ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு முக்கிய அப்டேட்: அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுடன் நற்செய்தியைப் பகிர்ந்துள்ளார். அதன்படி தனது எக்ஸ் தளத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கான தகவல்களை பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். முதல்வர் தனது சமூக ஊடக செய்தியில், “ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உணவு தானியங்களைப் பெற்றனர்” என்று பதிவிட்டு இருந்தாரா. இந்த தானிய விநியோகம் ‘அன்ன சேவா சபத்’ பிரச்சாரத்தின் முதல் வாரத்தில் அசாம் அரசால் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் கம்ரூப், மஜூலி மற்றும் ஹோஜாய் மாவட்டங்களில் தானியங்களின் அதிகபட்ச சதவீதம் விநியோகிக்கப்பட்டது. இது மிகப்பெரிய சாதனை என்று முதல்வர் சர்மா தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது:
இரண்டு நாட்களுக்கு முன்பு, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மாநிலத்தின் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் (Ration Card Holders) 1 கிலோ தேநீர் 75 சதவீத தள்ளுபடியில் வழங்கப்படும் என்று ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இந்தத் தொகையை அனைத்து அட்டைதாரர்களுக்கும் மானியமாக மாநில அரசு வழங்கும். இந்த அறிவிப்பை 2024 ஆம் ஆண்டு முதல் அரசு அமல்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. இது தவிர, ரேஷன் கார்டுதாரர்கள் 5 கிலோ இலவச அரிசி, 5 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு மற்றும் பிற திட்டங்களின் பலன்களையும் தொடர்ந்து பெறுவார்கள் என்றும் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார். இந்த ஆண்டு அசாமின் தேயிலை உற்பத்தி 200 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளதாகவும், எனவே தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் ஊழியர்களின் உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.



மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்.. ரயில்வே வெளியிட்ட மாஸ் டூர் பேக்கேஜ்


இந்த வழியில் திட்டத்திற்கு விண்ணப்பிக்கவும், கண்டறியவும்:
நீங்களும் அசாம் ரேஷன் கார்டு திட்டத்திற்கு (Assam Ration Card) விண்ணப்பிக்க விரும்பினால், இந்த தகுதி அவசியம். அசாம் மாநிலத்தின் அசல் குடியிருப்புச் சான்றிதழ் உங்களிடம் இருக்க வேண்டும். இதனுடன், விண்ணப்பதாரரிடம் அவரது குடும்பத் தலைவரின் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். இதற்காக, விரிவான விவரங்களையும் நிரப்ப வேண்டும் மற்றும் விண்ணப்பதாரர் ஏதேனும் வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும். இதனுடன், உங்கள் குடும்பத்தின் வருமானச் சான்றிதழையும் வைத்திருப்பது முக்கியம். இந்தத் திட்டத்திற்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால், உங்கள் அருகிலுள்ள FCSCA அலுவலகத்திற்குச் சென்று, அங்கிருந்து ரேஷன் கார்டு படிவத்தைப் பெறவும். அதன் பிறகு, இந்த படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.


இதன் மூலம், நீங்கள் AAY (அந்தியோதயா அன்ன யோஜனா) APL (வறுமைக் கோட்டிற்கு மேல்), BPL (வறுமைக் கோட்டிற்கு கீழே) அல்லது PDS/TPDS இன் கீழ் அஸ்ஸாம் மாநிலத்தில் பயனாளியாக இருந்தால் அல்லது அதற்கு விண்ணப்பிக்க விரும்பினால், மேலும் தகவலுக்கு நீங்கள் https://www. https://fcsca.assam.gov.in/information-services/detail/how-to-apply-for-ration-cards ஐப் பார்வையிடவும். இது தொடர்பான விரிவான தகவல்களை இங்கே பெறலாம்.


மேலும் படிக்க | EPFO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ