பித்ரு தோஷம் என்பது என்ன? பித்ரு தோஷம் இருந்தால், அதற்கு ஒருமுறை பரிகாரம் செய்தால் மட்டும் போதுமா? இது குறித்து உங்களுக்காக சில தகவல்கள். இந்திய பாரம்பரியத்தில் இதுபோன்ற தோஷங்களும் அதற்கான பரிகாரங்களும் உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பித்ரு தோஷம் நீங்க ஒருமுறை சென்று பரிகாரம் செய்தால் மட்டும் நீங்காது. தொடர்ச்சியாக அமாவாசை, இறந்த திதி, மகாளயம் மற்றும் பித்ரு தினமான மக நக்ஷத்திரம் போன்ற தினங்களில் தர்பணம், ஸ்ரார்தம் செய்ய வேண்டும். 


நம் நாட்டில் 7 பித்ரு ஸ்தலங்கள் உள்ளன. காசி, ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி என இந்த ஏழு இடங்களிலும் பித்ருகளுக்கு காரியம் செய்யலாம், தோஷங்களை நீக்கலாம். 


Also Read | Tripathi Balaji:  திருப்பதி தெய்வத்தின் சனிக்கிழமை பக்தி உலா


இராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ருக்கள் சம்பந்தமான அனைத்து பூஜைகளும் தமிழ்நாட்டின் திலதர்ப்பணபுரியிலும் செய்யலாம்.  இந்த திருக்கோயில் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது.  


அங்கு சென்று பித்ரு தோஷத்திற்கான மந்திரத்தை செய்து, பாரம்பரிய முறைப்படி பூஜை புனஸ்காரங்கள் செய்யவேண்டும்.


"தேவதாப்ய: பித்ருப்ய: மஹா யோகிப்ய ஏவச நம: 
ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:" 
என்றும் யேஷாம் ந மாதா ந பிதா ந மித்ர ஜ்ஞாதி பாந்தவ: | 
தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மாயோத் ஸ்ருஷ்டை: குசோதகை: 


என்ற மந்திரம் பித்ரு தோஷத்தை போக்க வல்லது. அவ்வாறு செய்தால்தான் பித்ரு தோஷம் முழுமையாக நீங்கும்.


Also Read | இன்றைய பஞ்சாங்கம் 17 ஏப்ரல் 2021


புனிதமான ஆடி அமாவாசையன்று, குடும்ப முன்னோரையும், மறைந்த தாய், தந்தையரையும் நினைத்து திதி கொடுப்பது புண்ணியத்தைத் தரக்கூடியது. 


புண்ணிய நதிகள், கடல் போன்ற இடங்களில் புனித நீராடி இஷ்டதெய்வ ஆலயங்களில் வழிபாடு, சிறப்பு பூஜைகள் செய்வதும், ஏழை-எளியோருக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்வது நன்மை தரும்.


இது போன்ற தானங்களை மனம் உவந்து செய்வதால் நாம் செய்த பாவங்கள், கர்மவினைகள், தீவினைகள் அனைத்தும் நீங்கி வளமுடன் வாழலாம்.


Also Read | கலையைப் பாதுகாக்க அரசின் ஆதரவைக் கோரும் சவுராஷ்டிரா கைத்தறி நெசவாளர்கள்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR