Indian Railways: Train டிக்கெட் விலை நாளை முதல் உயர்கிறதா? எவ்வளவு?
ஜனவரி 6 முதல் ரயில் பயணம் செய்வதற்கு சற்று கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். கோவிட் -19 தொற்றுநோயால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்களை விரைவில் மீண்டும் தொடங்குகிறது இந்திய ரயில்வே.
புதுடெல்லி: ஜனவரி 6 முதல் ரயில் பயணம் செய்வதற்கு சற்று கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். கோவிட் -19 தொற்றுநோயால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்களை விரைவில் மீண்டும் தொடங்குகிறது இந்திய ரயில்வே. இருப்பினும், ஜனவரி 6 முதல், பல ரயில்களின் கட்டணம் அதிகரிக்கப்படுகிறது. ரயில்களில் பயணிகளின் நெரிசலைக் குறைக்க வேண்டும் என்பதால் இருக்கைகளை முன்பதிவு செய்வது கட்டாயமாகும்.
ஆன்லைனிலோ (Online) அல்லது டிக்கெட் கவுண்டருக்கோ சென்று பயணச்சீட்டை வாங்கலாம். இந்திய ரயில்வேயின் புதிய வழிகாட்டுதல்களின்படி, ஒரு பயணி எவ்வளவு தொலைவு பயணம் செய்தாலும், முன்பதிவு செய்வது கட்டாயம் ஆகும். டிக்கெட் முன்பதிவு செய்யாமல் ரயில்நிலையத்திற்குள் நுழையவே முடியாது.
அனைத்து டிக்கெட்டுகளின் (Ticket) விலைகளிலும் முன்பதிவு கட்டணம் 15 ரூபாய் அதிகமாகிறது. ஜம்மு-காஷ்மீர், உதம்பூர் உட்பட பல இடங்களுக்கான ரயில் சேவைகளையும் இந்தியன் ரயில்வே தொடங்கியுள்ளது. பிப்ரவரி 1 முதல் இந்த ரயில்கள் இயக்கப்படும். பாட்னா, துர்க், வாரணாசி, அஜ்மீர் (Patna, Durg, Varanasi, Ajmer) மற்றும் புதுடெல்லி (New Delhi) செல்லும் பயணிகளுக்கு இந்த ரயில் சேவைகள் அதிக நன்மை அளிப்பதாக இருக்கும்.
Also Read | Kisan Vikas Patra: கணக்கு திறப்பு, முன்கூட்டியே மூடுவது, மாற்றுவது எப்படி?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR