முகப்பருவுக்கு எச்சில் சிறந்த மருந்து? தமன்னா சொன்ன மேட்டர் - உண்மையா?
Lifestyle News: எச்சில் தொட்டு துடைத்தால் முகப்பருக்கள் குணமாகிவிடும் என நடிகை தமன்னா கூறியது உண்மையா அல்லது கட்டுக்கதையா என்பது குறித்து இங்கு காணலாம்.
Lifestyle News In Tamil: சிறுவயதில் ஏதும் காயம் ஏற்பட்டால் நாம் வாயில் எச்சிலை தொட்டு, அது சரியாகிவிடும் என்பது நம்பிக்கையாக இருந்தது. இது நாளடைவில் சற்றே வினோதமாக இருக்கும் என்பதால் நாம் அதை வளர்ந்த பின்னரும் செய்ய மாட்டோம். முறையாக மருத்துவரிடம் சென்று அந்த காயத்திற்கான மருத்தை நாம் போட்டிருப்போம். ஆனால், எச்சிலை தொட்டு காயத்திற்கு மருந்தாக வைக்கும் பழக்கம் சரியா தவறா என நீங்கள் என்றாவது யோசித்திருக்கிறீர்களா...? அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
எச்சில் என்பது வாயை ஈரத்தன்மையுடன் வைத்திருக்கவும், வாய் பகுதியில் கிருமிகளுக்கு எதிராகவும் செய்படுகிறது. மேலும், பற்சிதைவு பிரச்னையையும் எச்சில் தடுக்கிறது. இவைதான் எச்சிலின் முக்கிய பணிகள் எனலாம். ஆனால், இதில் எப்படி காயங்களுக்கு மருந்தாக எச்சில் மாறியது என்றுதான் தெரியவில்லை. இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், "வாய் பகுதியில் கிருமிகளுக்கு எதிராக எச்சில் செலுத்தப்படும் என்பதால், அதை மட்டும் வைத்துக்கொண்டு காயங்களிலும் எச்சிலை வைக்கும் பழக்கத்தை மக்கள் கடைபிடிக்கிறார்கள்" என்கின்றனர்.
தமன்னா சொன்ன மேட்டர்...
இதில் ஒருபடி மேலே சென்று கடந்த 2021ஆம் ஆண்டில் நடிகை தமன்னா ஆச்சர்யமளிக்கும் வகையில், உங்களின் முகப்பருக்களை குணமாக்க எச்சிலே சிறந்த மருந்து என பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அந்த பேச்சு அப்போதே வைரலான நிலையில் அது தற்போது இணையத்தில் வட்டமடித்து வருகிறது எனலாம். தமன்னாவே சொல்லிவிட்டார் எச்சிலால் முகத்தில் பருக்களை போக்கிவிட முடியும் என பலரும் அதனை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினர்.
வைரலான வீடியோ
மேலும் படிக்க | எடையை குறைக்க சிம்ரன் செய்த விஷயம்! தினமும் ‘இந்த’ உடற்பயிற்சி..
தமன்னா அந்த வீடியோவில் கூறியதாவது,"உங்கள் சொந்த எச்சிலே, அதுவும் காலையில் எழுந்த உடன் சுரக்கும் எச்சில் என்பது, உண்மையில் உங்களின் முகப்பருவை உலர்த்தும் திறன் கொண்டது. இது உங்களின் முகப்பருக்களை போக்கும். இது கேட்க ஒரு மாதிரியாக இருந்தாலும் இது வேலை செய்யும்" என பேசியிருந்தார். இதை ஏற்றவர்கள் இருந்தது போல் இதனை மறுத்தவர்களும் அதிகம் இருந்தார்கள்.
மருத்துவர்கள் மறுப்பு
அதுவும் மருத்துவ வல்லுநர்கள் இதுகுறித்து கூறுகையில், முகப்பருக்களை குணமாக்க அறிவியல் ரீதியில் பல வழிகள் இருக்கும் சூழலில், எச்சிலை கொண்டு அவற்றை குணமாக்க நினைப்பது தவறானது என்றும் அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் இதுவரை எந்த ஆய்வும் வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கின்றனர். ஒருவேளை எச்சிலுக்கு அந்த குணம் இருந்தால், மருத்துவர்கள் உங்களின் காயங்களின் மேல் எச்சில் துப்பியே அதனை குணமாக்கிவிட முடியுமே, ஏன் அதை யாரும் செய்யவில்லை என்றும் எதிர்கேள்வி எழுப்புகின்றனர்.
உமிழ்நீரை சமருத்தில் பயன்படுத்துவது என்பது பாக்டீரியா போன்றவற்றுக்கு நீங்கள் அழைப்பு விடுப்பது போன்றாகும். அதாவது, இது முகப்பருவை மேலும் மோசமாக்கும். கூடவே, பிற தோல் பிரச்சனைகளை கூட ஏற்படுத்தலாம். எனவே, இதுபோன்று அறிவியல் பூர்வமாக உறுதிசெய்யப்படாத தீர்வுகளையும், சிகிச்சைகளையும் நோக்கி நகராமல் உரிய மருத்துவர்களை சந்தித்து அவர்களிடம் ஆலோசனை பெற்று சிகிச்சை பெறும்படி இங்கு அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தப்படுகிறது.
மேலும் படிக்க | உருளைக் கிழங்கு சாப்பிட்டால் உடல் எடை கூடுமா? கட்டுக்கதைகளும் விளக்கமும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ