IRCTC Tour Package: வெறும் 8000 ரூபாயில் 5 நாட்கள் ஊட்டியை சுற்றி பார்க்கலாம்!
தற்போது ஐஆர்சிடிசி குறைவான செலவில் ஊட்டி, முதுலை மற்றும் குன்னூருக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வாய்ப்பு வழங்குகிறது. 4 இரவு மற்றும் 5 பகல் கொண்ட இந்த டூர் பேக்கேஜ் சென்னையில் இருந்து தொடங்குகிறது.
உள்நாட்டிற்குள்ளோ மற்றும் வெளிநாடுகளுக்கோ மலிவு விலையில் சொகுசாக பயணம் செய்யக்கூடிய டூர் பேக்கேஜ்களை ஐஆர்சிடிசி தனது பயணிகளுக்கு அறிமுகப்படுத்துகிறது. இவற்றில் சுற்றுலாத் தலங்கள் மட்டுமின்றி சுற்றிப் பார்க்கும் இடங்களும் அடங்கும். தற்போது ஐஆர்சிடிசி குறைவான செல்வதில் ஊட்டி, முதுலை மற்றும் குன்னூருக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வாய்ப்பு வழங்குகிறது. 4 இரவு மற்றும் 5 பகல் கொண்ட இந்த டூர் பேக்கேஜ் சென்னையில் இருந்து தொடங்குகிறது, சென்னை இரயில் நிலையத்திலிருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் இந்த ரயிலை பிடிப்பதன் மூலம் நீங்கள் உங்கள் விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்கலாம். பயணம் செய்ய விரும்பும் பயணிகள் ஜூன் 1 ஆம் தேதி இரவு 9.05 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 12671 நீலகிரி எக்ஸ்பிரஸ்ஸில் ஏற வேண்டும். இதன் முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், இந்த டூர் பேக்கேஜிங்கில் ரயில் முன்பதிவு, ஹோட்டல் தங்கும் வாடகை மற்றும் காரில் வெவ்வேறு இடங்களுக்குச் செல்வதற்கான செலவு ஆகிய அனைத்துமே அடங்குகிறது.
இரவுப் பயணத்திற்குப் பிறகு, பயணிகள் காலையில் மேட்டுப்பாளையத்தை அடைவார்கள், அங்கு அவர்களை ரயில் நிலையத்திலிருந்து அழைத்துச் செல்ல ஆட்கள் தயாராக இருப்பார்கள். பின்னர் பயணிகளை அழைத்துக்கொண்டு சாலை மார்க்கமாக ஊட்டிக்குச் செல்வார்கள். ஐஆர்சிடிசியின் இந்த டூர் பேக்கேஜின் பெயர் ஊட்டி-முதுமலை பேக்கேஜ், இதில் ஊட்டி மற்றும் முதுமலை தவிர குன்னூரும் உங்களுக்கு சுற்றி காட்டப்படும். ஊட்டிக்கு வந்ததும், ஹோட்டலில் செக்-இன் செய்த பிறகு, தொட்டபெட்டா சிகரம் மற்றும் தேநீர் அருங்காட்சியகத்திற்கு உங்களை அழைத்து செல்வார்கள். அந்த பகுதிகளை சுற்றிப் பார்த்த பிறகு மீண்டும் ஊட்டியை அடைந்து, ஊட்டி ஏரி மற்றும் தாவரவியல் பூங்காவை பார்வையிட்டு ஊட்டியிலேயே இரவு நேரத்தை செலவிடுவீர்கள். அதன்பிறகு மூன்றாம் நாள் காலையில் பைக்காரா நீர்வீழ்ச்சி, ஏரி உள்ளிட்ட அழகான இடங்களுக்குஅழைத்து செல்லப்படுவீர்கள், அப்படியே முதுமலை வனவிலங்கு சரணாலயத்துக்குச் சென்று யானைகள் முகாம் மற்றும் காட்டு சவாரி ஆகியவற்றை அனுபவிக்க முடியும். இதனை முடித்த பிறகு மீண்டும் ஊட்டியில் உள்ள ஹோட்டலுக்குத் திரும்பி அன்றைய இரவு அங்கு தாங்குவீர்கள்.
நான்காவது நாளில் ஊட்டியில் சிம்ஸ் பார்க், லாம்ப்ஸ் ராக் மற்றும் டால்பின் நோஸ் போன்ற பல்வேறு இடங்களை சுற்றி பார்ப்பேர்கள். அதன் பிறகு ஹோட்டலில் இருந்து செக் அவுட் செய்து குன்னூரை அடைந்து அங்குள்ள சுற்றுலா தளங்களை நீங்கள் சுற்றி பார்க்கலாம். இதற்கு பின்னர் சாலை மார்க்கமாக மேட்டப்பாளையம் ரயில் நிலையம் வந்தடைந்து, இங்கிருந்து ரயில் மூலம் சென்னை திரும்பி சரியாக 5ம் தேதியன்று தேதி காலை சென்னை வந்தடைவீர்கள். நீங்களே முன்பதிவு செய்தால், இந்த டூர் பேக்கேஜுக்கு நீங்கள் ரூ. 20,750 செலவழிக்க வேண்டும், அதே நேரத்தில் 2 பேருக்கான கட்டணம் ரூ.10,860 ஆக இருக்கும். 3 பேருக்கு முன்பதிவு செய்ய ரூ.8300 செலவிட வேண்டும். இந்தக் கட்டணத்தில் நீங்கள் இண்டிகா காரில் அழைத்துச் செல்லப்படுவீர்கள். அதேசமயம் நீங்கள் இன்னோவா காரில் பயணிக்க விருப்பப்பட்டால் அதற்கான கட்டணத்தில் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ