ரயில்வே பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி. பிப்ரவரி 14 முதல், அனைத்து ரயில்களிலும் கேட்டரிங் வசதியை மீண்டும்  தொடங்க IRCTC முடிவு செய்துள்ளது. முன்னதாக ஜனவரியில், 428 ரயில்களில் மட்டுமே இந்த வசதி மீண்டும் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பரில், 30 சதவீத ரயில்களில் இந்த வசதி மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது மீதமுள்ள ரயில்களுடன், அனைத்து ரயில்களிலும் கேட்டரிங் வசதி மீண்டும் தொடங்கப்பட உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக, 2020 ஆகஸ்ட் 5 முதல், ரயில்களில் Ready-To-Eat உணவு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டது. கொரோனா பாதிப்புகள் குறைவதைக் கருத்தில் கொண்டு, ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ போன்ற பிரீமியம் ரயில்களில் ரெடி-டு--ஈட் வகை உணவுகள் வழங்கும் வசதி டிசம்பர் 21 முதல் தொடங்கப்பட்டது  என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | Indian Railways: 5 இலக்க ரயில் எண்ணில் புதைந்துள்ள தகவல்கள்!


முன்னதாக, 23 மார்ச் 2019 அன்று, கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கேட்டரிங் சேவைகள் நிறுத்தப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளதால், ரயில் பயணிகளின் ரயில் பயணத்தை மேலும் எளிதாக்கும் வகையில், ஐஆர்சிடிசி, ரயில் பயணிகளுக்கான கேட்டரிங் வசதியை மீண்டும் தொடங்க முடிஎடுத்துள்ளது.


நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்காக சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில், 50,407 புதிய கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. நாட்டில் கோவிட் தொற்று காரணமாக சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 6,10,443 ஆக குறைந்துள்ளது.


கடந்த 6 நாட்களாக, நாட்டில் தினசரி கோவிட் தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 87,359 கோவிட்-19 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். நாட்டில் நோயாளிகளின் தேசிய அளவிலான குணமடையும் விகிதம் 97.37 சதவீதமாக உள்ளது.


மேலும் படிக்க | Indian Railways: உங்கள் ரயில் டிக்கெட்டில் 'வேறு ஒருவரும்' பயணிக்கலாம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR