உருளைக் கிழங்கு சாப்பிட்டால் உடல் எடை கூடுமா? கட்டுக்கதைகளும் விளக்கமும்

Potatoes Myths and Facts : உருளைக் கிழங்கு சாப்பிட்டால் உடல் எடை கூடிவிடும் என பொதுவாக நம்பப்பட்டு வருகிறது. ஆனால் இது உண்மையா? என்பதை தெரிந்து கொள்வோம்.

Potatoes Myths and Facts : உருளைக் கிழங்கு ஊட்டச்சத்து நிறைந்திருக்கும் காய்கறி என்றாலும் அதனை சாப்பிட்டால் உடல் எடை கூடிவிடும் என்பதற்காக பலரும் சாப்பிடுவதை தவிர்த்து வருகிறார்கள். ஆனால் அது உண்மையா? என்பதை தெரிந்து கொள்ளலாம்.

1 /8

சீக்கிரம் சமைக்க வேண்டும், அதிலும் ருசியாக சமைக்க வேண்டும் என்றால் பலரின் முதல் தேர்வு உருளைக் கிழங்கு தான். இதில் பல ஊட்டச்சத்துகளும் நிறைந்திருக்கின்றன. ஆனாலும், உடல் எடை கூடிவிடும் என்பதற்காக உருளைக் கிழங்கு சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்து வருகின்றனர். 

2 /8

உடல் எடை கூடிவிடும் என்பதால் உருளைக் கிழங்கு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது என்று அறிவுரை கூட பலரும் சொல்வதுண்டு. இந்த காரணத்தாலேயே எந்த பிரச்சனையும் இல்லாதவர்கள் கூட உருளைக் கிழங்கு சாப்பிடுவதை அதிகம் தவிர்ப்பதும் உண்டு. ஆனால் இதனைச் சுற்றி பல கட்டுக்கதைகள் இருக்கின்றன.

3 /8

முதல் கட்டுக்கதை, உருளைக்கிழங்கில் அதிகம் கார்போஹைட்ரேட் இருப்பதால் இயற்கையாகவே எடையை அதிகரிக்கிறது என்பது தான். ஆனால், பொதுவான இருக்கும் இந்த கருத்து தவறானது. 

4 /8

உருளைக்கிழங்கு சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளின் சிறந்த மூலமாகும், இது ஆற்றல் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதனுடன், உருளைக்கிழங்கில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. 

5 /8

மிட்ரேஞ் உருளைக்கிழங்கில் சுமார் 110 கலோரிகள் உள்ளன, இது குறைந்த கலோரி உணவு தான். உருளைக்கிழங்கில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. இதனை சாப்பிடும்போது திருப்தியை உணரலாம்.

6 /8

இன்னொரு கட்டுக்கதை என்னவென்றால், உருளைக்கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களும் எடையை அதிகரிக்கின்றன என்பது. உண்மை என்னவென்றால், உருளைக் கிழங்கை எண்ணெய்யில் வறுப்பது அல்லது வெண்ணெய் மற்றும் சீஸ் உடன் சேர்த்து சமைப்பது தான் கலோரியை அதிகரிக்கின்றன.   

7 /8

இவற்றுடன் சேர்த்து சமைக்கும்போது மட்டுமே உருளைக்கிழங்கின் கலோரிகள் அதிகரிக்கின்றன. இதற்கு உருளைக் கிழங்கு காரணமல்ல. நீங்கள் உருளைக்கிழங்கை எப்படி சமைக்கிறீர்கள் என்பதை பொறுத்தே உங்கள் எடை அதிகரிக்கிறதா இல்லையா என்பது முடிவாகிறது. நன்கு வேக வைத்து சாப்பிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. 

8 /8

மூன்றாவது கட்டுக்கதை, உருளைக்கிழங்கு சாப்பிடாமல் இருப்பது உடல் எடையை குறையும் என்பது. உருளைக் கிழங்கு சாப்பிடாமல் இருந்தால் எல்லாம் உடல் எடை குறையாது. உங்களின் தனிப்பட்ட உணவு முறை, உடல் செயல்பாடு மற்றும் வளர்ச்சிதை காரணிகளைப் பொறுத்தே உடல் எடை கூடுவதும், குறைவதும். ஆரோக்கியமான உணவுப்பழக்கம், சீரான உடற்பயிற்சி இருந்தால் உடல் எடையும் சீராக இருக்கும்.