தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், மதுரையில் பிரதமர் நரேந்திர மோடியின் பிரசாரம் அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. அவரது பிரசாரம் தேர்தலுக்கானதாக இருந்தாலும், அது குஜராத்தில் இருந்து மதுரைக்கு புலம் பெயர்ந்த மக்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.
மதுரை கிருஷ்ணபுரம் காலனி, நெசவாளர் காலனி என்ற பெயரிலும் அறியப்படுகிறது. இங்கு பல காலத்திற்கு முன்னதாக குடியேறிய கைத்தறி நெசவாளர்களின் சமூகம் வசிக்கும் பகுதி இது. குஜராத்தின் தீபகற்பப் பகுதியான சவுராஷ்டிராவைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர்கள் பெருமளவில் இங்கு வசிக்கின்றனர்.
சவுராஷ்டிராவிலிருந்து வந்த நெசவாளர் சமூகம் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திற்கு குடிபெயர்ந்து தமிழ்நாட்டின் கலாச்சார தலைநகரத்தை தங்கள் இருப்பிடமாக மாற்றிக்கொண்டது.
Also Read | "எங்க வீட்டுக்கு நீங்க வருவீங்களா” என்ற சிறுமியின் அழைப்பை ஏற்று அசத்திய அண்ணாமலை
தமிழ் கலாச்சாரம் மற்றும் மரபுகளில் முழுமையாக இணைந்திருப்பதால், சவுராஷ்டிர மக்கள், இங்குள்ள தமிழர்களிடம் இருந்து பிரித்தறிய முடியாதவர்கள் என்றே சொல்லலாம், சவுராஷ்டிர மொழியில் பேசினாலும், மதுரை தமிழே அவர்களின் பேச்சு வழக்காக இருக்கிறது.
நெசவாளர்கள் காலனியில் வசிக்கும் கிட்டத்தட்ட 300 குடும்பங்களில், சுமார் 200 பேர் பாரம்பரிய மரக் கைத்தறி நெசவு இயந்திரங்கள் மூலம் நெசவு செய்கின்றனர். கிட்டத்தட்ட 150 சதுர அடி பரப்பளவு ஒரு மரக் கைத்தறிக்கு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
கைத்தறித் தொழிலுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட ஒரு வர்த்தகர் ஹரிதாஸ் விநாயகா, இளைய தலைமுறையினர் மற்ற தொழில்களுக்கு மாறிவிட்டனர் என்று கூறுகிறார். "இந்த கலை வடிவம் ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு பரிமாற்றப்படுகிறது. ஆனால் இன்று வயதானவர்கள் மட்டுமே இந்த பாரம்பரிய நெசவுத் தொழிலைத் தொடர்கிறார்கள், ஏனெனில் அவர்கள் வாழ்வாதாரத்திற்கு வேறு வழியில்லை. அரசாங்க ஆதரவு இருந்தால், இந்த தொன்மையான பாரம்பரியத் தொழிலை உயிர்ப்பிக்கலாம்.”
Also Read | தமிழகத்தில் அடுத்த ஆட்சி திமுக தலைமையில் அமைகிறதா? கருத்து கணிப்பின் முழு விவரம்
ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததற்கு முற்றிலும் மாறுபட்ட வகையில், இன்று பருத்தி புடவைகளை கைத்தறி நெசவு செய்யும் அவர்களின் கலைப் பணி நின்று விடுமோ என்று அவர்கள் அஞ்சுகின்றனர். ஒரு நூற்றாண்டின் கடைசி காலாண்டில், செயற்கை நுண்ணிழையால் தயாரிக்கப்பட்ட ஆடைகள், இயந்திர மயமாக்கல் போன்ற பல விஷயங்களால், நெசவுத் தறிகள் மற்றும் கைத்தறி ஆடைகளின் விற்பனை ஆகியவை கேள்விக்குறியாகிவிட்டது என்பதோடு, மக்களின் வாழ்வாதாரத்திற்கான நம்பிக்கையைத் தகர்த்துவிட்டது.
1990 களின் நடுப்பகுதி வரை, கூட்டுறவு அமைப்பின் ஒரு பகுதியாக, மாநில அரசு அவர்களுக்கு மூலப்பொருட்களை வழங்குவதோடு, நெய்து முடிக்கப்பட்ட புடவைகளை கொள்முதல் செய்ததையும் செளராஷ்டிரா நெசவாளர்கள் நினைவுகூர்கிறார்கள்.
ஆனால் அரசாங்கம் கைத்தறி நெசவாளர்களிடமிருந்து பொருட்களை வாங்குவதை நிறுத்தியது மட்டுமல்லாமல், இயந்திரத்தால் செய்யப்பட்ட புடவைகளையும் வாங்கத் தொடங்கியது, இதனால் தங்கள் அடிப்படை ஆதாஅம் ஆடிப் போனதாக வருந்துகின்றனர். நெசவாளர்களின் சமூகம் தற்போது தங்கள் மூலப்பொருள் தேவைக்காக தனியார் சப்ளையர்களை நம்பியுள்ளது, அவர்கள் மூலப்பொருளை விற்கிறார்கள், பின்னர் ஒரு கைத்தறி புடவையை நெய்வதற்கு 200 முதல் 250 ரூபாய் என்ற சொற்பத் தொகையை கூலியாக கொடுக்கின்றனர்.
Also Read | 99 SONGS திரைப்படத்தை தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மானை தூண்டியது மணிரத்தினமா?
கணேஷ், ராஜேஸ்வரி, கண்ணன் மற்றும் தனலட்சுமி ஆகிய நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் தங்கள் வீடுகளில் உள்ள தறிகளில் நெசவு நூற்கின்றனர். 1000 ரூபாய் அடக்க விலை ஆகும் ஒரு புடவையை தயாரிக்க அவர்கள் அனைவரும் கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் வேலை செய்கிறார்கள், இது இறுதியில் விற்கப்படுகிறது கடைகளில் இந்தப் புடவை 2500 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது.
தற்போதைய ஏற்பாட்டின் கீழ் இடைத்தரகர்களுக்கே விற்பனைத் தொகையில் பெரும் பங்கு செல்கிறது என்று நெசவாளர்கள் புலம்புகிறார்கள். நான்கு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பம் கடுமையாக உழைத்தால் ஒரு மாதத்திற்கு 8000 ரூபாய் சம்பாதிக்க முடியும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
நெசவாளர் குடும்பங்களின் முக்கிய கோரிக்கைகள் அவற்றின் தயாரிப்புகளுக்கான புவியியல் குறியீடு, உண்மையான கைத்தறி புடவைகளுக்கான அங்கீகாரம், நெசவாளர்களுக்கு குறைந்தபட்ச உத்தரவாதம் வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் இருந்து மதுரைக்கு குடிபெயர்ந்த தங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உதவி செய்வார் என்று இந்த சமூக மக்கள் நம்புகிறார்கள்.
வெள்ளிக்கிழமை, மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்தபோது, பிரதமர் நரேந்திர மோடியின் உரை, பிராந்தியத்தைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் கலாச்சார சின்னங்கள் பற்றியதாக இருந்தது. இது, கடந்த 400 ஆண்டுகளாக மதுரையில் வசிக்கும் சவுராஷ்டிரா மக்களுக்கு நம்பிக்கைக் கீற்றை கொடுத்துள்ளது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR