கலிஃபோர்னியாவில் இருக்கும் சான்டியாகோ ஸ்கூல் ஆஃப் மெடிசின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் வயதானவர்களின் மூளை செயல்பாட்டை அதிகரிப்பது குறித்த ஆய்வில் ஈடுபட்டனர். உடல் செயல்பாடு அறிவாற்றல் மற்றும் மூளையின் செயல்பாட்டுடன் நேரடியாக தொடர்பு இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், வயதானவர்கள் தினசரி உடற்பயிற்சி மற்றும் உடல் இயக்கம் சார்ந்த வேலைகளை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | கற்கண்டு சாப்பிட மட்டுமல்ல ‘கண் பார்வைக்கும்’ இனிப்பானது!


அவர்கள் நாள்தோறும் உடற்பயிற்சி செய்யும்போது மூளை சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்கும். அதனால் ஞாபகமறதி மற்றும் மூளைச்சோர்வு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளும் அளவு குறைவாக இருக்கும். ஆய்வில் பங்கேற்றவர்களில் 50 முதல் 74 வயதுக்குட்டபவர்கள் தினசரி உடற்பயிற்சி செய்யும்போது, அவர்களின் அன்றாட செயல்பாடு முந்தைய நிலையை விட மேம்பட்ட நிலையில் இருந்தது. கூடவே அவர்கள் சோர்வு இல்லாமல் இருந்ததுடன், ஞாபகதிறன் கூடிய நிலையை காண முடிந்ததாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.  


ALSO READ | Immunity Booster: நோய் எதிர்ப்பு சக்தி உணவு குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன!


தீர்க்க முடியாத நோய்கள் இருந்தவர்கள் மட்டுமே மற்றவர்களை நம்பியிருக்க வேண்டிய சூழல் இருந்துள்ளது. அவர்களின் உடல் ஒத்துழைப்பு இல்லாலை மற்றும் மன அழுத்தம், பயம் உள்ளிட்ட காரணிகளால் அவர்களால் தினசரி உடற்பயிற்சியில் திறம்பட ஈடுபட முடியாத நிலை இருந்துள்ளது. இளைஞர்களும் தினசரி உடற்பயிற்சி செய்வதை அன்றாட கடமையாக கருத வேண்டும் என தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், தினசரி உடற்பயிற்சியின் மூலம் மூளைக்கு கிடைக்கும் புத்துணர்ச்சி எவ்வுளவு காலம் ஒரே மாதிரியாக இருக்கும் என்பது போன்ற விவரங்கள் இன்னும் சேகரிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR