நம்மில் சிலருக்கு பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்களை சேகரிப்பதில் ஆர்வம் அதிகம் இருக்கும். அவர்கள் நல்ல லாபத்தைப் பெற சரியான தளத்தில் அதனை விற்கலாம். சமீபத்தில் அரிய நாணயம் ஒன்று ரூ .10 கோடிக்கு ஆன்லைன் ஏலத்தில் விற்கப்பட்டது. முதலில் இது நம்பமுடியாததாக செய்தியாகத் தோன்றலாம் ஆனால் இந்த குறிப்பிட்ட நாணயத்திற்கு கோடிக் கணக்கில் பணம் கிடைக்க காரணம் உண்டு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஒரு ரூபாய் நாணயம் சமீபத்தில் ரூ.10 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டது, ஏனெனில், இந்த அரிய நாணயம் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் 1885 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இது லாட்டரி சீட்டுக்கு குறையாமல் பணத்தை வாரித் தந்துள்ளது.


எனவே உங்கள் வீட்டில் உள்ள பழைய நாணயங்களை ஆராயவும். அதில் அரிய நாணயம் இருந்தால், உங்களுக்கும் ஏராளமான பணம் கிடைக்கும். மேலும் பழைய நாணயங்கள் மற்றும் நாணயங்களைச் சேகரிப்பதில் ஏதேனும் ஆராய்ச்சி செய்யலாம். ஏனெனில் ஒரு அரிய நாணயம் உங்களை ஓர் இரவில் கோடீஸ்வரர் ஆக்கலாம்.


ALSO READ | Old is Gold: இந்த ‘25’ பைசா உங்களிடம் இருந்தால், ₹1.5 லட்சம் ரூபாய் கிடைக்கும்


பழைய மற்றும் அரிய நாணயங்களை விற்கும் பல வலைத்தளங்கள் உள்ளன. இந்த வலைத்தளங்களில் ஒன்று CoinBazar ஆகும், அங்கு பயனர்கள் பெயர், முகவரி, மின்னஞ்சல், தொலைபேசி எண் போன்ற அடிப்படை விவரங்களை உள்ளிட்டு பதிவு செய்யலாம். அதில தங்களிடம் உள்ள அரிய வகை காயின்கள் அல்லது ரூபாய் நோட்டுகளை விற்று எளிதில் பணக்காரர் ஆகலாம். 


முன்னதாக ஜூன் மாதம், 1933 ஆண்டின் அமெரிக்க நாணயம் ஒன்று, நியூயார்க்கில் நடந்த ஏலத்தில் 18.9 மில்லியன் டாலர்களுக்கு (அதாவது ரூ.138 கோடி) விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


ALSO READ | பென்ஷன் இல்லை என டென்ஷன் எதற்கு; ₹10,000 ஓய்வூதியம் தரும் அசத்தல் திட்டம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR