கொரோனா வைரஸ் அடைகாக்கும் காலம் நீளுவதால் தொற்று அறிகுறிகள் தெரிய 8 நாட்கள் வரை ஆகலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகம் முழுவது தீவிரமாக பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமூக இடைவெளியையும், முகமூடி அணிவதையும் கடைபிடித்து வருகிறோம். இந்நிலையில், கொரோனா வைரஸ் அடைகாக்கும் காலம் நீளுவதால் தொற்று அறிகுறிகள் தெரிய 8 நாட்கள் வரை ஆகலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 


சயின்ஸ் அட்வான்ஸஸ் இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆராய்ச்சி, கோவிட் -19 இன் அடைகாக்கும் காலம்-பாதிக்கப்பட்ட நபர்கள் முதல் அறிகுறிகளைக் காட்டத் தொடங்கும் காலம்-எட்டு நாட்கள் வரை இருக்கலாம், இது முந்தைய மதிப்பீட்டை விட 5 நாட்கள் ஆகும். முன்னதாக வைரஸின் அடைகாக்கும் காலம் நான்கு அல்லது ஐந்து நாட்கள் என்று கூறிவந்தனர். ஆனால் தற்போது வைரஸின் அடைகாக்கும் காலம் 8 நாட்கள் வரை நீடிப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளை ஆராய்ச்சி செய்து விஞ்ஞானிகள் இத்தகைய முடிவை எடுத்துள்ளனர். 


அடைகாக்கும் காலம் என்பது கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு அதற்கான அறிகுறிகளை காட்டத் தொடங்கும் காலமாகும். மிக குறைந்த எண்ணிக்கையிலான மாதிரிகளையும், குறைந்த அளவிலான தரவுகளையும், பாதிப்படைந்தவர்களின் சுய அறிக்கைகள் அடிப்படையிலும் அடைகாக்கும் காலம் நான்கு அல்லது ஐந்து என கூறப்பட்டு வந்ததாக பீஜிங் சீன பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் சோங் யூ உள்ளிட்டவர்கள் கூறியுள்ளனர்.


ALSO READ | குடிப்பழக்கத்திற்கு சிகிச்சையளிக்கும் மருந்து கொரோனாவை குணப்படுத்தும்: ஆய்வு!


சோங் யூ மற்றும் சீனாவின் பீக்கிங் பல்கலைக்கழகத்தின் மற்ற விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, அடைகாக்கும் காலத்திற்கான தற்போதைய மதிப்பீடுகள் சுமார் ஐந்து நாட்கள் இருந்ததற்கான காரணம், அவை சிறிய மாதிரி அளவுகள், வரையறுக்கப்பட்ட தரவு மற்றும் சுய அறிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தன. நோயாளி அல்லது நேர்காணலின் நினைவகம் அல்லது தீர்ப்பால் இந்தத் தரவு பக்கச்சார்பாக இருக்கக்கூடும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.


இந்த ஆய்வில் இன்றுவரை அதிகபட்ச பங்கேற்பாளர்கள் அடங்குவர், அதில் அவர்கள் அடைகாக்கும் காலங்களை மதிப்பிடுவதற்கு குறைந்த விலை அணுகுமுறையை உருவாக்கி, வூஹானில் பயண வரலாறுகள் அல்லது வதிவிடத்தை அறிந்த கோவிட் -19 இன் 1,084 நோயாளிகளை ஆராய்ச்சி செய்துள்ளனர். அந்த நோயாளிகள் அனைவரும் கொரோனா வைரஸ் முதன்முதலாக தோன்றிய வுகான் நகருடன் பயண தொடர்பில் இருந்தவர்கள். அவர்களின் சராசரி அடைகாக்கும் காலம் என்பது 7.75 நாட்கள். 10 சதவீத நோயாளிகள் அடைகாக்கும் காலம் 14.28 நாட்கள் என கண்டறிந்துள்ளனர். 


அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் நிலையாகக் கொண்டுள்ள சுகாதார அதிகாரிகளுக்கு இந்த தகவல் பெரும் கவலையை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கூறியிருக்கின்றனர். இருந்தாலும் இந்த அணுகுமுறை பல அனுமானங்களை நம்பி உள்ளதாகவும், வைரஸ் மாற்றமடைந்துள்ள உலகின் பல்வேறு நிகழ்வுகளுக்கு இது எவ்விதத்திலும் பொருந்தாது எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளார்.