அந்தமான் சுற்றி பார்க்க ஆசையா? IRCTC வழங்கும் சூப்பர் ஆபர் இதோ!
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) அந்தமானுக்கு 5 இரவுகள் மற்றும் 6 பகல்களுக்கான விமான பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமான் தீவுகள் சிறப்பான சுற்றுலா தளமாக விளங்குகிறது. அந்தமான் கடற்கரையில் சூரிய ஒளியில் ஓய்வெடுப்பது பலருக்கும் பிடித்தமான ஒன்று, இதனாலேயே பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இந்த இடத்திற்கு படையெடுத்து வருகின்றனர். அந்தமான் அழகான கடற்கரை, பசுமையான காடுகள் மற்றும் அற்புதமான டைவிங் போன்ற பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. அந்தமான் போக பலரும் விமானம் மூலம் செல்வது, படகு மூலம் பயணிப்பது என பல்வேறு திட்டங்களை கொண்டிருப்பார்கள். அந்தமான் செல்ல விரும்புபவர்களுக்காக ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜை வழங்குகிறது, இந்த டூர் பேக்கேஜை தேர்வு செய்வதன் மூலம் நீங்கள் சிறப்பான பயணத்தை அனுபவிக்கலாம். இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) அந்தமானுக்கு 5 இரவுகள் மற்றும் 6 பகல்களுக்கான விமான பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | இனி சர்வமும் AI மட்டுமே - எலான் மஸ்க் வைத்திருக்கும் மாஸ் பிளான்..!
இந்த பேக்கேஜில் உங்களது பயணம் டெல்லியில் இருந்து விமானப் பயணம் மூலம் தொடங்கும். பேக்கேஜின் பெயர் அமேசிங் அந்தமான் எக்ஸ் டெல்லி, இந்த பேக்கேஜிங் கீழ் நீங்கள் மார்ச் 13 மற்றும் 27 ஆகிய இரண்டு தேதிகளில் அந்தமானுக்கு பயணம் செய்யலாம். இதில் டூர் பேக்கேஜில் போர்ட் பிளேர், ஹேவ்லாக் தீவு, நீல், நார்த் பே மற்றும் ராஸ் தீவு ஆகிய 4 சுற்றுலா தளங்களுக்கு செல்லலாம். டெல்லி விமான நிலையத்திலிருந்து காலை 5:50 மணிக்கு புறப்படும் மற்றும் ஒரு நாள் 1 காலை 11 மணிக்கு போர்ட் பிளேயரை வந்தடையும். டூர் பேக்கேஜின் விலை பயணிப்பவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது. இந்த தொகுப்பின் குறைந்தபட்ச விலை ஒரு நபருக்கு ரூ.53,500 ஆக இருக்கும். மூன்று பேர் சேர்ந்து பயணிக்கும் போது, இரண்டு பேருக்கு, ஒரு நபருக்கு, 54,500 ரூபாய் மற்றும் தனியாக பயணிப்பவர்களுக்கு பேக்கேஜ் ரூ.67,100 ஆக இருக்கும். 5-11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு படுக்கையுடன் ரூ.48,900 மற்றும் படுக்கை இல்லாமல் ரூ.46,800 செலுத்த வேண்டும். 2-4 வயது குழந்தைகளுக்கு படுக்கையில்லாமல் ரூ.35,200 செலுத்த வேண்டும்.
டூர் பேக்கேஜில் கிடைக்கும் வசதிகள்:
- கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன்ஸ் (டெல்லி - போர்ட் பிளேர் மற்றும் போர்ட் பிளேர் - டெல்லி) விமான டிக்கெட்டுகள்.
நன்கு அமைக்கப்பட்ட ஏசி அறைகளில் தங்குமிடம் (போர்ட் பிளேயரில் மூன்று இரவுகள், நீலில் ஒரு இரவு & ஹேவ்லாக்கில் ஒரு இரவு).
- ஏசி AC வாகனம் மூலம் அனைத்து இடத்திற்கும் அழைத்து செல்லப்படும்.
- ஹோட்டலில் உணவு - 05 விதமான காலை உணவுகள் மற்றும் 05 விதமான இரவு உணவுகள்.
- படகு டிக்கெட்.
- செல்லுலார் ஜெயில், சத்தம் மில், சாமுத்ரிகா கடற்படை கடல் அருங்காட்சியகம் ஆகியவற்றின் நுழைவு கட்டணம்.
- ஜிஎஸ்டி மற்றும் பிற அனைத்து வரிகளும் பொருந்தும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ