தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அப்டேட்: தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பான இ.பி.எப். (EPFO) அலுவலகம், கடந்த செப்டம்பர் மாதத்தில் 17.21 லட்சம் உறுப்பினர்களை இணைத்துள்ளதாக, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவல் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் நேற்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், செப்டம்பரில் 21,475 புதிய உறுப்பினர்கள் இபிஎஃப்ஓவில் இணைந்துள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், ஆண்டு அடிப்படையில், செப்டம்பர் 2022 உடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு இதே மாதத்தில் 38,262 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் சுமார் 8.92 லட்சம் புதிய உறுப்பினர்கள் EPFO ( Employees' Provident Fund Organisation) திட்டங்களில் இணைந்துள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் (Union Labour Ministry) தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த புதிய உறுப்பினர்களில் 58.92 சதவீதம் பேர் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள். தொழிலாளர் தொகுப்பில் ஈடுபட்டுள்ள உறுப்பினர்களில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் இருப்பதை இது காட்டுகிறது. இவர்களில் பலர் முதல் முறையாக வேலை கிடைத்தவர்கள்.
மேலும் படிக்க | மாத சம்பளம் வாங்குபவர்கள் PF கணக்கில் இருக்கும் பணத்தை சரி பார்ப்பது எப்படி?
11.93 லட்சம் உறுப்பினர்கள் வெளியேரினர்:
இதனிடையே தற்போது கிட்டத்தட்ட 11.93 லட்சம் உறுப்பினர்கள் வெளியேறியபோதும், பெரும்பாலானோர் தாங்கள் வேலை செய்யும் நிறுவனங்களை மாற்றிக்கொண்டு, மீண்டும் அவர்கள் பி.எப்.,பில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். அறிக்கையின்படி, இந்த உறுப்பினர்கள் தங்கள் வேலையை மாற்றிக்கொண்டு, EPFO இன் கீழ் உள்ள நிறுவனங்களில் மீண்டும் சேர்ந்தனர். இந்த நபர்கள் இறுதித் தீர்வுக்கு விண்ணப்பிப்பதற்குப் பதிலாக, தங்கள் EPF (தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு) புதிய நிறுவனத்திற்கு மாற்றத் தேர்வு செய்தனர்.
8.92 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்:
தரவுகளின்படி, செப்டம்பர் மாதத்தில் 3.67 லட்சம் உறுப்பினர்கள் EPFO இல் (Employees' Provident Fund Organisation) இருந்து வெளியேறியுள்ளனர். இது முந்தைய மாதத்தை விட 12.17 சதவீதம் குறைவாகும். EPFO இல் இருந்து வெளியேறும் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஜூன் 2023 முதல் குறைகிறது. மேலும் இந்த மாதத்தில் 8.92 லட்சம் புதிய உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் புதிதாக சேர்ந்துள்ள உறுப்பினர்களில், 2.26 லட்சம் பேர் பெண்கள். இம்மாதத்தில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை, 3.30 லட்சமாக உயர்ந்துள்ளது.
முதலிடத்தில் எந்த மாநிலம்:
மாநில வாரியான 'பேரோல்' தரவுகளைப் பார்த்தால், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் மற்றும் ஹரியானாவில் அதிகபட்ச உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். சேர்க்கப்பட்ட உறுப்பினர்களின் நிகர எண்ணிக்கையில் அவர்களின் பங்கு 57.42 சதவீதமாகும். இந்த மாநிலங்கள் 9.88 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்துள்ளன. புள்ளிவிவரங்களின்படி, சர்க்கரை தொழில், கொரியர் சேவைகள், இரும்பு மற்றும் எஃகு, மருத்துவமனைகள், டிராவல்ஸ் ஏஜென்சிகள் போன்றவற்றில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. தரவு உருவாக்கம் ஒரு தொடர்ச்சியான செயல்முறை என்பதால், பணியாளர் பதிவுகள் தொடர்ந்து புதுப்பிக்கப்படும். எனவே, இந்த புள்ளிவிவரங்கள் தற்காலிகமானவை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ரயில் டிக்கெட் கேன்சல் பண்ணுனா எவ்ளோ பணம் கிடைக்கும்? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ