தென்னிந்தியாவை பொறுத்த வரை, தேங்காய் எண்ணெயின் பயன்பாடு கேரளாவில்தான் அதிகம் உள்ளது. உடல் நலனை பேணிக்காக்க விரும்புபவர்கள், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள விரும்புபவர்கள் மட்டுமே தேங்காய் எண்ணெயை தங்களது உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். தமிழ் நாட்டை பொறுத்த வரை கடலை எண்ணெய், பாமாயில் மற்றும் நல்லெண்ணை ஆகியவற்றின் பயன்பாடுதான் அதிகம் இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேங்காய் எண்ணெய் பயன்பாடு:


கடந்த சிலஆண்டுகளில் தேங்காய் எண்ணெயும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் பிரபலமாகி வருகிறது. உணவில் ஆரம்பித்து, தோல் வரை மற்றும் முடி வரை, தேங்காய் எண்ணெய் நம் வீட்டில் பல்வேறு பயன்பாடுகளுக்கு ஆளாக்கப்படுகிறது. சிலர், தேங்காய் எண்ணெய் உடல் எடையை குறைப்பதில் இருந்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது வரை அதன் ஆரோக்கிய  பண்புகளைக் கூறுகின்றனர். இருப்பினும், தேங்காய் எண்ணெயின் ஆரோக்கியம் என்பது சுகாதார வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடையே தொடர்ந்து விவாதத்திற்குரிய ஒரு தலைப்பாக இருந்து வருகிறது. தேங்காய் எண்ணெய் சில நேர்மறையான அம்சங்களைக் கொண்டுள்ளது என்பது உண்மைதான் என்றாலும், பலர் கூறுவது போல  போல் எல்லா நேரங்களிலும் ஆரோக்கியமானதாக இருக்காது என்பது ஒரு சில மருத்துவ வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. அப்படி தேங்காய் எண்ணெய் ஆபத்தானதாக மாறுவதற்கு இருக்கும் காரணங்கள் என்ன? இங்கு பார்ப்போம். 


1.அதிக கொழுப்பு சத்துக்கள்:


தேங்காய் எண்ணெயில் நிறைவுற்ற கொழுப்புகள் (High Saturated Fat Contetn) நிறைந்துள்ளன. அதன் கொழுப்பு அமில கலவையில் சுமார் 82% நிறைவுற்றதாக உள்ளது. நிறைவுற்ற கொழுப்புகளை எல்டிஎல் என குறிப்பிடுகிறோம். தேங்காய் எண்ணெய் இந்த கொழுப்பின் அளவை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இது பொதுவாக கெட்ட கொலஸ்ட்ரால் என குறிப்பிடப்படுகிறது. உயர்த்தப்பட்ட எல்டிஎல் அளவுகள் இதய நோய் மற்றும் பிற இருதய பிரச்சினைகள் காரணமாய் அமைகிறது. 


2.எடை அதிகரிப்பதற்கான சாத்தியம்:


தேங்காய் எண்ணெய் எடை இழப்புக்கு உதவும் என்ற பலர் நம்பிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், இதில் உள்ள கலோரிக்களின் அளவு உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயில் சுமார் 120 கலோரிகள் மற்றும் 14 கிராம் கொழுப்பு உள்ளதாக கூறப்படுகிறது. டயட் இருக்கும் வேலைகளில், சாலட் அல்லது நீங்கள் எடுத்துக்கொள்ளும் ஏதேனும் உணவில் கொஞ்சமாக தேங்காய் எண்ணெயை சேர்ப்பது கூட உடல் எடையை அதிகரித்து விடும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அப்படி தேங்காய் எண்ணெயை உணவில் சேர்த்துக்கொள்வதாக இருந்தால் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எடை அதிகரிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும்.


மேலும் படிக்க | டக்குன்னு வெயிட் லாஸ் செய்யனுமா? 5 நாட்களுக்கு ‘இந்த’ உணவுகளை மட்டும் சாப்பிடுங்க!


3.அதிகம் பதப்படுத்தப்பட்டது..


தேங்காய் எண்ணெய் நமது சமையலறைக்கு வந்து சேர்வதற்கு முன்பு பல பதபடுத்தப்படும் முறைகளுக்கும் ஆளாக்கப்படுகிறது. இதனால் அதன் ஆரோக்கிய நன்மைகள் குறைந்து போகலாம். கெட்டுப்போய் விடக்கூடாது என்பதற்காக இந்த எண்ணெய் அதிகம் சூடாக்கப்படுவதால் இதில் உள்ள கொழுப்பின் அளவு அதிகரிக்கும். இதை உட்கொண்டால் நமது உடலில் உள்ள கொழுப்பின் அளவும் அதிகரிக்கும் என சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


4.வரையறுக்கப்பட்ட அறிவியல் சான்றுகள்:


தேங்காய் எண்ணெய், உடல் நலனுக்கு உதவும் என கூறப்பட்டாலும் அதை நிரூபிக்கும் வகையிலான அறிவியல் சான்றுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. இன்னமும் தேங்காய் எண்ணெயின் ஆரோக்கிய விளைவுகள் குறித்த ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிதான் இருக்கின்றன. மேலும் இதய ஆரோக்கியம், எடை மேலாண்மை மற்றும் பிற சுகாதார அம்சங்களில் அதன் தாக்கம் பற்றிய உறுதியான ஆதாரங்களை நிறுவ இன்னும் விரிவான ஆய்வுகள் தேவை. எனவே, தேங்காய் எண்ணெய் மட்டுமன்றி எந்த எண்ணெயாக இருந்தாலும் அதை உபயோப்பதால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என தெரிந்த பின்னர் எடுத்துக்காெள்வது சிறந்தது. 


மேலும் படிக்க | கத்தி போல புத்தியையும் ஷார்ப் ஆக்க வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள் போதும்!


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ