடிட் கார்டுகள் உதவும்


சூப்பர் செயலியின் நன்மைகள்


IRCTC மற்றும் இந்திய ரயில்வே தொடர்பான வெவ்வேறு செயலிகளில் கிடைக்கும் அனைத்து சேவைகளையும் Super App செயலியில் பெறுவீர்கள். இந்த செயலியைப் பயன்படுத்தி, பயணிகள் முன்பதிவு செய்யப்பட்ட மற்றும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள், நடைமேடை டிக்கெட்டுகள் மற்றும் ரயில் டிக்கெட்டுகளையும் வாங்கலாம். இதனுடன், இந்த செயலி மூலம் பயணிகள் உணவையும் ஆர்டர் செய்யலாம். சூப்பர் ஆப் செயலியில், IRCTC Rail Connect, Rail Madad மற்றும் பிற அனைத்து தளங்களின் சேவைகளும் கிடைக்கும்.


ஐஆர்சிடிசியில் டிக்கெட் முன்பதிவு சேவை


சூப்பர் ஆப் வந்த பிறகும், டிக்கெட் முன்பதிவு சேவை ஐஆர்சிடிசியால் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது. ஐஆர்சிடிசியில் இருந்து டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை பயணிகள் தொடர்ந்து பெறுவார்கள். சூப்பர் செயலியை இரயில்வே தகவல் அமைப்பு மையத்துடன் (CRIS) இணைந்து IRCTC உருவாக்கியுள்ளது. இந்த புதிய செயலியின் அனைத்து மேம்பாடுகளும் CRIS அமைப்பால் நிர்வகிக்கப்படும். சூப்பர் ஆப் செயலி இந்த மாதத்திலேயே தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | கன்பார்ம் ரயில் டிக்கெட்டுகளுடன் பயணம் செய்ய ரயில்வே புதிய விதி, பயணம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ